Home உறவு-காதல் மனைவி எப்போதும் உங்களோடு நெருக்கமாக இருக்க வேண்டுமா? இந்த 8 விஷயம் கத்துக்குங்க!

மனைவி எப்போதும் உங்களோடு நெருக்கமாக இருக்க வேண்டுமா? இந்த 8 விஷயம் கத்துக்குங்க!

45

downloadஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். ஆனால், காதலும், நெருக்கமும் வாழ்நாள் முழுக்க வேண்டும் என்ற ஆசை எந்த கணவனுக்கு தான் இருக்காது. ஆனால், அதற்காக என்னென்ன முயற்சிகள் நீங்கள் எடுத்தீர்கள், என்னென்னவெல்லாம் செய்தீர்கள் என்பது தான் கேள்வியே.

ஆசை பட்டால் மட்டும் போதுமா? முயற்சிகள், செயல்கள் வேண்டாமா? அடிக்காமலேயே மாநிலத்தில் முதல் மாணவன் ஆக முடியுமா என்ன? இல்லறம் என்பதும் பெரிய கல்வி / படிப்பு தான். அதில் நீங்கள் பயிற்சி செய்யாமல், அப்டேட் ஆகாமல் இருந்தால் சிலபல பிரச்சனைகளை எதிர்கொள்ள தான் வேண்டும். எனவே, மனைவி எப்போதும் உங்களோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் இந்த 10 விஷயம் கத்துக்குங்க…

அச்சமற்ற சூழல்! உங்களுடன் இருக்கும் நேரங்களில் அவர் அச்சமற்று இருக்க வேண்டும். அவரிடம் உங்கள் ஆதிக்கம், கோபத்தை செலுத்தி அவரை அடிமை போல நடத்தக் கூடாது.

உணர்வுகள்! உணர்வுகள் வேறு, உண்மைகள் வேறு என்பதை புரிய வைக்க வேண்டும். சில உண்மைகள் கசக்க தான் செய்யும். ஆனால், அதை புரிந்துக் கொள்ள வேண்டுமே தவிர, உணர்வு ரீதியாக பாதிப்படையும் படி செய்ய கூடாது.

தொடர்பு! உங்கள் வீட்டில் மட்டும் இன்றி, எல்லா இடத்திலும், எல்லா சூழலிலும் உங்கள இருவர் மத்தியிலான நெருக்கம், அன்பு, காதல் ஒரே மாதரியாக இருக்க வேண்டும். உங்கள வீட்டில் ஒரு மாதிரி, மாமியார் வீட்டில் ஒருமாதிரி, நண்பர், உறவினர் வீட்டிற்கு சென்றால் ஒரு மாதிரி அவரை மாற்றி மாற்றி ட்ரீட் செய்ய கூடாது.

இரக்கம்! பெண் என்ற ரீதியாக மட்டுமின்றி, உங்களுக்காக வாழும் அந்த நபரின் மீது உங்களுக்கு அதிக இரக்கம் இருக்க வேண்டும். அவரது மனநிலை, உடல்நிலை பாராமல் நடந்துக் கொள்ள கூடாது.

நாம்! நான், நீ, என் என்னது, உன்னது என்பதை தாண்டி அனைத்திலும் நாம் என்ற சொல் இருக்க வேண்டும். அவர் வேலையாக இருப்பினும், உங்களால் முடிந்த ஆலோசனை, உதவிகள் செய்ய வேண்டும்.

மருந்து! உங்கள் துணைக்கு ஏற்படும் காயத்திற்கு நீங்கள் மருந்தாக இருக்க வேண்டுமே தவிர, நீங்களே அந்த காயமாக இருக்க கூடாது.

வேறுபாடுகள்! எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி இருக்க முடியாது. ஆகவே, உங்களுக்கும் வேறுபாடும் விஷயங்கள் என்னென்ன என்று தெரிந்துக் கொள்ளுங்கள். அதை புரிந்து நடந்துக் கொள்ளுங்கள். இது, நெருக்கத்தை அதிகரிக்கும்.

கேள்விகள்! உங்கள் துணை பற்றி ஒரு விஷயம் தெரியவில்லை எனில், அவரிடமே கேள்விக் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அதைவிட்டு சந்தேகப்பட்டு, மனதை குழப்பிக் கொண்டு, இல்லறத்தை சீர்குலைந்து போக செய்ய வேண்டாம்.