Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்கள் ‘ஸ்லிம்’ அழகு பெற ஆசைப்பட்டால்…

பெண்கள் ‘ஸ்லிம்’ அழகு பெற ஆசைப்பட்டால்…

32

குண்டு பூசணிக்காய் போல தோற்றம் தர யாருக்குமே விருப்பமிருக்காது. அதிலும் பெண்கள் ‘ஸ்லிம்’ அழகுக்கு மிகவும் ஆசைப்படுவார்கள்.

ஆனால் சில பொருட்கள் கொழுப்பு நிறைந்தவை, அவற்றைச் சாப்பிட்டால் உடல் எடை போட்டுவிடும் என்று ஒதுக்கிவிடுகிறோம்.

கொழுப்பு நிறைந்ததாகக் கருதப்படும் அந்த உணவுகளைப் பயன்படுத்தியும் ‘ஸ்லிம்’மான தோற்றத்தைப் பேண முடியும் என்று நாம் அறிவோமா?

ஆம், கொழுப்பு உணவுகளில் உள்ள பல கொழுப்பு அமிலங்களால் பாதகமான விளைவுகள் ஏற்பட்டாலும், நன்மை பயக்கக்கூடிய சில கொழுப்பு அமிலங்களும் இருக்கவே செய்கின்றன.

எனவே, பின்வரும் உணவுகளை உட்கொண்டும் ‘ஸ்லிம்’ அழகைக் காக்கலாம்.

அவகேடோ ஒரு பூரிதமற்ற கொழுப்பு அமில உணவாக உள்ளது. இதில் உள்ள ஒலியீக் அமிலம், அளவுக்கு மீறிய பசி தூண்டுதலை கட்டுப்படுத்துகின்றது. தவிர, உடலில் உள்ள அதிக கொழுப்புச் சத்தை எரிக்க உதவும் புரதம், நார்ச்சத்து ஆகியவை அதிகளவில் உள்ளன.

அதிக அளவில் கொழுப்பு அமிலம் நிறைந்த உணவாக தேங்காய் உள்ளது. இது லாரிக் அமிலத்தை அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடியது. இந்த அமிலம் உடலில் கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், அடிவயிறு பருப்பதையும் தடுக்கிறது.

இடை பருமனாவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. அதாவது, உடல் பருமனைத் தூண்டும் கொழுப்புகளை உறிஞ்சுவதைத் தடுக்கும் கலவைகள் பாதாம் பருப்பில் இருக்கிறதாம்.

உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் யோகர்ட்டுக்கும் இடமுண்டு. இதில் புரோபயாடிக் பாக்டீரியாக்களும் நிறைந்திருப்பதால் அவை அடிவயிற்றுப் பருமனைத் தடுக்கின்றன.