Home பாலியல் ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பதைப் பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பதைப் பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

33

0ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பதைப் பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

பெண்களைப் பொறுத்தவரை, உடல்ரீதியாகக் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன.

* மார்பக அளவு பெரிதாகிறது

* மார்பகக் காம்பு எழுச்சி அடைகிறது

* பெண் உறுப்பில் திரவம் சுரத்தல்

* பெண் உறுப்புச் சுவர்கள் உறவுக்குத் தயாராக வழுவழுப்புத் தன்மை அடைதல்

* பெண் உறுப்பின் மேல் இருக்கும் கிளைட்டோரிஸ் எனப்படும் மணியானது எழுச்சி அடைதல்

* உறவுக்கு ஏற்ற வகையில் பெண் உறுப்பின் உள்பக்கம் இருக்கும் உள் உறுப்புகள் உறுதி அடைதல்

* கண்ணின் பாப்பா விரிவடைதல்

* பெண் உறுப்பின் சுவர்கள் வீக்கமடைதல் போன்றவற்றை பெண்களுக்கு உண்டாகும் செக்ஸ் ஆர்வத்தின் அல்லது ஆசையின் அறிகுறியாகச் சொல்ல முடியும்.

அதுபோல், ஆண்களுக்கும் செக்ஸ் ஆசை உண்டாகி இருப்பதை கீழ்க்கண்ட அறிகுறிகளில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

* ஆண் உறுப்பில் உண்டாகும் எழுச்சி

* விதைப்பைகள் வீக்கம் அடைதல்

* உறுப்பின் நுனியில் சிறிதளவு திரவம் வெளிப்படுதல்

* உறுப்புகளில் நரம்புகள் வீக்கமாதல்

* உடலில் இருந்து வாசனை வெளிவருதல்

* கண்மணி விரிவடைதல் போன்ற அறிகுறிகளை ஆண்களுக்கான செக்ஸ் ஆசை வெளிப்பாடுகளாகச் சொல்லலாம்.

செக்ஸ் ஆசையின் அடுத்தகட்ட நிலை, செயல்பாடு. அதாவது, ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் வழி. இந்தச் செயல்பாட்டின் இறுதிக்கட்டமாகவே உச்சகட்டத்தைச் சொல்ல வேண்டும்.

ஆண்-பெண் இருவரும் கலவியில் உச்சகட்டத்தை ஒவ்வொரு உறவின்போதும் அனுபவிக்க இயலும்.

உச்சகட்டத்தின்போது என்ன நிகழ்கிறது என்பதை மருத்துவரீதியாகக் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.

ஆண்களைப் பொறுத்தவரை, பரவச நிலை எனப்படும் உச்சகட்டத்தின்போது, பிராஸ்டேட் சுரப்பி, சிறுநீர் வெளியேறும் வழி மற்றும் ஆண் உறுப்பின் அடிப்பகுதி தசைகளில் விரைவான சுருக்கங்கள் ஏற்படும்.

உடனடியாக இந்த நேரத்தில் ஆண் உறுப்பு வழியாக மிகுந்த அழுத்தத்துடன் விந்து வெளியேற்றப்படுகிறது. ஒரு பரவச நிலைக்குப்பின் உடனடியாக மற்றொரு பரவசநிலை அடைவதற்கு ஆண்களுக்கு வாய்ப்பில்லை.

ஆனாலும், ஒருவரின் வயது அல்லது ஆசையைப் பொறுத்து மீண்டும் பரவச நிலை ஏற்படும் காலம் மாறலாம். அதாவது, மிகவும் இளவயதினருக்கு இரண்டு நிமிடத்துக்கும் குறைவான அளவில் மீண்டும் எழுச்சி நேரலாம்.

சிலருக்கு அரை நாள் வரையிலும் ஆகலாம்.

tabu7 உச்சக்கட்ட அறிமுகம்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-11) Tabu7பெண்களைப் பொறுத்தவரை உச்சகட்டம் எனப்படும் பரவச நிலைக்கு முன்பு, பெண் உறுப்பின் சுற்றுச்சுவர்கள் சில சுரப்பிகளின் செயல்பாடுகளால் ஈரமாகிறது.

மேலும், அதிக ரத்தம் பாய்வதால், கிளைட்டோரிஸ் விரிவடைகிறது.

சில பெண்களுக்கு உடல் முழுவதும் கூடுதல் ரத்தம் பாய்வதால், உடல் சிவந்துபோவது உண்டு.

பரவச நிலை ஏற்படும்போது, பெண் உறுப்பின் உதடுகள் இறுக்கமாகிறது.

உறுப்பின் உள்பக்கச் சுவர்கள் சுமார் 30 சதவீதம்வரையிலும் சுருங்கி ஆண் உறுப்பை இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறது.

அதன்பிறகு யூட்ரஸ் எனப்படும் கருப்பைத் தசைகள் சுருக்கமடைகின்றன.

இதைத் தொடர்ந்து உச்சகட்ட நிலை ஏற்படும்போது, பெண் உறுப்பின் உதடுகள், உள்பக்கச் சுவர்கள் ஆகியவை சுருங்கி விரிகின்றன. இந்த நேரங்களில், சில பெண்களுக்கும் காம நீர் சுரக்கப்படுவது உண்டு.

சிலருக்கு, சுரக்கும் காம நீரின் அளவு மிகவும் குறைவாக இருக்கும்பட்சத்தில் அப்படிப்பட்ட நிகழ்வு நடந்த அறிகுறி வெளிப்படையாகத் தெரிவதில்லை.

பெண்களால் சிறிய இடைவெளிகளில் பலமுறை உச்சகட்ட இன்பத்தை அனுபவிக்க முடியும்.