Home பெண்கள் அழகு குறிப்பு Tamil beauty News உங்கள் மேனி பால் போல ஜொலிக்க வேண்டுமா?

Tamil beauty News உங்கள் மேனி பால் போல ஜொலிக்க வேண்டுமா?

28

மழையும் வெயிலும் மாறி மாறி உங்கள் சருமத்தைப் பாதிக்கிறதா? கவலையை விட்டுத் தள்ளுங்கள். தினமும் வீட்டில் பயன்படுத்தும் சில எளிய பொருட்களைக் கொண்டு, உங்கள் சருமத்தின் அழகை மீட்டெடுக்க முடியும்.

சில துளிகள் எலுமிச்சை சாறுடன் பால் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி நன்கு மசாஜ் செய்யுங்கள். அதன்பின், 15 நிமிடங்கள் வரை உலரவிட்டு, குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள் வேகமாக மறையும்.

ஒரு ஸ்பூன் கடலைமாவுடன் நான்கு ஸ்பூன் பால், சில துளிகள் தேன் மற்றும் ரோஸ்வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போன்று பூசுங்கள். 10 நிமிடங்கள் வரை நன்கு காயவிட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால், உங்கள் சருமம் பளபளப்பும் மென்மையும் அடையும்.

சிறிதளவு பாசிப்பருப்பை எடுத்துக் கொண்டு, நன்கு மாவாக்கிக் கொள்ளவும். அதனுடன் சில துளிகள் பாலைச் சேர்த்து, சருமத்தில் தடவி, விரல்களால் வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். பயத்தமாவு சிறந்த கிளன்சராகப் பயன்படுவதோடு, ஸ்கிரப்பாகவும் செயல்படுகிறது.

வெளியில் சென்று வீட்டுக்குத் திரும்பியவுடன், முதலில் மேக்கப்பை கலைக்க வேண்டும். அதன்பின், ஒரு கப் பாலில் கொஞ்சம் எலுமிச்சை சாறைச் சேர்த்து கலந்து கொண்டு, காட்டன் மூலம் அதைத் தொட்டு முகத்தில் ஒத்தி எடுக்கவும்.

இந்த எளிய வழிகள் உங்கள் மேனியைப் பால் போல் பளிச்சிடச் செய்யும்.