Home இரகசியகேள்வி-பதில் எனக்கு அதீத உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதனால், எனது உணர்ச்சிகளுக்கு நானே உணவிட்டுக்கொள்கிறேன். இது சரியா?

எனக்கு அதீத உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதனால், எனது உணர்ச்சிகளுக்கு நானே உணவிட்டுக்கொள்கிறேன். இது சரியா?

27

கேள்வி: அந்தரங்கம் பகுதியில் பல தடவைகள், விந்து விரைவாக வெளியேறுவதை ஒரு கேள்வியாகப் பார்த்தி ருக்கிறேன். எனக்குத் தலைகீழ். எனக்கு விந்து வெளியேறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், என் மனைவி உறவுக்குத் தயங்குகிறார்.

இதற்கு என்ன செய்யலாம்?

பதில்: உங்கள் வயது மற்றும் உங்களுக்குத் திருமணமாகி எத்தனை ஆண்டுகள் என்பது பற்றிய விபரங்கள் இல்லை.

அந்த விபரங்கள் உங்கள் பிரச்சினைக்கான தீர்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை மறவாதீர்கள்.

திருமணமான புதிதிலும், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த மாதிரியான நிலை தோன்ற அதிக வாய்ப்புகள் உண்டு. இந்தப் பிரச்சினைக்கு மனதின் அதாவது எண்ணங்களின் உதவி தேவைப்படுகிறது.

யதார்த்தத்தில் எவ்வாறு இருந்தாலும், மனதில் கிளர்ச்சியூட்டக்கூடிய காட்சிகளை உருவகிப்பதன் மூலம் உங்கள் பிரச்சினை தீரும்.

அப்படி இல்லையேல், உணர்வெய்தும் வரையில் உறவின் வேறு நிலைகளைக் கையாளலாம்.

அல்லது, உங்கள் மனைவி உணர்வெய்தியபின் நீங்கள் சுயமாகவே விந்தை வெளியேற்றலாம். ‘கொக் ரிங் வைப்ரேட்டர்’ என்ற ஒரு சாதனம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர் களா? இது ஒரு மெல்லிய அதிர்வூட்டும் வளையம்.

இதை, உங்கள் மர்ம உறுப்பின் நுனிப்பகுதியில் பொருத்துவதன் மூலமும் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம். எனினும், இத்தகைய உபகரணங்கள் இலங்கையில் கிடைக் கின்றனவா என்பது சந்தேகமே.

அப்படியே கிடைத்தாலும், அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கும்.

————

கேள்வி: எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. கடந்த வாரம் உறவின்போது விந்துடன் சேர்ந்து இரத்தமும் வெளியானது. ஆனால், இதை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. எதனால் இந்த நிலை என்று தெரிந்துகொள்ள முடியுமா?

பதில்: சற்றும் தாமதிக்காமல் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதே நல்லது.

ஒன்று, உங்கள் ஆணுறுப்பின் முனையும், அடிப் பகுதியும் இணையும் பகுதியில் உள்ள தோல் இணைப்பு அறுந்திருக்கலாம்.

இது சாதாரணமானதே. இதன்போது வெளியாகும் இரத்தம், தானாகவே வெளியே வரும் அளவுக்கு அதிகமாக இருக்காது. எனவேதான், விந்துவுடன் கலந்து வெளிவருகிறது.

மற்றொன்று, சில வேளைகளில், புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இதைக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை. உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு நீங்கள் உங்களை உட்படுத்திக்
கொண்டால், தொல்லைகளைத் தவிர்க்கலாம்.

————————
கேள்வி:
நான் ஒரு பெண். எனக்கு 29 வயது. இன்னும் திருமணமாகவில்லை. அண்மைக்காலமாக எனக்கு அதீத உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதனால், எனது உணர்ச்சிகளுக்கு நானே உணவிட்டுக்கொள்கிறேன். இது சரியா? இதனால், திருமணத்தின் பின் குழந்தைப் பேற்றில் ஏதேனும் சிக்கல்கள் வருமா?

கேள்வி: நான் ஒரு ஆண். எனக்கு வயது 20. என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால், சுய இன்பத்தை நாடுகின்றேன். இதற்கு நீங்கள்தான் ஒரு முடிவு தரவேண்டும்.

பதில்: ஆண்- -பெண் ஆகிய வேறுபாட்டைத் தவிர, உங்கள் இருவரது பிரச்சினையும் ஒன்றே. எனவே உங்களுக்கான பதிலும் ஒன்றே.
இதில் பிரச்சினை ஒன்றும் இல்லையே… இந்த வய தில் உணர்ச்சிகளுக்கு வடிகால் சுய இன்பம்தான். இது இயல்பானதுதான். மேலும், ஒரு பெண் 29 வயது வரை திருமண பந்தத்தில் இணையாத பட்சத்தில், அவருக்கு சுய இன்பம் ஒன்றே சரியான வடிகால். சுய இன்பம் சரியானதுதான் என்றாலும், சுய இன்பத்துக்காக நீங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் உங்கள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகின்றனவே அன்றி, இது தவறென்று நினைப்பதுதான் தவறு.
ஒரு பெண் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் குழந்தைப் பேற்றுக்குத் தடை ஏற்படும் என்ற எண்ணமும் தவறானதே.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உடல் வாகு இருக்கும். மேலும், ஒவ்வொருவரது உணவுப் பழக்கங்களும் வித்தியாசப்படும். இதன் அடிப் படையிலேயே உணர்ச்சிகளின் வெளிப்பாடும் இருக்கும். அதற்காக, சுய இன்பத்திலேயே மூழ்கிப்போய்விட வேண் டும் என்பதில்லை.
அதீத வேலைப்பளுவால் சிலரது உணர்ச்சிகள் கட்டுப்
படுத்தப்படுகின்றன. அதிக நேரம் உபரியாக, சும்மா இருந் தால் உணர்ச்சிகள் தலைதூக்க ஆரம்பிக்கும். உங்களது நிலை என்னவென்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவேளை, உங்களுக்கு அதிக நேரம் உபரியாகக் கிடைக்குமானால், அந்த நேரத்தை வேறு எதிலேனும் செலவிட முயற்சியுங்கள். நண்பர்கள் சந்திப்பு, வீட்டு வேலைகளில் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்வது, ஏதேனும் ஒரு குறுகிய காலக் கல்வித்திட்டத்தில் இணைந்து படிப்பது, கலைகளில் ஆர்வம் இருக்கும் பட்சத் தில் அதில் கவனத்தைச் செலுத்துவது என்று உங்களை எப்போதும் பரபரப்பான சூழலில் வைத்துக்கொண்டால், உணர்ச்சிகள் தலைதூக்குவது குறை யும்.
இவற்றை விடுத்து, மிகக் கடுமை யாக உணர்ச்சிகளுக்குத் தடைபோட முயற்சித்தால், நித்திரையில் விந்து வெளி யேறிவிடும். அல்லது, பெண்களைப் பொறுத் தவரையில் வெள்ளைப்படுதல் மற்றும் மனச் சிக்கல்களை உருவாக்கி விடும்.