Home ஆண்கள் தூக்கத்தில் அடிக்கடி விந்து வெளியேறுகிறதா? அதனால் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?

தூக்கத்தில் அடிக்கடி விந்து வெளியேறுகிறதா? அதனால் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?

104

captureஆண்களில் சிலருக்கு தூங்கிக் கொண்டிருக்கும் போதே விந்து வெளியேறுதல் உண்டு. அதற்குக் காரணங்கள் தான் என்ன? அதனால் ஏதேனும் ஆரோக்கிய பிரச்னைகள் உண்டாகுமா என்று பலருக்கும் சந்தேகமுண்டு.

ஆண்களுக்கு தூக்கத்தின் போது விந்து வெளியேறுவதுண்டு. இதற்கு முக்கியமான காரணம், ஆண்கள் எப்போதும் உடலுறவு குறித்து நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே விந்து வெளியேற்றம் நிகழ்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் உடலுறவு பற்றிய எண்ணத்துக்கும் விந்து வெளியேறுவதற்கும் சம்பந்தம் கிடையாது.

ஆண்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது தூக்கத்தில் விந்து வெளியேறும் அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தூக்கத்தில் விந்து வெளியேறுவது எல்லா ஆண்களுக்கும் உண்டாவதில்லை. அப்படியே நிகழ்ந்தாலும் அதை நினைத்து பயப்படத் தேவையில்லை. அது சாதாரணமான ஒரு நிகழ்வு தான்.

ஆண்கள் பருவமடையும் போது இனப்பெருக்க மண்டலத்தில் விந்தணு உற்பத்தி செய்யப்படும். அதனால் ஆண்கள் பருவமடைந்த சமயங்களில் தான் தூக்கத்தில் விந்து வெளியேறுவது அடிக்கடி நடைபெறும்.

குப்புறப்படுத்தலும் விந்து வெளியேற்றத்துக்கு ஒரு காரணம். குப்புறப் படுக்கும் போது, ஆணுறுப்பு படுக்கையில் உராய்வதால் விந்து வெளியேற்றம் நிகழ்கிறது.

விந்துப்பை நிரம்பியுள்ளதாலேயே விந்து வெளியேற்றம் நிகழ்கிறது. இதற்கு சுய இன்பம் நல்ல தீர்வாக இருக்குமென்று கூறப்படுகிறது.