Home இரகசியகேள்வி-பதில் Tamil Sex kelvikal ஆண்குறி மொட்டு வளைந்து காணப்படுதல்

Tamil Sex kelvikal ஆண்குறி மொட்டு வளைந்து காணப்படுதல்

214

கார்டி என்றால் என்ன? (What is chordee?)

கார்டி என்பது ஆண்குறியின் பிறவிக்கோளாறைக் குறிக்கிறது, இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆண்குறி விறைக்கும்போது மொட்டு வளைந்து காணப்படும். பொதுவாக மொட்டு கீழ்ப்புறமாக வளைந்து காணப்படும், சிலருக்கு பக்கவாட்டில் வளைந்து காணப்படும், சிலருக்கு இரண்டும் கலந்தும் இருக்கலாம். நாட்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சனை சரியாகிவிடக் கூடியதல்ல. சில சமயம் இந்தப் பிரச்சனையுடன் ஹைப்போஸ்பாடியாஸ் எனும் பிறவிக் குறைபாடும் இருக்கலாம். அதாவது, சிறுநீர்த் துவாரம் வழக்கமாக இருப்பது போல் ஆண்குறியின் முனையில் இல்லாமல், அடிப்பகுதியில் காணப்படுதல். ஹைப்போஸ்பாடியாஸ் பிரச்சனை இல்லாமல், ஆண்குறி மொட்டு மட்டும் வளைந்திருந்தால், பெரும்பாலும் குழந்தைப் பருவத்தின் பிற்காலம் அல்லது இளமைப் பருவத்தின் தொடக்கம் வரை இந்தப் பிரச்சனையை நாம் கவனிக்காமலே இருந்துவிட வாய்ப்புள்ளது.

கார்டி எனும் இந்தப் பிரச்சனையானது தோராயமாக, புதிதாகப் பிறக்கும் 200 ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே கண்டறிந்தால், இது அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்யப்படுகிறது. இந்தப் பிரச்சனையும் பெய்ரோனி வியாதியும் வெவ்வேறாகும், பெய்ரோனி வியாதி வந்தவர்களுக்கு வடுத் திசு உருவாவதால் ஆண்குறி வளைந்திருக்கும்.

அறிகுறிகள் (Symptoms)

கார்டியின் அறிகுறிகள்

ஆண்குறி கீழ்நோக்கி வளைந்திருக்கும், குறிப்பாக விறைத்திருக்கும் போது நன்றாக வளைந்திருக்கும். சிறுநீர்த் துவாரம் ஆண்குறியின் அடிப்பகுதியில் உருவாகிவிடுகின்ற ஹைப்போஸ்பாடியாஸ் எனும் நோய் இல்லாமல் போனால், கார்டி பிரச்சனை சிறு வயதில் கவனிக்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது.
ஹைப்போஸ்பாடியாஸ் பிரச்சனை இருக்கும் நபர்கள், உட்கார்ந்தே சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
கார்டி பிரச்சனை மட்டுமோ, ஹைப்போஸ்பாடியாஸ் பிரச்சனையுடன் சேர்ந்தோ, பின்வரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடும்:

தோல் முடிச்சு: சிருநீர்த் துவாரம் மிக மெலிதாக இருக்கும், மொட்டின் முனைக்கு அருகில் இருக்கும்.
மொட்டுத் தோல் ஒதுங்கியிருத்தல் (டோர்சல் ப்ரெப்பியூட்டல் ஹுட்): மொட்டுத் தோல் முழு ஆண்குறியையும் மூடியில்லாமல் மேல் பகுதியை மட்டும் மூடியிருக்கும்.
காரணங்கள் (Causes)

கார்டி பிரச்சனைக்கான துல்லியமான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், கருவில் உடல் உருவாகும்போதே எதோ தவறாக நடப்பதால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது, இந்தத் தவறு நடக்கும்போது, எதிரெதிரே இருக்கும் ஆண்குறியின் விறைப்புப் பகுதிகள் ஒரே விகிதத்தில் வளராமல் போகிறது.

நோய் கண்டறிதல் (Diagnosis)

ஆண்குறி விறைத்திருக்கும் நிலையில் உடலை ஆய்வு செய்து இந்தப் பிரச்சனை கண்டறியப்படுகிறது. பிரச்சனையை உறுதிப்படுத்த, கூடுதலாக படமெடுத்தல் சோதனைகள் செய்யப்படலாம்.

சிகிச்சை (Treatment)

கார்டி பிரச்சனைக்கு அறுவை சிகிச்சையே தீர்வாக உள்ளது. ஆரம்ப, அறுவை சிகிச்சை பழுது ஆண்குறியின் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி உறுதி. ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை செய்து சரிசெய்தால் ஆண்குறி ஆரோக்கியமாக வளரும்.

ஹைப்போஸ்பாடியாஸ் பிரச்சனையும் உடனிருந்தால், சிருநீர்த்துவாரத்தைச் சரிசெய்ய, மொட்டின் முன்தோல் திசுவை இடமாற்றி வைத்துச் செய்யும் கூடுதல் அறுவை சிகிச்சையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருக்கும். இதனைச் சரிசெய்ய பல முறை அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கலாம்.

தடுத்தல் (Prevention)

கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்தப் பிரச்சனை வராமல் தடுக்க, கர்ப்பிணிப் பெண்கள் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். அவற்றில் சில:

புகையிலையையும் மதுவையும் தவிர்க்க வேண்டும்
தினமும் 400-800 mcg ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்ள வேண்டும்
மருத்துவரிடம் சென்று சரியான இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்
சிக்கல்கள் (Complications)

ஆண்குறி இப்படி வளைந்திருப்பது உடலுறவைச் சிரமமாக்கலாம், அல்லது இயலாத காரியமாக்கிவிடலாம்.

அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

கார்டி பிரச்சனை உள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டதும், அதற்கான சிகிச்சைத் திட்டம் பற்றியும், எத்தனை அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும் என்பதைப் பற்றியும் உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசுங்கள்.
தொடர்ச்சியாக, தவறாமல், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைகள் பெறவும், மருத்துவரின் அறிவுரைகளை அப்படியே பின்பற்றவும்.
ஆண்குறியை முரட்டுத்தனமாகக் கையாள்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக ஆண்குறி விறைத்திருக்கும்போது கவனம் தேவை, விறைத்திருக்கும்போது ஆண்குறியை முரட்டுத்தனமாகக் கையாண்டால் ஆண்குறி முறிவு ஏற்படலாம்.
எப்போது ஒருவருக்கு பாலியல் சிகிச்சை தேவை?

எப்போது ஒருவருக்கு பாலியல் சிகிச்சை தேவை? (When is sex therapy required?)
எல்லோருக்குமே வாழ்வில் ஏதோ ஒரு சமயத்தில் பாலியல்ரீதியான பிரச்சனைகள் வந்திருக்கும். பெரும்பாலானவர்கள் அவற்றைத் தாமாகவே சமாளித்துச் சரிசெய்துகொள்வார்கள், ஆனால் சிலருக்கு, பாலியல் பிரச்சனைகள் உணர்வளவில் அவர்களைப் பாதிக்கலாம், மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தலாம். உங்கள் பல்வேறு பாலியல் பிரச்சனைகளுக்கு பாலியல் நிபுணர் உதவ முடியும்.

பாலியல்ரீதியான என்னென்ன பிரச்சனைகள் உள்ளன?
பாலின ஈர்ப்பு (செக்ஷுவல் ஒரியண்டேஷன், அதாவது ஒருவருக்கு பாலியல் ஈர்ப்பு தனது பாலினத்தவர் நோக்கியே உள்ளதா என்பது) அல்லது விருப்பம் பற்றிய கவலைகள்
பாலியல்ரீதியான நெருக்கத்தில் பிரச்சனைகள்
கடந்தகாலத்தில் ஏற்பட்ட தேவையற்ற அல்லது மோசமான பாலியல் அனுபவங்கள் தொடர்பான மனக் கவலை
பாலியல் வேட்கை அல்லது கிளர்ச்சி குறைதல் (லிபிடோ)
விறைப்பின்மை – ஆண்குறி விறைப்பதில் அல்லது விறைப்பு நீடிப்பதில் பிரச்சனை
விந்து வெளியேற்றம் தொடர்பான பிரச்சனைகள் – விந்து முந்துதல், விந்து தாமதமாக வெளியேறுதல் மற்றும் பிற பிரச்சனைகள்
அனார்காஸ்மியா (புணர்ச்சிப் பரவசநிலை அடைவதில் பிரச்சனை)
உடலுறவின்போது வலி அல்லது உறுப்பை உள்ளே நுழைப்பதில் சிரமம்
பாலியல்ரீதியான அடிமைத்தனம் மற்றும் பாலியல்ரீதியாக உந்தப்படும் நடத்தைகள்
பாலியல் வக்கிரம்

பாலியல் நிபுணர்கள் என்பவர்கள் யார்? (Who are Sex Therapists?)
பாலியல் பிரச்சனைகளைச் சரிசெய்துகொள்வதற்கு உதவும் தொழில்முறை நிபுணர்களே, பாலியல் நிபுணர்கள். பாலியல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக கூடுதலாகப் பயிற்சி எடுத்த மருத்துவர்கள், ஆலோசகர்கள் அல்லது சுகாதாரப் பணியாளர்கள் போன்றோரும் இதிலடங்குவர்.

பாலியல் சிகிச்சை எப்படிச் செய்யப்படும்? (How does the Sex Therapy Session happen?)
மருத்துவ வரலாற்றை அறிதல் (History taking)
மருத்துவர் உங்கள் பிரச்சனை பற்றிய விவரங்களைப் பெறுவார், அதாவது உங்கள் பாலியல் பிரச்சனை எப்போது தொடங்கியது, அவ்வப்போது வந்து போகிறதா அல்லது எப்போதுமே உள்ளதா, இந்தப் பிரச்சனையை எவையெல்லாம் தூண்டுகின்றன, என்னென்ன சிகிச்சைகளை முயற்சி செய்தீர்கள் போன்ற விவரங்களைச் சேகரிப்பார்.
உங்களுக்கு வேறு ஏதேனும் மருத்துவப் பிரச்சனைகள் உள்ளதா, வேறு ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்களா என்பது போன்ற விவரங்களையும் மருத்துவர் கேட்டறிவார். உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் காரணிகள் உள்ளதா என்றும், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏதேனும் சமீபத்தில் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றியும் கேட்டறிவார்.
பாலியல் சிகிச்சை அமர்வுகள் ஒவ்வொன்றும் இரகசியமானதாக வைக்கப்படும். மருத்துவரை நீங்கள் தனியாகச் சந்திக்கலாம், ஒருவேளை உங்கள் பிரச்சனை உங்கள் துணைவர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருந்தால், இருவரும் கலந்துகொள்வது நல்லது.

சிகிச்சை (Treatment)
சிகிச்சையின் தன்மை (Nature of therapy)
பாலியல் சிகிச்சைக்கான அமர்வுகள் பொதுவாக 3-50 நிமிடங்கள் நடைபெறும். பாலியல் சிகிச்சை என்றாலே, உடைகளைக் களைய வேண்டியிருக்கும் அல்லது நாம் சங்கடப்படும் விதமாக மருத்துவர் நம்மைத் தொடுவதெல்லாம் நடக்கும் என்று பலருக்குக் கவலை இருக்கும். ஆனால் உண்மை இதற்கு மாறானது.

ஆலோசனை (Counselling)
உங்கள் பிரச்சனை இதுதான் என்று மருத்துவர் கண்டறிந்ததும், என்னென்ன வழிகளிலெல்லாம் இதைச் சரிசெய்யலாம் என்பது பற்றி உங்களிடம் பேசுவார். இதனால் நீங்கள் உங்கள் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளலாம், உங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றமும் நெருக்கமும் மேம்படும். உங்கள் பிரச்சனை உடல் சம்பந்தப்பட்டதா, மனம் சம்பந்தப்பட்டதா அல்லது இரண்டும் சேர்ந்ததா என்று மருத்துவர் உங்களிடம் கூறுவார். மருத்துவரிடம் உங்கள் பிரச்சனை பற்றி விரிவாகப் பேசுவது, உங்கள் பிரச்சனை என்ன என்பதையும், அதற்கு என்னென்ன காரணங்கள் என்பதையும் நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள உதவும்.

உடல் மற்றும் உளவியல் காரணிகள் (Physical and psychological factors)
பாலியல் மற்றும் நெருக்கம் தொடர்பான சில பிரச்சனைகளுக்கு, மன அழுத்தம், மனக்கலக்கம், மன இறுக்கம் போன்ற உளவியல் சிக்கல்கள் காரணமாக இருக்கலாம். மற்ற சிலருக்கு நாள்பட்ட நோய், மருந்துகள், அறுவை சிகிச்சை, முதுமை போன்றவை காரணமாக இருக்கலாம். உங்கள் பிரச்சனை எத்தகையது என்பதைப் பொறுத்து, பிற மருத்துவ நிபுணர்கள் உங்களைப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கலாம். சிலசமயம் நீங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

வீட்டில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் (Homework)
நீங்களும் உங்கள் துணைவரும் சேர்ந்து செய்வதற்கான சில பயிற்சிகளை மருத்துவர் கொடுக்கலாம். உதாரணமாக தகவல் பரிமாற்றப் பயிற்சிகள், விழிப்புணர்வுப் பயிற்சிகள் (நெருக்கமான தருணங்களில் மெதுவாகச் செயல்பட்டு உணர்வுகளைக் கவனித்தல்), பாலியல் சம்பந்தப்பட்ட அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகங்களைப் படித்தல், காணொளிகளைப் பார்த்தல் போன்றவை.

உங்கள் பாலியல் தேவைகளைப் புரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் அவற்றை உங்கள் துணைவருக்கு சரியான விதத்தில் தெரியப்படுத்தவும், அவரது பாலியல் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், உங்கள் தகவல் பரிமாற்றத்தைச் சிறப்பாக்கவும், மேம்படுத்தவும் பாலியல் சிகிச்சை உதவக்கூடும். பாலியல் சிகிச்சை நிபுணருடன் அந்தரங்கமான பல விஷயங்களை நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும் என்பதால், அவரிடம் உங்களுக்கு நம்பிக்கை அவசியம். உங்கள் மருத்துவ நிபுணருடன் தடையின்றிப் பேச முடியவில்லை, நெருக்கமாக தகவல் பரிமாறிக்கொள்ள முடியவில்லை எனில், நீங்கள் வேறொரு நிபுணரிடம் செல்வது நல்லது.