Home ஆரோக்கியம் ஆண்கள் ஏன் அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும்?

ஆண்கள் ஏன் அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும்?

39

gentsமனித உடல் அமைப்புக்கு ஏற்றவாறு அவர்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது நியதி. மனிதன் இயற்கையை கழிப்பதற்குக் கூட, தனது உடல் அமைப்பு ஒத்துழைக்க வேண்டும்.

இந்த முறைப்படி கொண்டு வந்ததுதான் ”இந்தியன் டாய்லெட்” மற்றும் ”வெஸ்டர்ன் டாய்லெட்” கள். இவற்றில் மனித உடல் அமைப்புக்கு ஏற்றது வெஸ்டர்ன் டாய்லெட் தான் என்று தற்போது டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அனுபவத்திலும், இதை பயன்படுத்துபவர்கள் உணர்ந்து வருகின்றனர்.

இதேபோல் ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது, உட்கார்ந்துதான் போக வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆய்வாளர்களும் ஆண்கள் அமர்ந்துதான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி செய்யும்போது பாக்டீரியா பரவுவது தடுக்கப்படுமாம்.

உட்கார்ந்துதான் சிறுநீர் போவதுதான் ஆரோக்கிமும் கூட. இது கழிப்பறையை சுத்தம் செய்பவர்களுக்கும் எளிதாக இருக்கும் என்கின்றனர்.

அமர்ந்து சிறுநீர் கழிப்பதால், பித்தப்பையில் இருக்கும் அனைத்து சிறுநீரும் வெளியேற்றப்பட்டு, ஆண்களுக்கான சுரப்பிகள் நன்றாக செயல்பட்டு அவர்களது செக்ஸ் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.