Home ஆரோக்கியம் தூக்கம் சொக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!

தூக்கம் சொக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!

33

625-0-560-350-160-300-053-800-668-160-90பொதுவாக சில பேருக்கு சாதாரணமாகவே பகலில் தூக்கம் சொக்கி எடுக்கும்.

அதுவும் இரவு நேரத்தில் எவ்வளவு தூங்கி எழுந்து அலுவலகம் சென்றாலும் தூக்கம் வந்து கொண்டே இருக்கும்.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் சாப்பிடும் குறிப்பிட்ட ஒருசில உணவு வகைகளில் உள்ள உட்பொருட்கள் நமது உடம்பின் சோம்பலை அதிகரித்து, அதிகமான தூக்கத்தை வரவைக்கிறது.

எனவே நமது உடம்பின் புத்துணர்ச்சியை கெடுத்து அதிக அளவில் தூக்கத்தை வரவைக்கும் உணவுகளை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த உணவுகளை அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பும், உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சாதம்

நாம் தினமும் சாப்பிடும் சாதத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது.

இதனால் மதிய வேளையில் நாம் உணவு சாப்பிட்ட பின் பலருக்கு தூக்கம் சொக்குகிறது.

எனவே இந்த சாதத்தை காலையில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

வெள்ளை பிரட்

வெள்ளை பிரட்டில் கார்போஹைட்ரேட்டுடன் மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருக்கிறது.

எனவே இந்த உணவுப் பொருட்களை நாம் சாப்பிடுவதால், எளிதில் செரிமானம் ஏற்படாமல், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் நமது உடம்பின் சோம்பல் தன்மையை அதிகரித்து, தூக்க உணர்வை ஏற்படுத்துகிறது.

ஹம்மஸ்

கொண்டைக் கடலை கொண்டு தயாரிக்கப்படும் ஹம்மஸில், தூக்கத்தை வரவழைக்கும் ட்ரிப்டோபேன் உள்ளது.

எனவே தான் கொண்டைக்கடலை அல்லது ஹம்மஸை சாப்பிட்டால் நமக்கு அளவுக்கு அதிகமான தூக்கம் சொக்குகிறது.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளது.

எனவே இந்த மாட்டிறைச்சியை நாம் சாப்பிடும் போது அது செரிமானம் அடைவதற்கு அதிகப்படியான ஆற்றலை நமது உடலின் அனைத்து பாகங்களில் இருந்து எடுத்துக் கொள்கிறது.

இதனால் நமது உடல் சோம்பலாகி அதிகமான தூக்கம் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இனிப்புகள்

இனிப்பு பலகாரங்களை நாம் அதிகமாக சாப்பிடும் போது, நமது உடலில் இன்சுலின் அளவு அதிகமாக வெளியேற்றப் படுகிறது.

இதனால் நம் மூளையில் செரடோனின் என்னும் தூக்கத்தை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது.

எனவே நாம் இனிப்புகள் அதிகமாக சாப்பிடும் போது, அதிக தூக்கத்தை ஏற்படுத்துகிறது.