Home ஆண்கள் விந்து பட்டால் உடலில் விந்துநீர் ஒவ்வாமையால் தோன்றும் எதிர்விளைவுகள்

விந்து பட்டால் உடலில் விந்துநீர் ஒவ்வாமையால் தோன்றும் எதிர்விளைவுகள்

116

விந்து ஒவ்வாமை (அல்லது விந்து நீரின் அதிக உணர்திறன்) என்பது மனித விந்துவில் உள்ள புரதத்திற்கு ஒருவரின் உடலில் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் நிலையாகும். இதனை விந்தணு ஒவ்வாமை என்றும் குறிப்பிடுவர். இது ஒரு அரிய பிரச்சனையாகும். இந்தப் பிரச்சனை பெரும்பாலும் பெண்களுக்கே கணப்படுகிறது.

அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் (Symptoms and signs)
தோலில் விந்து பட்ட இடங்களில் நமைச்சல், எரிச்சல், சிவத்தல் போன்றவை விந்து ஒவ்வாமையின் சில அறிகுறிகளாகும். வழக்கமாக இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் இந்த அறிகுறிகள் ஏற்படும்.

சிலருக்கு, பொதுவான ஒவ்வாமை

விந்து ஒவ்வாமை என்பது மிக அரிய ஒரு பிரச்சனை. உடலுறவுக்குப் பிறகு நமைச்சல் அல்லது சிவத்தல் போன்ற அறிகுறிகள் பெண்ணுறுப்பில் நோய்த்தொற்று இருப்பதன் அடையாளங்களாகவே இருக்கக்கூடும். உடலுறவின்போது ஆணுறையைப் பயன்படுத்தினால், அறிகுறிகளுக்குக் காரணம் விந்து ஒவ்வாமையா அல்லது பெண்ணுறுப்பின் நோய்த்தொற்றா என்பதைக் கண்டறிந்துகொள்ளலாம். ஆணுறையைப் பயன்படுத்தாமல் உடலுறவு கொள்ளும்போது மட்டுமே அறிகுறிகள் தென்படுகிறது, ஆணுறையைப் பயன்படுத்தினால் இல்லை என்றால், அதற்கு விந்து ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கலாம்.

ஒரு பெண் முதல் முறையாக உடலுறவு கொள்ளும்போது அல்லது தனக்கு விந்து ஒவ்வாமை ஏற்படாத வேறு நபர்களுடன் உடலுறவு கொள்ளும்போது விந்து ஒவ்வாமை ஏற்படுவதைக் கவனிக்கலாம். ஒருவருடன் உடலுறவு கொள்ளும்போது விந்து ஒவ்வாமை ஏற்படலாம் ஆனால் வேறு நபருடன் உடலுறவு கொள்ளும்போது விந்து ஒவ்வாமை ஏற்படாமல் இருக்கலாம். நீண்ட நாள் துணைவருடன் உடலுறவு கொள்ளும்போது திடீரென்றும் ஏற்படலாம்.

நிர்வகித்தல் (Management)
விந்து ஒவ்வாமை அறிகுறிகள் அல்லது அடையாளங்கள் இருந்தால், மருத்துவரைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறவும். உங்களுக்கு விந்து ஒவ்வாமை உள்ளதா என்று கண்டறிய உங்கள் மருத்துவர் உதவுவார். உங்கள் மருத்துவர் ஒவ்வாமைக்கான சோதனைகளைச் செய்யலாம். இதைச் செய்வதற்கு மருத்துவர் உங்கள் துணைவரின் ஒரு துளி விந்தை எடுத்து ஓர் ஊசியின் மூலம் உங்கள் தோலில் தேய்ப்பார், அதன் பிறகு தோலில் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படுகிறதா என்று கண்டறியப்படும்.

ஆன்டிஹிஸ்டமைன்கள்: இவை ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளாகும். விந்து ஒவ்வாமைக்கு சிகிச்சையளிக்க இவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்

ஆணுறைகள்: விந்து உங்கள் மேல் படுவதைத் தடுக்க ஆணுறைகளைப் பயன்படுத்துமாறு மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

உணர்திறனைக் குறைக்கும் சிகிச்சை: அறிகுறிகளைத் தணிப்பதற்காக, ஒவ்வாமை சிகிச்சை நிபுணர் உங்களுக்கு உணர்திறனைக் குறைக்கும் சிகிச்சை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கலாம்.

குழந்தையின்மைப் பிரச்சனையை நிர்வகித்தல்: பொதுவாக விந்து ஒவ்வாமையால் மலட்டுத்தன்மைப் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. ஆனால் இதன் அறிகுறிகள் பெண்கள் கர்ப்பமடைவதைக் கடினமாக்கக்கூடும். உங்கள் துணைவரின் விந்துக்கு அதிகம் எதிர்விளைவு ஏற்படாதபடி செய்யக்கூடிய உணர்திறன் குறைப்பு சிகிச்சை எடுத்துக்கொண்டால் நீங்கள் இயற்கையாக கர்ப்பமடைய அது உதவியாக இருக்கும். விந்துவால் எதிர்விளைவுகள் ஏற்படும் பிரச்சனை கடுமையாக இருந்தால் அல்லது உயிருக்கே அச்சுறுத்தலாக இருந்தால், விந்துவிலிருந்து புரதங்கள் கழுவி அகற்றப்பட்ட பிறகு அந்த விந்துவை பெண்ணுறுப்பில் செயற்கை முறையில் செலுத்தும் முறை பயன்படுத்தப்படலாம் அல்லது செயற்கைக் கருத்தரிப்பு முறை பரிந்துரைக்கப்படலாம்.