Home பெண்கள் உடல் கட்டுப்பாடு என்ன செய்தும் உடல் எடை குறையவில்லையா? அப்ப இது தான் காரணமாக இருக்கும்!

என்ன செய்தும் உடல் எடை குறையவில்லையா? அப்ப இது தான் காரணமாக இருக்கும்!

27

என்ன செய்தும் சிலருக்கு உடல் எடை குறைவதில்லை என்ற கவலை இருக்கும். அப்படி என்றால் அவர்களுக்கு என்ன பிரச்னை, அதற்கு தீர்வு என்ன என்பதை பார்ப்போம்.

கிராமத்தில் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து தோட்டத்திற்கு சென்று நீர்பாய்ச்சுவது, கடும் வெயில் வரை களை வெட்டுவது என விவசாய வேலைகளை அதிகம் செய்வார்கள். இதனால் உடலில் அதிக அளவு வியர்வை வெளியேறி, அவர்கள் உடல் ஆரோக்யமாக இருக்கும். இதனால் கிராமத்தில் பெரும்பாலானவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்னை இருப்பதில்லை.

ஆனால் நகரங்களில் கம்ப்யூட்டரை அதிகம் பயன்படுத்தி வேலை செய்து பழகியதால், பலருக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்னை ஏற்படுகிறது. இதனால் உடல் எடையை குறைக்க அவர்கள் ஜிம்மிற்கு சென்று தீவிர பயிற்சி மேற்கொள்கிறார்கள். அதேபோல் டயட்டையும் கடைபிடிக்கிறார்கள். ஆனால் இதில் சிலருக்கு உடல் எடை கட்டுக்கோப்பாக மாறி சக்சஸ் ஆகிறது. ஆனால் பலருக்கு உடல் எடை குறைவது இல்லை இதற்கு காரணம் அவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சியில் மேற்கொள்ளும் இந்த தவறுகள் முக்கிய காரணமாக இருக்கலாம். அவற்றை இப்போது பார்ப்போம்.

டயட்டை கடைபிடிக்கும் போது நாம் கண்டிப்பாக உணவில் கல் உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கல் உப்பில் அயோடின் குறைவாக உள்ளது. இதனால் உடல் எடை குறைய வாய்ப்பிலலை. எனவே உணவில் கல்உப்பை தவிர்ப்பது நல்லது.

டயட்டை கடைபிடிக்கும் சமயத்தில், ஹோட்டல்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டால், இன்று ஓருநாள் தானே என்று நினைத்து பிடிபிடி என்று மூக்குபிடிக்க உண்ணக்கூடாது. அப்படி உணவை எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையாது.

உணவில் சோயாபீன் எண்ணையை கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உடல் எடையை குறைக்காது அது உடல் எடையை அதிகரித்துவிடும்.

நல்ல கொழுப்பு மிகுந்த உணவுகளை உட்கொண்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று நினைத்து அந்த உணவுகளை தவிர்த்துவிடுகிறோம். உதாரணமாக நட்ஸ், அவகோடா, ஆலிவ் ஆயில் உள்ளிட்டவற்றில் உள்ளது. இவற்றை நாம் எடுத்துக்கொண்டால் உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும்.

வேகமாக சாப்பிடுவதும் உடல் எடை அதிகரிக்க காரணமாக உள்ளது.ஏனெனில் நாம் மெதுவாக சாப்பிடும் போது வயிறு நிரம்பிவிட்டது என்ற சிக்னலை மூளைக்கு அனுப்பும் ஆனால் வேகமாக சாப்பிட்டால் அந்த சிக்னலை அனுப்புவது தாமதம் ஆகும். இதனால் சகட்டுமேனிக்கு சாப்பிடுகிறோம். இதுவே உடல் எடை அதிகரிக்க காரணமாக மாறுகிறது.

இதேபோல் சிலர் டயட் என்ற பெயரில் பட்டினி கிடந்துவிட்டு அதன்பிறகு அதிக அளவில் சாப்பிடுவார்கள். இதனாலும் உடல் எடை அதிகரிக்கும். எனவே நல்ல உணவுகளை வேளைக்கு சரியாக சாப்பிடுவது நல்லது.