Home உறவு-காதல் உங்கள் பார்ட்னருடன் சேர்ந்து வாழ உங்களை தடுக்கும் 6 விஷயங்கள்!!

உங்கள் பார்ட்னருடன் சேர்ந்து வாழ உங்களை தடுக்கும் 6 விஷயங்கள்!!

29

நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்த துணையுடன் உறவைத் தொடர ஏதோ ஒன்று உங்களை தடுப்பதாக உணர்கின்றீர்களா? மேலே கூறிய கேள்விகளுக்கு உங்களுடைய பதில் ஆம் எனில், இந்தக் கட்டுரை உங்களுக்கானது.

உங்களுடைய வாழ்வில் நீங்கள் ஒரு சரியான வாழ்க்கைத் துணையை கண்ணுற்ற தருணம் முதல் உங்களுடைய வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கலாம். எனினும் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை கண்டெடுப்பது ஒன்றும் எளிதான விஷயம் அல்ல. அவ்வாறு ஒரு சரியான வாழ்க்கைத் துணை உங்களுக்கு அமைந்து விட்டதெனில், நீங்கள் ஒன்று அதிர்ஷடசாலியாக இருக்க வேண்டும். அல்லது அதி பயங்கர திறமைசாலியாக இருக்க வேண்டும். எனினும் ஒரு வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு நீடித்த உறவு அமைய வேண்டுமெனில், உங்களுடைய முயற்சிகள் பலனளிக்க வேண்டும். அதனுடன் உங்களுக்கு சிறிது அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும்.

இங்கே நாங்கள் சில சுவாரஸ்யமான அறிகுறிகளை பட்டியலிடப்பட்டுள்ளோம். இந்த அறிகுறிகள் நீங்கள் உங்கள் துணையுடன் நீடித்த உறவில் தொடர்ந்து இருக்க பயப்படுகிறீர்கள் என்பதை நிரூபிக்க கூடியது. உங்களுக்கு உள்ளே இந்த அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை கண்டறிந்து துடைத்து எறியுங்கள். ஏனெனில் இவை உங்களுடைய நீடித்த உறவை அரிக்கும் கரையான்கள் போன்றவை.

துரத்தும் பழைய நினைவுகள்: நீங்கள் தற்பொழுது உள்ள உங்களுடைய துணையுடனான உறவில் எவ்வுளவு உறுதியாக இருந்தாலும், உங்களுடைய தற்பொழுதைய துணையுடன் எவ்வுளவுதான் மகிழ்ச்சியாக இருந்தாலும், உங்களுடைய கடந்த கால நினைவுகள் உங்களை விடாமல் துரத்தலாம். கடந்த கால நினைவுகள் உங்களுடைய நிகழ்காலத்தை நரகமாக மாற்றி விடலாம். எனவே உங்களுடைய கசப்பான கடந்த கால நினைவுகளை மறக்க முயற்சி செய்யுங்கள். மறதி ஆண்டவன் மனிதருக்கு கொடுத்த ஒரு அருமருந்தாகும்.

நம்பிக்கையின்மை உங்களுடைய அசிங்கமான மற்றும் கசப்பான கடந்தகால துணையுடனான பிரச்சனைகள் உங்களிடம் நம்பிக்கையின்மையை விதைத்து விடும். உங்களுக்கு கடந்த கால பிரச்சனைகள் ஏதேனும் இல்லையெனில், உங்களிடம் கண்டிப்பாக நம்பிக்கையின்மை பிரச்சனை எழாது. எனவே நீங்கள் உங்களுடைய கடந்த கால நினைவுகளை துடைத்து எறிந்து விட்டு, தற்பொழுது உள்ள உங்களுடைய துணையுடன் நம்பிக்கையுடன் தொடர்ந்து பழகுங்கள். நம்பிக்கை மட்டுமே மாற்றத்தை கொண்டு வரும்.

சிக்கிக்கொண்டதாக ஒரு நினைப்பு இது உறவில் உள்ள அனைவருக்கும் தோன்றும் ஒரு நினைப்பாகும். துணையுடன் ஒரு நீடித்த உறவில் உள்ள ஒருவர் தன்னுடைய துணை தன்னை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும், எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொண்டு விளக்கம் கேட்பதாகவும் நினைக்கலாம். உங்களுக்கு இவ்வாறு நேரும் பொழுது, துணையுடனான உங்களுடைய உறவை எண்ணிப்பாருங்கள். மனக்கசப்பு மறைந்து போய்விடும்.

உறவு முறிந்து போகுமோ என்கிற பயம் : ஒருவேளை உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவருடன் உறவு ஏற்பட்டு, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது, துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு, உறவு முறித்து விடுமோ என்கிற பயம், உங்களை ஒரு உறவில் ஈடுபட விடாமல் தடுக்கலாம். இதே போன்ற எண்ணம் உங்களுடன் உறவில் இறங்கத் துடிக்கும் உங்களுடைய துணைக்கும் இருக்கலாம். இதை சரி செய்ய உங்களுடைய துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். உங்களுடைய எண்ணங்களை, உங்களுடைய துணைக்கு புரிய வைத்திடுங்கள்.

துணையுடன் உங்களுக்கான நேரம் : நீங்கள் மற்றவர்களுடன் உங்களுடைய தனிப்பட்ட நேரத்தை பகிர்ந்து கொள்ள பயப்படுகின்றீர்களா? இது கண்டிப்பாக உங்களுடைய உறவை பாதிக்கும். நீடித்த உறவுக்கு துணையுடனான உங்களூடைய தனிப்பட்ட நேரம் மிகவும் முக்கியமானது. எனவே இதை எப்பாடு பட்டாவது சரி செய்யுங்கள். ஏனெனில் இது உங்களிடம் பிற பிரச்சனைகளை கண்டிப்பாக உருவாக்கும்.

சமூக வாழ்க்கையைப் பற்றிய பயம் இது நாம் அனைவருக்கும் இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தலாலும். நீங்கள் ஒரு நீடித்த உறவு முறையில் இருக்கும் பொழுது, எதிர் பாலின நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவது, அங்கு இங்கு செல்வது போன்ற வாய்ப்புகள் தடுத்து நிறுத்தப்படும். எனவே, இந்த கட்டுப்பாடுகள் கூட உங்களுடைய உறவை பாதிக்கக்கூடும். மேலே கூறியவை சில காரணங்கள் மட்டுமே. இவை அனைத்து கண்டிப்பாக் உங்களுடைய உறவை பாதிக்கும். இதைத் தவிர்த்து உங்களிடம் ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.