Home அழகு குறிப்பு கூந்தல் அழகு துர்நாற்றம் வீசும் கூந்தலை மணக்க செய்ய சில டிப்ஸ்!!!

துர்நாற்றம் வீசும் கூந்தலை மணக்க செய்ய சில டிப்ஸ்!!!

40

கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் சருமம் கருமை அடைவது மட்டுமின்றி, அதிகப்படியான வியர்வையினால் தலையில் இருந்தும் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். இப்படி தலையில் இருந்து துர்நாற்றம் வீசினால், அருகில் வருவோரை தர்ம சங்கட நிலைக்கு தள்ளிவிடும்.

மேலும் தலையில் அதிகம் வியர்த்து துர்நாற்றம் வீசினால், அது ஸ்கால்ப்பில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும். எனவே கூந்தல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதனை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த நறுமண ஷாம்புக்களை வாங்கி தினமும் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. மாறாக அதற்கு இயற்கை தீர்வுகள் என்னவென்று கண்டு பிடிக்க வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை தலைக்கு பயன்படுத்தினால், அது துர்நாற்றத்தைப் போக்குவதுடன், கூந்தலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, ஈரமான முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று வாரம் ஒருமுறை செய்து வந்தால், தலையில் இருந்து வரும் துர்நாற்றம் தடுக்கப்படும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றினை தலைக்கு பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லை மற்றும் ஸ்கால்ப் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை எடுத்து, நீரில் கலந்து, ஷாம்பு போட்டு குளித்த பின்னர், தலையில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

தக்காளி ஜூஸ்

தக்காளியில் உள்ள ஆசிட், கூந்தலில் உள்ள pH அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுவதுடன், தலையில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தையும் தடுக்கும். ஆகவே தக்காளி சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஷாம்பு போட்டு குளித்தப் பின்னர், 1/2 கப் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து அலச வேண்டும். இதன் மூலமும் தலையில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

டீ ட்ரீ ஆயில் டீ ட்ரீ

ஆயிலை நீரில் கலந்து அதனை ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலச வேண்டும்.

வேப்பிலை

வேப்பிலை கூட தலையில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கும். அதற்கு வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த நீரை குளிர வைத்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கூந்தலை அலவ வேண்டும்.