Home சமையல் குறிப்புகள் Sunday samiyal , வெடக்கோழி தொடை வறுவல்!

Sunday samiyal , வெடக்கோழி தொடை வறுவல்!

26

வெடக்கோழி தொடை வறுவலை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் தொடை – 8 துண்டுகள்( தோல், கொழுப்பு நீக்கியது)
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
ரொட்டித்துகள் – 1அல்லது 1/2 கப்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1
முட்டை – 2
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிக்கன், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு. கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

மைக்ரோ ஓவனில் வைத்தால் 3 அல்லது 4 நிமிடங்க்ள வேக வைத்தால் போதும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மசாலா கலந்து சிக்கன் தொடையை எண்ணெய்யில் இட்டு வதக்கவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் ரொட்டித்துகளை நிரப்பி அதில் பொரித்தெடுத்த சிக்கன் துண்டுகளை இட்டு நன்கு பிரட்டி முட்டை கலவையில் கலந்து அதே எண்ணெய்யில் மீண்டும் இட்டு வேக வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

வெடக்கோழி தொடை வறுவல் ரெடி!