Home பெண்கள் பெண்குறி அந்தரங்க பகுதியில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் மருந்து

அந்தரங்க பகுதியில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் மருந்து

26

பெண்களின் உடலிலேயே அந்தரங்கப் பகுதி தான் மிகவும் சென்சிடிவ்வானது. மேலும் இப்பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். அதற்காக இப்பகுதிக்கு சோப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்கள், அந்தரங்கப் பகுதியை கடுமையாக பாதித்து, நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.

எனவே அந்தரங்க பகுதியில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க, வாசனைமிக்க சோப்புகளைப் பயன்படுத்தாமல், இயற்கைப் பொருட்களால் அந்தரங்க பகுதியை சுத்தம் செய்வதே நல்லது. இங்கு பெண்களின் அந்தரங்கப் பகுதியில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் ஓர் அற்புத பொருள் குறித்தும், எப்படி பயன்படுத்துவது என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

எலுமிச்சை மற்றும் அதன் இலைகள் எலுமிச்சையின் இலை மற்றும் பழத்தில் லெமோனின் என்னும் பொருள் உள்ளது. இது பெண்களின் அந்தரங்க உறுப்பைத் தாக்கும் தொற்றுக்கிருமிகளின் தாக்கத்தைக் குறைத்து, யோனிப் பகுதியில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். முக்கியமாக இது யோனியில் pH அளவை சீராக பராமரித்து, யோனிப் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளும்

தேவையான பொருட்கள்: எலுமிச்சை இலைகள் – 10 தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை: எலுமிச்சை இலைகளை நன்கு நீரில் கழுவி, நன்கு அரைத்து, ஒரு டம்ளர் நீர் சேர்த்து கலந்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, நீர் பச்சையானதும் இறக்கி குளிர வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை: தயாரித்து வைத்துள்ள எலுமிச்சை நீரைக் கொண்டு தினமும் அந்தரங்கப் பகுதியைக் கழுவி, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இதனால் யோனிப் பகுதியில் உள்ள தொற்றுகள் நீங்குவதோடு, துர்நாற்றமும் போய்விடும். குறிப்பு எலுமிச்சை இலை நீரை சூடாக அந்தரங்க பகுதியில் பயன்படுத்த வேண்டாம். ஒருவேளை உங்கள் யோனிப் பகுதி மிகவும் சென்ஸிடிவ்வானது என்றால், மருத்துவரை அணுகி, அவரிடம் கேட்டுக் கொண்டு பின் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், யோனிப் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்