Home சூடான செய்திகள் ஆபாச படங்கள் தொடர்பாக மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கை…

ஆபாச படங்கள் தொடர்பாக மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கை…

37

ஆபாச படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களது குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது என்று மக்களிடையே நிலவும் கூற்று உண்மையல்ல என்பது பலகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆபாச படங்களை தொடர்ந்து பார்ப்பவரது மூளை, தொடர்ந்து அதைப்பற்றிய சிந்தனைகளையே அசைபோட்டுக்கொண்டிருக்கும், இதன்காரணமாக அவர்களது குடும்ப உறவு நிம்மதியாக இருக்காது என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக உள்ளது.

1980ம் ஆண்டுவாக்கில் பேராசிரியர் டக்ளஸ் கெண்ட்ரிக் மேற்கொண்ட ஆய்வில் பெண் நிர்வாணமாக இருக்கும் ஆபாச படங்களை தொடர்ந்து பார்க்கும் ஆண்களுக்கு, தங்கள் துணையின் மீதான ஈர்ப்பு படிப்படியாக குறையத்துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கெண்ட்ரிக் ஆய்வை அடிப்படையாக கொண்டு பல்வேறு ஆய்வுகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன. இதன்முடிவுகள் அனைத்தும் மாறான முடிவுகளையே வழங்கின.

மனிதன், இன்று நேற்றல்ல, நீண்டகாலமாகவே ஆபாச படங்களை தொடர்ந்து பார்த்துவருகிறான், அவனது குடும்ப வாழ்க்கை எவ்வித சர்ச்சையுமின்றி சீராக தான் சென்று கொண்டிருக்கிறது. எனவே, குடும்ப உறவுக்கும், ஆபாச படங்கள் பார்ப்பதற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது இதன்மூலம் புலனாகியுள்ளது…