விதையில் அடிப்பட்டால், வயிற்றில் மிகுந்த வலி ஏற்படுவது ஏன்?

12-1481536536-5whygettingkickedintheballscausespainintheabdomenஆண்களுக்கு விதை பையில் அடிபட்டால் வயிற்றில் மிகுந்த வலி ஏற்படுவதன் காரணம் என்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

விதைகள் ஆண்களின் வயிறு மற்றும் சிறுநீரக பகுதியின் அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு உடல் உறுப்பு. நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் இணைப்பு கொண்டுள்ள பகுதி தான் விதை. ஒவ்வொரு முறையும் தெரிந்தோ, தெரியாமலோ விதை பையில் அடி அல்லது சிறித அதிகமாக அழுத்தம் ஏற்பட்டால் கூட அடிவயிறு வரை வலி பின்னி எடுக்கும். விதை பையில் அடிப்பட்டு மயக்கம் அடையும் நிலைக்கு சென்ற ஆண்கள் கூட இருக்கிறார்கள்.

[pro_ad_display_adzone id="52683"]

இனப்பின்னல்! விதை பையில் யாரேனும் அடித்தாலோ, கசக்கினலோ, தெரியாமல் விபத்தாக ஏதேனும் நடந்தாலும் கூட அதன் வலி விதையில் இருந்து வயிறு வரை பயணிக்கிறது. இது இனப்பின்னல் எனப்படும் “Spermatic Plexus” இரண்டு விதையில் இருக்கும் அதிமுக்கிய நரம்பு மூலமாக பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வலி! விதை பையில் அடிப்படுவது = விதையில் வலி + வயிற்று வலி + குமட்டல் / வாந்தி / மயக்கத்திற்கு சமம்.

துணுக்கு #1 உலகின் மிக பெரிய உயிரினமான திமிங்கிலத்திற்கு அதன் விதைகள் 500 கிலோ எடை வரை இருக்கும் என கூறப்படுகிறது.

துணுக்கு #2 விதையில் அடிப்படுவதன் காரணமாக ஒரு ஆணின் கருவளம் மிகுதியாக பாதிக்கப்படலாம். பலமான அடி காரணமாக விதை நீக்கப்படும் அபாயம் கூற நேரிடலாம்.

[pro_ad_display_adzone id="52683"]

துணுக்கு #3 நிலைகுலைந்து போக செய்ய, எதிர் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே உலகின் பல பகுதிகளில் ஆண்களை விதை பகுதியில் அடிக்கிறார்கள்.