Home இரகசியகேள்வி-பதில் இளம் ஆண்பெண்களின் பாலியல் அந்தரங்க கேள்வி பதில்கள்

இளம் ஆண்பெண்களின் பாலியல் அந்தரங்க கேள்வி பதில்கள்

55

கேள்வி: எனக்கு வயது 34. என் கணவருக்கு 37. எமக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். உறவில் நான் எத்தனைதான் ஒத்துழைத்தாலும் அவருக்குத் திருப்தி வருவதில்லை. இதனாலோ என்னவோ அவரைவிட வயது கூடிய, திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல! திருமணமாகாத ஒரு இளம் பெண்ணுடனும் அவருக்குத் தொடர்பு உண்டு. அந்தப் பெண் ஏற்கனவே மூன்று முறை கருக்கலைப்புச் செய்துவிட்டார். என் கணவர் செல்வந்தர். காசு, பணத்துக்குக் குறைவில்லை. என்றாலும், என் வாழ்க்கையில் இன்னும் இரண்டு பெண்கள் நுழைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் ஆசையோடு அவருடன் பேசிக்கொண்டிருந்தாலும், அந்தப் பெண்களில் யார் கூப்பிட்டாலும் உடனே போய்விடுவார். திருமணமான பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வாழ்கிறார். அவர் அழைத்தால் அந்தப் பெண்ணும் வெளிநாடு சென்றுவிடுவார். ஆனால், அந்த இளம்பெண்ணை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

அவள் காசு வாங்கிக்கொண்டு வேறொருவரைத் திருமணம் செய்துவிட்டால் பரவாயில்லை. என் கணவரையே திருமணம் செய்துகொண்டு வந்துவிட்டால்…? இதுபற்றி என் கணவரிடம் கேட்டால், உறவுகொள்ளும் எல்லாப் பெண்களையும் திருமணம் செய்வேனா என்கிறார். எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. எனது கணவர் எனக்கு வேண்டும். நான் என்ன செய்வது?

பதில்: தலைக்கு மேல் வெள்ளம் போகும்வரை விட்டு விட்டீர்கள். இனி என்ன செய்ய முடியும்? இந்த விடயங்கள் எல்லாம் எப்போது உங்களுக்குத் தெரியவந்தது? அப்போதே அது குறித்து உங்கள் பெற்றோரிடமோ, அவரது பெற்றோரிடமோ பேசியிருந்தால் ஏதேனும் ஒரு மாற்றம் இருந்திருக்கும்.

ருசி கண்ட பூனையை அவ்வளவு இலகுவாக உங்கள் வழிக்குக் கொண்டுவர முடியாது.

ஆனால், திருமணமாகாத அந்தப் பெண் உங்கள் கணவரைத் திருமணம் செய்ய வாய்ப்பில்லை. காரணங்கள் இரண்டு. ஒன்று, உங்கள் கணவர் ஏற்கனவே திரு மணம் முடித்தவர் என்பதால் அவரைத் திருமணம் செய்துகொண்டால் சிக்கல் எழும் என்று உணர்ந்தேயிருப் பார்.

எனவே, முடிந்தவரையில் காசைப் பெற்றுக்கொண்டு தன்னுடைய வாழ்க்கையைத் தேடிச் சென்றுவிடுவார்.

இரண்டாவது, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு அவர் மேல் உங்கள் கணவருக்கு இருப்பது காதல் அல்ல. அந்தப் பெண் மீதான ஈர்ப்பு நாளடைவில் தேய்ந்துவிடும் என்பதை உங்கள் கணவர் அறிந்தேயிருப்பார்.

மேலும், அவரே கூட அதை வெளிப் படையாக உங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இருந்தாலும், உங்கள் கணவரை உங்கள் வசப்படுத்து வது அவசியம். அவர் எதன் மீது எப்படிப்பட்ட விருப்பம் கொள்கிறாரோ அதனை நீங்கள் முதலில் உணர்ந்து கொள் ளுங்கள். முடிந்தால் அது போன்ற சந்தோஷத்தைத் தர முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் நினைத்தால் முடியாததல்ல.

அதன் பின் உங்கள் உறவினர்கள் மூலமாக நீங்கள் போராட வேண்டியிருக்கும். அதற்கு அவர் மசிகிறாரோ இல்லையோ, உங்கள் வீட்டுக்குள் இன்னொரு பெண் வராமல் இருப்பதற்காவது உங்களது முயற்சி வழிசெய்யும்.

கேள்வி: நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவர் எனது உறவுக்காரரும்தான். வீட்டில் இந்த விடயம் தெரிந்து அதற்குச் சம்மதமும் தெரிவித்துவிட்டார்கள். அவர் என்ன செய்தாலும் என்னிடம் சொல்லிவிடுவார். ஒரு முறை சென்னையில்ல் பாலியல் தொழிலாளி ஒருவருடன் உறவுகொண்டதாகச் சொன்னார்.

அதுபோலவே திருச்சியிலும் ஒரு தவறு செய்ததாகச் சொன்னார். அவர் செய்த தவறுகளை என்னிடம் சொல்வது எனக்குப் பிடித்திருந்தாலும் அவர் செய்த தவறுகள் எனக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன செய்வது?

பதில்: தவறு என்பது, தெரியாமல் நடக்கும் ஒரு விபத்துக்குச் சமமானது. அது ஒரு முறை மட்டும் நடந் தால்தான் அதைத் தவறு என்பார்கள். அடிக்கடி அது நடந்தால் அதற்குப் பெயர் பிழை.

தவறு செய்பவர்களை மன்னிப்பது சரிதான். ஆனால் பிழை என்று தெரிந்தும் அதைச் செய்பவர்களை எப்படி மன்னிக்க முடியும்?

அவர் செய்த தவறுகளை உங்களிடம் சொல்வதன் மூலம் அவர் தன்னுடைய நேர்மையை உங்களுக்கு உணர்த்துகிறார். ஆனால், தான் செய்வது பிழை என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை.

முதல்முறை அவர் தவறு செய்தபோதே, உங்களது கோபத்தையும், ஏமாற்றத்தையும் அவரிடம் காட்டியிருந்தால் மீண்டும் அவர் அதே பிழையைச் செய்திருக்க வாய்ப்பில்லை.

இரண்டாவது முறை செய்த பிழையையும் அவர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார் என்றால், இனி எந்தப் பிழை செய்தாலும் அதை உங்களிடம் சொல்லிவிட்டால் நீங்கள் அவரை மன்னித்துவிடுவீர்கள் என்ற எண்ணம் அவர் மனதில் வேரூன்றியிருக்கிறது என்றுதானே பொருள்?

ஒருவேளை அவரை நீங்கள் திருமணம் செய்தபின்னும் கூட இதே நிலை தொடர்ந்தால் அப்போது உங்களால் அவரைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ முடியாமல் போய் விடும்.

எனவே, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.

உங்கள் இருவரது வயதும் பொருத்தமாக இருப்பின் உடனடியாக அவரைத் திருமணம் செய்துகொள்வதே உங்கள் இருவருக்கும் நல்லது.

—–
கேள்வி: எனக்கு வயது 19. நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் 2 வருடங்கள் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் இருவரும் 3, 4 தடவை உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

அவ்வாறு இணையும்போது எனக்கு இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் விந்து வெளியேறுகிறது.

சுய இன்பத்தின்போதும் இதே நிலைதான். பொதுவாக ஆண்களுக்கு எத்தனை நிமிடங்களில் விந்து வெளியேறும்? எனக்கு ஏதும் நோய் இருப்பதால் இப்படி ஆகிறதா?

பதில்: பதற வேண்டாம். உங்களுக்கு ஒரு பிரச்சி னையும் இருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான ஆண் களுக்கு இதே நிலைதான். இது இயல்பானதே.

ஆனால், உங்கள் இருவர் மீதும் கொண்டிருக்கும் நம்பிக்கையாலேயே உங்கள் இருவரது வீட்டிலும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

திருமணத்துக்கு முன், அதுவும் இந்தச் சின்ன வயதிலேயே உங்களது உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடிக்கொண்டால், இன்னும் இரண்டு வருடங்கள் உங்கள் காதல் உயிர் வாழுமா என்ற சந்தேகம் எழுகிறது.

எந்த ஒரு சந்தோஷத்தையும் அடைந்தபின், அதைத் தாண்டி என்ன இருக்கிறது என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் எழவே செய்யும். காதலுக்கும், காமத்துக்கும்கூட இது பொருந்தும்.

இந்த வயதிலேயே உடல் இன்பம் இருவருக்கும் கிடைத்துவிட்டால், வெகு விரைவிலேயே பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவருக்கு சலிப்பு வந்துவிடும்.

அதுவும் உங்கள் திருமணத்துக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன.

எனவே, உடலுறவைத் தொடர்ந்தீர்களேயானால் உங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுவிடலாம்.

உங்களுக்குத்தான் உங்கள் வீட் டாரின் சம்மதம் கிடைத்துவிட்டதே! இனி என்ன கவலை? இந்த இரண்டு ஆண்டுகளும் காதலைக் கண்களாலும் வார்த்தைகளாலும் மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதுவே உங்கள் உறவு நிலைக்க ஒரு உன்னத வழி!