Home பெண்கள் அழகு குறிப்பு அழகை நிரந்தரமாக்கும் டோட்டல் கேர்!

அழகை நிரந்தரமாக்கும் டோட்டல் கேர்!

59

”பார்லர் சர்வீஸைப் பொறுத்தவரை, நாளுக்கு நாள் புதுசு புதுசா பலவிதமான அழகு சிகிச்சைகள் வந்துட்டே இருக்கு. இவை குறிப்பிட்ட பிரச்னைகளுக்கானவை. தவிர, மாதம் ஒருமுறை செய்யக்கூடிய ‘டோட்டல் கேர்’ எனப்படும் உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான சிகிச்சைகளைத் தொடர்ந்து எடுத்துக்கிட்டாலே, அழகு சார்ந்த பிரச்னைகளைத் தவிர்க்கலாம்” என்று சொல்லும் ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ நிறுவனத்தின் சீனியர் டிரெயினர் பத்மா, ‘டோட்டல் கேர்’ சர்வீஸ் பற்றி விளக்கினார்.

பார்லர்

ஹேர் ஸ்பா

ஹேர் ஸ்பா செய்வதால் முடி ஆரோக்கியமா இருப்ப துடன், மனதுக்கும் நல்ல ரிலாக்ஸேஷன் கிடைக்கும். இந்த சிகிச்சையில் முதலில் ஹேர் வாஷ் செய்து, கஸ்டம ருடைய கேசத்தின் தன் மைக்கு ஏற்ற ஹேர் க்ரீம்

 

மற்றும் கான்சன்ட்ரேஷ னைப் பயன்படுத்தி மசாஜ் கொடுப்போம். அடுத்து ஸ்டீம் கொடுத்து, நல்லா அலசி, கேசத்தை கூல் ட்ரை மூலமாக உலர்த்திவிடுவோம்.

 

ஹேர் கட்

ஹேர் கட் என்றாலே ஸ்ட்ரெயிட் கட், யூ கட், லேயர் கட் என கேசத்தின் அலங்காரத்துக்கு மட்டு மில்ல, ‘ஸ்பிலிட் எண்ட்’ எனச் சொல்லப்படும் நுனி முடிப் பிளவைச் சரிசெய்ய, அதை ரெகுலராக கட் செய்துகொள்ளலாம். வெயி லினாலும், சரியான ஊட்டச்சத்து இல்லாததா லும் பிளவுபடும் முடியை, இப்படி ட்ரிம் செய்வது போல் கட் செய்துகொள்வ தால், அதை ஆரோக்கியமா வைத்துக்கொள்ளலாம்.

ஹேர் கலரிங்

ஷாம்பு போட்டு கேசத்தை நல்லா அலசிட்டு, என்ன கலர் வேணுமோ அதை மிக்ஸ் செய்து, முடியை கற்றை கற்றையா பிரித்து, தலையில் படாமல் அப்ளை செய்வோம். கலரிங் முடிந்ததும், போஸ்ட் கலர் ஷாம்பு போட்டு முடியை அலசிவிடுவோம். அடுத்ததா கண்டிஷனர் அப்ளை செய்து அலசிட்டு, ப்ளோ டிரை பண்ணுவோம். ஹேர் கலரிங்கை பொறுத்தவரை பொதுவா ரூட் டச் அப், ஃபுல் ஹேர் டச் அப், ஃபேஷன் கலரிங் (பிரவுன், கோல்டன்), ஹை-லைட் (பிங்க், ப்ளூ, க்ரீன் – இப்படி விருப்பப்படும் கலரை முடியின் ஒரு கற்றையில் மட்டும் அப்ளை செய்துகொள்வது)னு ரசனைக்கேற்ப செய்துக்கலாம்.

 

த்ரெடிங்

பெண்கள் பலரும் வாடிக்கையா ஐபுரோ த்ரெடிங் பண்ணிப்பாங்க. சில பெண்களுக்கு ஹார் மோன் மாற்றத்தால் வரக் கூடிய பூனை மீசை, தாடியையும் த்ரெடிங் மூலமா நீக்கிக்கலாம். கன்னக் கதுப்புகள், தாடைனு முகத்தில் சற்று அதிகமா ரோமம் இருக்கிற வங்களும், த்ரெடிங் மூலமாக அதை நீக்கிக்கலாம். இது நிரந்தரத் தீர்வு கிடையாது, மாசம்தோறும் செய்துக் கணும்.

ப்ளீச்

முகம், முன் மற்றும் பின் கழுத்து மட்டுமில்லாமஸ கை, கால்னு மொத்த உடலுக்குமே ப்ளீச் செய்யலாம். ஆனா, இதை அடிக்கடி செய்றதைத் தவிர்க்கணும். இதுவே ஹெர்பல் ப்ளீச்சா இருந்தாஸ மாதம் ஒருமுறை செய்யலாம். இதனால் வெயிலால் ஏற்படும் கருமையைப் போக்க முடியும். மாதம் ஒருமுறை தொடர்ந்து செய்யும்போது, இழந்த நிறம் மட்டுமில்லாம, தோல்ல உள்ள மாசுகளும் நீங்கும்.

 

ஃபேஷியல்

பொதுவா ஃபேஷியல் செய்றதால, சருமத்தின் இறந்த செல்கள் மற்றும் மாசுகள் நீங்கி, ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதில், முகத்தைப் பொலிவாக்கும் ஃபேஷியல், முகப்பருவைக் குறைப்பதற்கான ஃபேஷியல், வயதாவதால் தொய்வடை யும் சருமத்தை இறுக்கு வதற்கான ஃபேஷியல்னு பல வகைகள் உண்டு.

மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர்

கைகளைப் பளபளப்பாவும், மிருதுவாவும் வெச்சுக்கறதுக்கு மாசம் ஒருதடவை மெனிக்யூர் செய்துக்கலாம். இதில் க்ளென்சிங் செய்து, நகத்தை வெட்டி, விரும்பிய ஷேப் செய்துடுவோம். அடுத்து, ‘க்யூட்டிகிள்’னு சொல்லப்படுற நகங்களோட ஓரத்திலிருக்கிற இறந்த செல்களை நீக்குவோம். பிறகு, ஸ்கிரப் க்ரீம் பயன்படுத்தி, முழங்கை வரையிலான பாகத்திலிருக்கிற இறந்த செல்களையும் நீக்கிட்டு, கைக்கு மசாஜ் கொடுத்து, பேக் போட்டு, காய்ஞ்சதும் அலசி, கடைசியா கைகளுக்கு மாய்ச்சரைஸர் செய்வோம். நெயில் பாலிஷ் போடுவோம்.

 

மேலே சொன்ன அனைத்து விஷயங்களோட கூடுதலா ஸ்கிரப்பர் மற்றும் பியூமிக் ஸ்டோன் மூலம் பாதங்கள்ல இருக்கிற வெடிப்புகளை நீக்குறதுதான் பெடிக்யூர்.

ஸ்டீம் பாத்

ஸ்டீம் பாத் எடுத்துக்கிறது மூலமா, உடம்பில் இருக்குற மாசு எல்லாம வியர்வை வழியா வெளியேறிடும். இதை மாசம் ஒருமுறை எடுத்துக்கும்போது, உடல் பருமனும் குறையும்.

பாரம்பரியம்

‘கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக்கின் நிர்வாகி கீதா அஷோக், ”இதுவரை பாரம்பரிய பகுதியில் தலைமுடி முதல், மூக்கு பராமரிப்பு வரை பார்த்தோம். இந்த இதழில், உதட்டில் இருந்து பாதம் வரை அழகாக்கிக்கொள்வதற்கான டிப்ஸ்களைப் பார்க்கலாம்” என்று ஆரம்பித்தார்.

உதடுகள்

மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக், தரமில்லா லிப்ஸ்டிக், ஹார்மோன் குறைபாடு, உடல் சூடு, உடம்பின் நீர்ச்சத்து குறைவது உள்ளிட்ட காரணங்களால் உதடுகளில் சுருக்கம் ஏற்படும். இதுபோன்ற சுருக்கங்களை சரிசெய்ய, சன் புரொடெக்ஷன் அடங்கிய, எஸ்.பி.எஃப் 15 உள்ள லிப் பாம் பயன்படுத்தலாம்.

பெட்ரோலியம் ஜெல், வெண்ணெய், தேன் எல்லாவற்றிலும் தலா 5 கிராம் எடுத்து, அதனுடன் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நுரை வரும் அளவுக்கு நன்கு அடித்துக் கலக்க வேண்டும். க்ரீம் பதத்துக்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ள லாம். தினமும் இரவு உதடுகளைக் கழுவி, ஏதாவது ஒரு டால்கம் பவுடரை உதடுகளில் தடவி, அதன் மீது பெட்ரோலிய ஜெல் கலவையை தடவிக்கொள்ள வேண்டும். மறுநாள் காலை யில் எழுந்ததும் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால், தேவையற்ற சுருக்கங்கள் நீங்கி உதடு பளபளக்கும்.

கழுத்து

தடித்த கழுத்தை சங்கு போன்ற கழுத்தாக்க வேண்டுமாஸ தலையை முடிந்த மட்டும் மேல் நோக்கி நிமிர்த்தி, எச்சில் விழுங்குதல்; தலையை கட்டிலின் விளிம்புக்கு வெளியே தொங்கும் அளவுக்கு சாய்ந்து படுத்துக்கொள் ளுதல் இவையிரண்டையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து செய்து வந்தால், தடித்த கழுத்து மெலிய ஆரம்பித்துவிடும்.

கழுத்தின் கருமை நீங்கஸ

ஹார்மோன் குறைபாடு, தடிமனான நகைகள், குளித்ததும் பவுடர் போடுவது போன்ற பழக்கங்களால் கழுத்துப் பகுதி சிலருக்கு கருமையாக இருக்கும். இதற்கு தக்காளிச் சாறு மற்றும் ஆம்சூர் பவுடர் தலா 1 டீஸ்பூன், கடுகு எண்ணெய் 10 சொட்டுகள், ஒரு கற்பூரவில்லை, லெமன் ஜூஸ் 20 சொட்டுகள் எல்லாவற்றையும் கலந்து, கழுத்தின் கருமைப் பகுதிகளில் அப்ளை செய்து, காய்ந்ததும் கழுவிவிடவும். அடுத்ததாக, புதினா சாறு கால் டீஸ்பூன், படிகாரத்தூள் 2 சிட்டிகை கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவிவிடவும். இதை தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கழுத்தின் கருமை நீங்கிவிடும்.

கழுத்தின் வரிகள்

கழுத்தில் வரிகள் வராமலிருக்க தலையணை வைத்துப் படுப்பதைத் தவிர்க்க வேண்டும். குறைந்தபட்சம் பெரிய தலையணையையாவது தவிர்க்க வேண்டும். கெமிக்கல் மற்றும் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய தெர்மோ ஹெர்ப் அரை டீஸ்பூன் எடுத்து, நன்கு அரைத்து, முட்டை யின் வெள்ளைக் கருவில் கலந்து, கழுத்தை நிமிர்த்தி கலவையை மேல் நோக்கி தடவ வேண்டும். பிறகு, கழுத்தை தளர்த்தாமல், கலவை காயும் வரை மேல் நோக்கியே தலையை வைத் திருக்க வேண்டும். காய்ந்ததும் கழுவிவிடலாம். தினமும் இதை செய்துவந்தால், கழுத்தின் வரிகள் காணாமல் போகும்.

கைகள் மற்றும் கால்கள்

ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி, அதனுள் ஒரு கிண்ணத்தை வைத்து, அதில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய தேன் மெழுகு 50 கிராம் போட்டு, அடுப்பில் வைக்கவும். சூட்டில் மெழுகு உருகியவுடன் அதனுடன் லிக்விட் பாரஃபின் மற்றும் கிளிசரின் தலா 10 மில்லி மற்றும் விளக்கெண்ணெய் 5 மில்லி சேர்த்துக் கலக்கவும். நன்கு உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கி, பொறுக்கும் சூட்டில் அதை கை மற்றும் கால் முழுவதும் தடவவும். பின்னர் கைகளில் கிளவுஸும் கால்களில் சாக்ஸும் போட்டுக்கொண்டு காயவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து கிளவுஸ் மற்றும் சாக்ஸை கழற்றி, கை மற்றும் கால்களை கழுவவும். நேரம் கிடைக்கும்போது அல்லது தினமும் இரவு இதை தொடர்ந்து செய்துவந்தால், கைகள் மற்றும் கால்கள் நன்கு பளபளப்பாக, மிருதுவாக மாறும்.