Home பெண்கள் உடல் கட்டுப்பாடு Tamil x Hot தொடை, அடிவயிறு கொழுப்பை குறைக்கும் பயிற்சிகள்

Tamil x Hot தொடை, அடிவயிறு கொழுப்பை குறைக்கும் பயிற்சிகள்

35

ஜம்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks) :

விரிப்பில் நேராக நிற்க வேண்டும். கால்களைச் சற்று அகட்டிக் குதிக்க வேண்டும். அதே நேரத்தில் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திக் குதித்துக்கொண்டே தட்ட வேண்டும். பழைய நிலைக்கு வந்தவுடன் கைகளை இயல்பாக வைக்க வேண்டும். சிறிது இடைவெளி விட்டு, இந்தப் பயிற்சியை ஐந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள்: குதிப்பதால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உடலில் உள்ள கலோரிகள் அதிகளவில் செலவிடப்படும். உடல் எடை கட்டுக்குள் வரும். குதிக்கும்போது ஆழமாக மூச்சுவிடுவதன் மூலம் உடல் முழுவதும் ஆக்சிஜன் சென்றடைவதால், ரத்தம் சீராகப் பாயும். கொழுப்பைக் கரைக்கும். தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும்.

அப்லிஃப்ட் ஹோல்டு (Uplift Hold)

விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும். கைகள் பக்கவாட்டில் இருக்கட்டும்; கால்களை உயர்த்தி இருக்க வேண்டும். இப்போது கால்களையும் கைகளையும் ஒரே சீராக மேலே உயர்த்த வேண்டும். தூக்கும்போது முழங்கை மற்றும் முழங்காலை மடக்காமல் தூக்க வேண்டும். முடிந்தால் 90 டிகிரி கோணத்தில் கை மற்றும் கால்களை உயர்த்திச் சில நிமிடங்கள் வரை நிறுத்தலாம். பின்பு, கீழே இறக்க வேண்டும். இதேபோல் தொடர்ந்து ஐந்து முறை செய்யலாம்.

பலன்கள்: அடிவயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் குறையும். கர்ப்பப்பை வலுப்பெறும். சிறுநீர்ப்பைத் தூண்டப்பட்டு, சிறுநீர் சீராக வெளியேற உதவும். தொப்பை குறைய உதவும். உடலின் சமநிலைத்தன்மை மேம்படும்.