Home பெண்கள் அழகு குறிப்பு Tamil Beauty தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் பீட்ரூட் ஹேர்பேக்

Tamil Beauty தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் பீட்ரூட் ஹேர்பேக்

28

மன மழுத்தம் மற்றும் மாசுக்கள் காரணமாக உண்டாகிற முடி உதிர்தல் பிரச்னை தான் இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஊட்டச்சத்து மிக்க உணவுகளைச் சாப்பிடுவது அவசியம். அதேசமயம் தலைமுடியை சில ஆரோக்கியமான முறைகளில் பராமரிக்கவும் வேண்டும்.

காய்கறிகள் உடலுக்கு வலுவூட்டுவன என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சருமம் மற்றும் தலைமுடிக்கும் அவை வலு சேர்க்கின்றன. அவற்றில் ஒன்று தான் பீட்ரூட்

பீட்ரூட்டை வைத்து பேக் தயாரித்துத் தலைக்குப் போட்டு வருவதால் அதிக அளவில் தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

பீட்ரூட்டைத் துருவி 3 ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொண்டு, தண்ணீரில் போட்ட நன்கு கொதிக்க வைக்க வேண்டும். குறிப்பாக, தண்ணீர் பாதியளவுக்கு சுண்டுகிற வரைக்கும் கொதிக்க வைக்க வேண்டும்.

இப்போது தண்ணீரையும் பீட்ரூட்டையும் வடிகட்டித் தனித்தனியே வைத்துக் கொள்ளவும். வடிகட்டிய பீட்ரூட்டை நன்கு பேஸ்டாக்கிக் கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தேய்க்கவும்.

20 முதல் 25 நிமிடங்கள் வரை உலரவிட்டு, பின் மென்மையான ஷாம்பு கொண்டு, தலையை அலச வேண்டும். வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை காலை நேரத்தில் இவ்வாறு செய்து வர ஓரிரு வாரங்களிலேயே நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.

பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், புரதம் ஆகியவை தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

பீட்ரூட் தலைமுடியின் வேர்க்கால்களை வலுவடையச் செய்வதால் முடி உதிர்தல் தடுக்கப்படுகிறது.