Home ஆரோக்கியம் சிறுநீர் வெள்ளையாகப் போகிறதா?… அது எதோட அறிகுறின்னு தெரியுமா?

சிறுநீர் வெள்ளையாகப் போகிறதா?… அது எதோட அறிகுறின்னு தெரியுமா?

24

உடலின் செயல்பாட்டிற்கு தேவையான தண்ணீர் போதுமானதாக இல்லாமல் இருக்கும் போது, உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படாமல் சிறுநீரகம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

சிறுநீரக துர்நாற்றத்தை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பூண்டு ஒரு நேச்சுரல் ஆன்டி-பயாடிக் என்பதால், இதில் இரண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால், சிறுநீரில் உள்ள சீழ் செல்கள் அழிக்கப்பட்டு, துர்நாற்றம் தடுக்கப்படும்.

கிரான்பெர்ரியில் (குருதிநெல்லி) உள்ள அமிலம் பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றும் தன்மைக் கொண்டது. எனவே சிறுநீர் துர்நாற்றத்துடன் இருந்தால், கிரான்பெர்ரி ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

2 டீஸ்பூன் மல்லி விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வடிகட்டி குடித்து வந்தால், சிறுநீரில் உள்ள சீழ் செல்கள் அழிக்கப்படும்.

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் அதை ஒரு முறை குடித்து வந்தால், உடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் சீர் செல்களின் உருவாக்கத்தை தடுக்கலாம்.

1 டீஸ்பூன் பட்டைத் தூளை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் அதில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலினுள் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

வெள்ளரிக்காய் ஜூஸை தினமும் இருவேளை குடித்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் சிறுநீரின் வழியே வெளியேறி, உடல் குளிர்ச்சி அடைவதுடன், சிறுநீரில் சீழ் செல்களின் உருவாக்கத்தைத் தடுக்கலாம்.

தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளது. இது சிறுநீரில் சீழ் செல்களை அழித்து வெளியேற்றுகிறது. எனவே தினமும் ஒரு டம்ளார் தயிரை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.