Home பெண்கள் அழகு குறிப்பு இளமையாக இருக்க பற்களை பாதுகாப்பது அவசியம்

இளமையாக இருக்க பற்களை பாதுகாப்பது அவசியம்

31

ஒவ்வொரு மனிதனும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். வயது செல்லாமல், தோல், முடி முதிராமல் என்றும் இளமையாக இருப்பதையே ஆசையாக கொண்டுள்ளான். அதற்காக அவன் எண்ணாத எண்ணங்கள் இல்லை. செய்யாத முயற்சிகளும் இல்லை, செல்லாத இடங்களும் இல்லை.

எவ்வாறெல்லாம் செய்தால், இளமையாக இருக்கலாம் என்று தினந்தோறும் யோசித்து செயல்படுகிறான். இவ்வாறு யோசித்து செயல்படும் மனிதன், தன்னுடைய முக தோற்ற அழகை சிந்திக்காமல் இருக்கிறான். தன்னுடைய பற்களின் அழகினையும், தோற்றத்தையும் எண்ணுவது கிடையாது.

சர்க்கரை, ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு, இருதய, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீர் பிரச்சினைகள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடாது என்று அதிக கவனம் செலுத்தும் மனிதன், இதுபோன்று ஆரம்ப கட்டத்திலேயே பற்களுக்கும் கவனம் செலுத்துவது கிடையாது. பற்களில் வலி வந்தவுடன் பல் மருத்துவரை அணுகும் நிலை மாறி, வாலிப, குழந்தை பருவத்தில் அதன் முக்கியத்துவத்தை அறிந்து, பற்களை பாதுகாத்தால் என்றும் இளமைமிக்க பற்களோடு வாழலாம்.

பற்களை பாதுகாத்து கொள்ள எளிதான வழிகள்:-

* தினந்தோறும் இருமுறை பல் துலக்க வேண்டும்.

* வாய் கொப்பளிக்கும் மருந்து உபயோகப்படுத்துதல்.

* பல் இடுக்குளில் உள்ள உணவுகளை அகற்ற டெண்டல் பிளாஸ் ( De-nt-al floss ) உபயோகப்படுத்துதல்.

* முக்கியமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுதல்.