Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உயற்பயிற்சி மட்டும் தொப்பையைக் குறைக்காது.

உயற்பயிற்சி மட்டும் தொப்பையைக் குறைக்காது.

38

முன்பை விடப் பலரும் இன்று அதிகளவு ஜிம் சென்று வருகின்றனர். உடற்பயிற்சி செய்து தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறைந்து விடுமா?

உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும். பலரும் உடற்பயிற்சி தொப்பையைக் குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் நன்றாகப் பசியெடுக்கும்,அதனால் அதிகம் சாப்பிடுவார்கள். இதனால் உடல் எடை குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல.

உடற்பயிற்சி ஜீரண மண்டலத்தைத் தூண்டி விடும், இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள். உடற்பயிற்சி நல்ல விளைவுகளைத் தருகிறது. அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் மனநலத்திற்கும் நல்லதே.

தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன? உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உணவை எடுத்துக் கொண்டால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா? நடைப்பயிற்சி, உடற்பயிற்சி இதையெல்லாம் பலரும் கடமைக்கெனச் செய்கிறார்கள். இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.

வாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது. உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி. நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும், பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.

உடலுக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும். இன்றைய குழந்தைகளும் அதிகப் பருமனாகி வருகிறார்கள். அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.

உடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. மிக அவசியமானதும் கூட! ஆனால் தொப்பையைக் கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல! உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவதே ஒரே வழி.