Home ஆரோக்கியம் Tamidoctor வாய் துர்நாற்றத்தின் காரணங்களும் அதனைச் சரிசெய்யும் வழிகளும்

Tamidoctor வாய் துர்நாற்றத்தின் காரணங்களும் அதனைச் சரிசெய்யும் வழிகளும்

31

ஒருவர் வெளிவிடும் மூச்சில் விரும்பத்தகாத, சங்கடப்படுத்தக்கூடிய மணம் வீசுவதை வாய் துர்நாற்றம் என்கிறோம். இதனை ஃபீர் ஒரிஸ், ஓசோஸ்டோமியா, ஹேலிட்டோசிஸ் என்றும் குறிப்பிடுகின்றனர்.
பெரும்பாலும், பல்லில் உள்ள பிரச்சனைகளும் பிற உடல் பிரச்சனைகளுமே வாய்துர்நாற்றத்திற்குக் காரணமாக உள்ளன. வாய் துர்நாற்றம் பற்றியும், அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள் பற்றியும் அறிந்துகொள்ள எங்கள் இந்தக் கட்டுரையைப் பார்க்கவும்.

இந்தக் கட்டுரையில் வாய்துர்நாற்றத்திற்கான சில காரணங்கள் மற்றும் அதனைச் சரிசெய்யும் வழிகள் பற்றிப் பார்ப்போம். இங்கு கூறப்படுபவை பெரும்பாலும் பலருக்குத் தெரிந்திருக்காதவை.
டைமெத்தில் சல்பைடு போன்ற சல்பர் சேர்மங்களும் ஹைட்ரஜனும் உங்கள் வாய்துர்நாற்றத்திற்குக் காரணமாகும். துர்நாற்றமுள்ள ஒருவரின் சுவாசத்தில் உள்ள எளிதில் ஆவியாகக்கூடிய சல்பர் சேர்மங்களில் 90% இருப்பவை இவையே.
துர்நாற்றத்தின் காரணங்கள் குறித்து நாம் அறியாத சில தகவல்கள் (Some of the lesser known causes of bad breath are):
நாக்கின் பின்புறம் படிந்திருக்கும் நுண்ணுயிர்கள்: நன்றாகப் பல் துலக்கி, ஃப்ளாஸ் பயன்படுத்தி பல் இடுக்குகளையும் சுத்தம் செய்யும் நபர்களுக்கும் சில சமயம் வய துர்நாற்றம் இருக்கும், இவர்களுக்கு துர்நாற்றம் ஏற்படக் காரணம் அவர்களின் நாக்கின் பின்புறம் படிந்திருக்கும் நுண்ணுயிர்களாக இருக்கலாம். ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஸ்பூன் ஒன்றைக் கொண்டு, நாக்கின் பின்புறத்தில் லேசாகச் சுரண்டித் தேய்த்தால், நாக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொருள்கள் வந்துவிடும். சிலசமயம், அவை மஞ்சள் நிறத்தில் இருக்கலாம், தொடர்ந்து மூக்கின் பின்புறம் அதிகம் சளி உருவாவதால் இப்படி ஆகலாம். முதலில் அங்கு அதிக துர்நாற்றம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் பிறகு அதிக அளவில் நுண்ணுயிர்கள் அங்கு சேர்ந்து, பெருகும்போது வாய்துர்நாற்றம் ஏற்படும்.
வயிறு: நெஞ்செரிச்சல் போன்ற சில கடுமையான வயிற்றுப் பிரச்சனைகளாலும், வயிற்றில் இருக்கும் உணவுப்பொருள்களின் வாடை சுவாசத்துடன் சேர்ந்து வரக்கூடும்.

துர்நாற்றத்தைக் குறைக்க, பலரும் அறிந்திருக்காத சில வழிகள் (Little known ways of managing bad breath)
வாய்துர்நாற்றத்தை தற்காலிகமாகச் சரிசெய்ய இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
ஏலக்காய்
சோம்பு
பெருஞ்சீரகம்
கிராம்பு
இலவங்கப்பட்டை
வேர்க்கோசு (பார்ஸ்லீ)
பால்: மசாலா நிறைந்த உணவை எடுத்துக்கொண்டதால் உங்கள் வாயில் பூண்டு மனம் வீசுவதைத் தடுக்க வேண்டுமானால், ஒரு டம்ளர் பாலை அருந்தலாம் அல்லது கொழுப்பும் நீரும் நிறைந்துள்ள தயாரிப்புகளை உட்கொள்ளலாம். பூண்டு உள்ள உணவு வகையை உட்கொண்ட பிறகு பாலை அருந்துவதை விட, அதற்கு முன்பு பால் அல்லது கொழுப்பும் நீரும் நிறைந்த ஏதேனும் தயாரிப்புகளை உட்கொண்டால் துர்நாற்றம் வெகுவாகக் குறைகிறது என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.
உங்கள் துணைவருக்கு முத்திமிடுதல்: உங்கள் துணைவருக்கு முத்தமிடுவதன் மூலமும், அவரிடமிருந்து உங்கள் வாய்க்கு சில நல்ல நுண்ணுயிர்கள் வரக்கூடும், அவை உங்கள் வாயில் உள்ள நுண்ணுயிர்கள் சமநிலையைச் சரி செய்து உங்கள் வாய் துர்நாற்றம் குறையலாம் என்று டாக்டர். சீமாந்தினி தேசாய், MD கூறுகிறார். சுமார் 10 வினாடிகள் நெருக்கமாக முத்தமிடும்போது சுமார் 8 கோடி பாக்டீரியாக்கள் இடமாரைகின்றன என்று நெதர்லாந்தின் ஓர் ஆய்வின் அறிக்கை தெரிவிக்கிறது.