Home இரகசியகேள்வி-பதில் Tamil Kelvi pathil ஆண்களுக்கு தேவையான சில பாலியல் கேள்விகள்

Tamil Kelvi pathil ஆண்களுக்கு தேவையான சில பாலியல் கேள்விகள்

240

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் செக்ஸ் ஹார்மோன் (ஆண்ட்ரோஜன்) ஆகும், இது விதைப்பைகளில் உற்பத்தியாகிறது.

டெஸ்டோஸ்டிரோன் இவற்றுக்கு அவசியமாகிறது:

தசை நிறை மற்றும் வலிமை
உடல் மற்றும் முக ரோமங்கள்
எலும்பு அடர்த்தி
பாலியல் ஆசை
விந்து உற்பத்தி

வயது அதிகரிக்கையில், டெஸ்டோஸ்டிரோன் அளவு படிப்படியாகக் குறையும் (ஆண்டுக்கு 1% குறையும்)டெஸ்டோஸ்டிரோன் குறையும் வீதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சில சமயம், இது குறைவதற்கு காரணம் தெரிவதில்லை. பெரும்பாலும் மருந்துகள், மன அழுத்தம் போன்றவை இதற்குக் காரணமாகின்றன.

இதற்கான காரணங்களில் சில:

களைப்பு
எலும்பு இழப்பு
தசை நிறை குறைதல்
விறைப்பின்மை
மன இறுக்கம்
பாலியல் விருப்பம் குறைதல்
டெஸ்டோஸ்டிரோனை ஊக்குவிப்பவை (Testosterone promoters)

டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க சில இயற்கை முறைகள் உள்ளன என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, அவற்றில் சில வழிகள் பின்வருமாறு:

போதுமான தூக்கம்: சிக்காகோவில் உள்ள யுனிவெர்சிட்டி ஆஃப் சிகாகோவில் ஆரோக்கியமான பத்து ஆண்கள் பங்கேற்று நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தூக்கம் குறைவதால் டெஸ்டோஸ்டிரோன் குறைகிறது என்று தெரியவந்தது. அவர்கள் நாளொன்றுக்கு 5 மணிநேரம் என கட்டுப்படுத்தப்பட்ட நேர அளவு மட்டுமே தூங்க அனுமதிக்கப்பட்டனர், அவர்களின் பகல்நேர டெஸ்டோஸ்டிரோன் அளவு 10-15% குறைந்தது கண்டறியப்பட்டது. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு ஆரோக்கியமான அளவில் இருக்க போதுமான தூக்கம் அவசியம் என்பதை இந்த ஆய்வு தெளிவாகத் காட்டியது.

சிங்கப்பூரில் உள்ள நேஷனல் யுனிவெர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், 29-72 வயதுப் பிரிவைச் சார்ந்த 531 சீன ஆண்கள் பங்கேற்றனர். அந்த ஆய்வில் அவர்களின் பாலியல் செயல்பாடுகளும் ஹார்மோன் அளவுகளும் கண்காணிக்கப்பட்டன. ஆண்கள் தூங்கும் நேரத்தின் அளவுக்கும் ஆண்ட்ரோஜென் அளவுக்கும் தொடர்புள்ளது என்றும், அவற்றின் அளவு குறைவை நிர்வகிப்பதற்கு தூக்கத்தை சீராக வைத்துக்கொள்வது உதவுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரியவந்தது.

எடையைக் குறைக்கவும்: மிதமான அளவு உடல் எடை அதிகரிப்பதற்கும் மொத்த டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதற்கும் தொடர்புள்ளது, அதே போல் அதீத உடல் எடை அதிகரிப்புக்கும் உடலில் தடையின்றிச் சுற்றிவரும் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதற்கும் தொடர்புள்ளது.

வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உள்ளவர்கள் எடை குறைப்பதன் மூலம் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் சீரான அளவுக்கு வருவதாகத் தெரியவந்துள்ளது.

எண்டோக்ரைன் டிஸ்ரப்டர்களால் பாதிக்கப்படுவதைக் குறைக்கவும்:எண்டோக்ரைன் டிஸ்ரப்டர் என்பது வெளிப்புறமிருந்து உடலுக்குள் வந்து சேரும் பொருளாகும், இவை உடலில் இரத்தத்தில் இயற்கையாகக் காணப்படும் ஹார்மோன்களின் உருவாக்கம், சுரப்பு, வளர்சிதைமாற்றம், பிணைப்பு செயல்பாடு, போக்குவரத்து அல்லது அகற்றத்தைப் பாதிக்கின்றன. இந்த ஹார்மோன்கள் வளர்ச்சி செயல்முறைகள், இனப்பெருக்கம் மற்றும் ஹார்மோன்களின் நீர்ச்சமநிலை ஆகியவற்றை இந்த ஹார்மோன்களே பார்த்துக்கொள்கின்றன. இந்த சேர்மங்கள் பிளாஸ்டிக், பூச்சி மருந்துகள் போன்றவற்றில் பெரிதும் காணப்படுகின்றன அல்லது உணவு அல்லது தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளில் மாசுபடுத்தும் பொருளாகக் காணப்படுகின்றன.

இது போன்ற பொருள்களால் உடல் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகளை எடுக்கவும், அதற்கு நீங்கள் செய்யக்கூடியவை:

பிளாஸ்டிக்கால் மூடப்பட்ட உணவுப்பொருள்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாக புதிதாக விளைவித்த பொருள்களை எடுத்துக்கொள்ளலாம்.
உணவையும் நீரையும் சேகரித்து வைக்க ஸ்டெயின்லஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாட்டில்கள் அல்லது கண்டெய்னர்களைப் பயன்படுத்தவும்.
பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் உள்ள உணவுப்பொருள்களை உண்பதைத் தவிர்க்கவும்.

துத்தநாகம் (ஜிங்க்) உள்ள உணவுப்பொருள்களை சேர்த்துக்கொள்ளவும்: தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், டெஸ்டோஸ்டிரோன் உருவாக்கத்தைப் பாதிப்பதில் துத்தநாகத்தின் பங்களிப்பு பற்றி ஆவணப்படுத்தப்பட்டது. டெஸ்டோஸ்டிரோன் அளவு சீராக இருப்பதற்கும் துத்தநாகம் அதிக அளவில் இருப்பதற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. முழு தானியங்கள், பீன்ஸ், கொட்டை வகைகள், நண்டு, பெரிய கடல் நண்டுகள் போன்றவற்றில் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது.

இறுதிக் கருத்து (Conclusion)

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு ஆரோக்கியமான அளவில் இருப்பதற்கு, வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களை செய்துகொள்வதும் போதுமான ஊட்டச்சத்தும் மிக அவசியமாகும். உங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டால், மேலே கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பின்பற்றுவதுடன் தீர்வுக்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படவும்.

உணவில் கொழுப்பு (Fat in diet)
எல்லோரும் உண்ணும் உணவில் கொழுப்பு உள்ளது, இது நமது உணவின் ஒரு அங்கமாகும். பொதுவாக பல உணவாதாரங்களில் நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத கொழுப்பாக இது காணப்படுகிறது.

நிறைவுற்ற கொழுப்புகள் பால் பொருள்களிலும் இறைச்சித் தயாரிப்புகளிலும் உள்ளன. விதைகள், பருப்புகள் மற்றும் காய்கறி எண்ணெய் வகைகளில் நிறைவுறாத கொழுப்புகள் உள்ளன. நிறைவுற்ற கொழுப்புகளில் தனித்த கார்பன் அணுக்களில் இரட்டைப் பிணைப்புகள் இருக்காது, நிறைவுறாத கொழுப்புகளில் அவற்றின் கொழுப்பு அமிலச் சங்கிலியிலேனும் குறைந்தது ஒரு இரட்டைப் பிணைப்பு இருக்கும். மேலும், நிறைவுற்ற கொழுப்புகள் அறை வெப்பநிலையில் திட நிலையில் இருக்கும், நிறைவுறாத கொழுப்புகள் திரவ நிலையில் உள்ளன.
உங்கள் உணவில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகளை எடுத்துக்கொள்வதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையலாம் என்பது வியப்பாகத் தோன்றலாம்.
கொழுப்பு உட்கொள்ளுதலும் விந்தணுக்கள் எண்ணிக்கையும் (Fat intake and sperm count)

போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 99 ஆண்கள் பங்கேற்றனர். இதில் இவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் விந்தணுவின் தரம் பற்றிய முழுமையான விவரங்கள் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வில் பின்வரும் விஷயங்கள் கண்டறியப்பட்டன:
உள்ளெடுக்கும் மொத்த கொழுப்பில் 5% அதிகரித்தாலும் அது விந்தணுக்களின் எண்ணிக்கை 18% குறைவதுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும்.
கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து நிறைவுற்ற கொழுப்பு உள்ளெடுக்கும் அளவில் 5% அதிகரித்தால், விந்தணுக்கள் எண்ணிக்கை 38% குறையலாம்.
கார்போஹைட்ரேட்டைக் குறைத்து மோனோசேச்சுரேட்டட் கொழுப்பு அல்லது பாலிஅன்சேச்சுரேட்டட் கொழுப்பு 5% உள்ளெடுப்பது மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கையுடன் தொடர்புடையதாகத் கண்டறியப்படவில்லை.
ஒமேகா-3 பாலிஅன்சேச்சுரேட்டட்கொழுப்பு அமிலங்கள் (PUFAகள்) விந்தணுக்கள் நகர்வுத் திறன் இயல்பாக இருப்பதுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

டானிஷ் ஆண்கள் 701 பேர் பங்கேற்று நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கையும் விந்தின் செறிவும் குறைவதற்கும் நிறைவுற்ற கொழுப்பு எடுத்துக்கொள்வதுடன் தொடர்பிருந்ததாகத் தெரியவந்தது. நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உட்கொள்ளும் ஆண்களின் குழுவில் உள்ளவர்களுக்கு விந்தின் செறிவு 38% குறைந்ததும் மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை 41% குறைந்ததும் தெரியவந்துள்ளளது.

ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமுள்ள ஓர் உணவாதாரமான பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதால் விந்தின் தரம் குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் விந்தணுக்களின் நகர்வுத்திறனும் (Omega-3 fatty acids and sperm morphology)
மனிதர்கள் பங்கேற்று நடத்தப்பட்ட பிற ஆய்வுகள் சிலவற்றிலும், ஒமேகா-3 கொழுப்பு அமில சத்துணவின் நன்மைகளையும், இயல்பான நகர்வுத்திறன் கொண்ட விந்தணுக்களின் மொத்த சதவீதம் அதிகரித்ததையும், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் நகர்வுத்திறன் அதிகரித்ததையும் தெரிவிக்கின்றன.
மனிதர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் மற்றும் தரத்திற்கு உதவுவதில் கொழுப்பு அமிலங்கள் எப்படி உதவுகின்றன என இந்த ஆராய்ச்சிகள் இதுவரை கண்டறியவில்லை.

இறுதிக் கருத்து (Conclusion)
ஆண்களின் குழந்தை பெறும் திறனின் மீது உணவிற்கு உள்ள தாக்கத்தைப் பற்றி ஆராய்ச்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன. விலங்குகளில் (பால் மற்றும் இறைச்சி) இருந்து கிடைக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைக்கின்றன, ஒமேகா-3 PUFAகள் போன்ற தாவரங்களில் இருந்து கிடைக்கும் நிறைவுறா கொழுப்புகள் விந்தணுக்களின் கட்டமைப்புக்கு அனுகூலமான விளைவுகளை ஏற்படுத்துகிறது மற்றும் விந்தணுக்களின் தலைப்பகுதியில் குறைபாடுகள் குறைவாக இருப்பதுடன் தொடர்புடையதாக உள்ளது.

மேலும், நிறைவுற்ற கொழுப்புகளை அதிகம் உள்ளெடுத்துக்கொள்வது ஆரோக்கியமற்றது என்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும் ஆபத்து மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாகும் ஆபத்துக்கும் தொடர்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நிறைவுறாத கொழுப்புகளை உணவில் சேர்த்துக்கொள்வதும் நிறைவுற்ற கொழுப்புகளைக் குறைப்பதும் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது, அதோடு நிறைவுறாத கொழுப்பை உள்ளெடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளால் அவர்களின் பொதுவான ஆரோக்கியமும் மேம்படுகிறது.