Home பாலியல் Tamil Girls sex இந்த காலத்து சிறுமிகள் மிக வேகமாக பருவமடைய இதெல்லாம் தான் காரணமாம்…

Tamil Girls sex இந்த காலத்து சிறுமிகள் மிக வேகமாக பருவமடைய இதெல்லாம் தான் காரணமாம்…

38

முன்பெல்லாம் பெண்கள் பருவமடைதல் என்பது 13-16 வயதுக்குள் நடந்து வந்தது. இது தான் இயல்பும் கூட. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் சில பெண் பிள்ளைகள் 8-9 வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள். அதற்கான காரணங்கள் தான் என்ன?…

அதற்கு வெறும் ஹார்மோன்கள் மட்டும் தான் பிரச்னையா?… அப்படியென்றால் அந்த ஹார்மோன்களைத் தூண்டுவது எது?

இந்த மாற்றங்கள் எதனால் ஏற்படுகிறது?

சென்ற பல நூற்றாண்டுகளில் ஏற்படாத இந்த மாற்றம், கடந்து பத்து ஆண்டுகளில் மிகப் பரவலாக காணப்படுவது ஏன் என்று நீங்கள் என்றாவது யோசித்ததுண்டா? இதற்கு ஒருவகையில் நமது வாழ்வியல், உணவுக் பழக்கங்களும் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மிக விரைவாக பருவமடைதல் என்பது நகர்ப்புற பகுதியில் வசிக்கும் பெண்கள் மத்தியில் அதிகப்படியாக காணப்படுகிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண் குழந்தைகள் மத்தியில் தான் 8 வயதில் பருவமடைவது மிக அதிகமாகக் காணப்படுகிறது.

ஆனால், இன்றளவிலும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மத்தியில் பருவமடைதல் என்பது 13-16 வயதில் தான் ஏற்படுகிறது. நகர்ப்புற, கிராமப்புறப் பகுதிகளுக்கு மத்தியில் இம்மாற்றம் மிகப் பெரிய அளவில் வித்தியாசப்படுவதன் காரணம் என்ன?…

பெண் குழந்தைகள் வேகமாக பருவமடைதலை Precocious Puberty என கூறுகின்றனர். ஒரு பெண் குழந்தை வேகமாக பருவமடைய போகிறாள் என்பதை, அக்குழந்தையின் மார்பக வளர்ச்சி மற்றும் உடல் பகுதிகளில் வளரும் முடி வளர்ச்சியை வைத்து கண்டறிய முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேகமாகப் பருவமடைவது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்களுக்கு நிறைய பாதிப்புகளை உண்டாக்குகிறது. இதனால் அடிக்கடி மனநிலை மாற்றங்கள் (Mood Swings), மாதவிலக்குக் கோளாறுகள் போன்றவை உண்டாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதோடு மட்டுமல்லாது இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

சிறுவயதில் உடல்பருமன்

பிராய்லர் சிக்கன் அதிகம் உண்பது

மரபணு மாற்றப்பட்ட காய்கறி, பழங்கள்

உணவுகளில் Bisphenol A (BPA) கலப்பு, பூச்சிக்கொல்லி

சிறுவயதில் அதிக மனஅழுத்தம் ஆகிய பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைதலை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பெண் பிள்ளைகளுக்கு அதிகமாக தாய்ப்பால் தர வேண்டும்

சோயா உணவுகளை தவிர்த்தல்

ஆர்கானிக் உணவுகள் சாப்பிட வேண்டும்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்

பிளாஸ்டிக் பெட்டி, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர், உணவு, ஜூஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

மரபணு மாற்றப்பட்டம், செயற்கை பால் உணவுகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.