Home உறவு-காதல் இந்த 8 பழக்கங்கள் நீங்கள் ஒரு யூஸ்லெஸ் ஹஸ்பன்ட் என்பதற்கான அடையாளமாம்!

இந்த 8 பழக்கங்கள் நீங்கள் ஒரு யூஸ்லெஸ் ஹஸ்பன்ட் என்பதற்கான அடையாளமாம்!

24

சில சமயங்களில் நாம் நல்லது தான் செய்கிறோம் என நினைத்து செய்யும் விஷயங்கள் கூட, ஒரு நபரை காயப்படுத்தலாம். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் செய்வது போல. நல்ல சில குணங்கள் இப்படி ஒரு தாக்கத்தை உண்டாக்கும் எனில், கெட்ட குணங்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஒரு உறவில் ஏற்படுத்தும்? முக்கியமாக கணவனாக இருக்கும் ஆண்கள் ஒருசில தவறுகளை செய்யவே கூடாது, அவை மனைவி நீங்கள் ஒரு யூஸ்லெஸ் ஹஸ்பன்ட் என எண்ண காரணமாகிவிடும்…

பழக்கம் #1 பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றும் கணவன்மார்கள். இந்த போலி சத்தியங்கள் தான் உறவில் விரிசல் விழ முக்கிய காரணம் என்றும் கூறுகின்றனர். இதனால் உங்கள் மனைவிக்கு உங்கள் மீதி இருக்கும் நம்பிக்கை குறையும்.

பழக்கம் #2 பிசியாக இருப்பது போலவே எப்போதும் காண்பித்துக் கொள்வது. இதனால், அவரது விருப்பமும், உங்கள் மீதான ஈர்ப்பும் குறையும், திசை மாறும்.

பழக்கம் #3 அடிக்கடி அவரை சந்தேக பார்வையில் பார்ப்பது.

பழக்கம் #4 மனைவி நல்ல விஷயங்கள் செய்யும் போதிலும் கூட, அதை பாராட்டாமல் அமைதி காப்பது.

பழக்கம் #5 மற்றொருவரிடம் உள்ள குணங்களை சுட்டிக்காட்டி, மனைவியை இது ஏன் உன்னிடம் இல்லை, நீ ஏன் இப்படி இல்லை என ஒப்பிடுவது.

பழக்கம் #6 சிக்கனம் என்ற பெயரில் கஞ்சத்தனம் காட்டுவது. செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு கேட்பது.

பழக்கம் #7 மற்றவர்கள் முன்னிலையில் அவர் மீது குற்றம் கூறுவது, பழிப் போடுவது.

பழக்கம் #8 ஒழுக்கம் கற்பிக்கிறேன் என ஒரு கடுமையான வாத்தியார் போல நடந்து கொள்வது. ஒழுக்கம் முக்கியம் தான், அதற்காக கொடுமைப்படுத்த கூடாது.