Home பாலியல் இந்த 8 செக்ஸ் விஷயங்கள் மீதான உங்கள் அச்சம் முற்றிலும் தவறானவை

இந்த 8 செக்ஸ் விஷயங்கள் மீதான உங்கள் அச்சம் முற்றிலும் தவறானவை

41

இல்லற வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் இருந்து, கர்ப்பம், பிள்ளை பேறு, அதன் பிறகு, நடுவயதில் என தாம்பத்தியம் சார்ந்த சந்தேகங்கள், அச்சங்கள் ஆண், பெண் மத்தியில் நிறையவே இருக்கின்றன. இந்த அச்சங்கள் இருவகை படுகின்றன. ஒருவகை உண்மையான தவறு அல்லது தாக்கம் குறித்தவை, மற்றவை செவி வழியாக கேட்டு, உண்மை என்ன என்ற தெளிவு இல்லாமல் பிறக்கும் அச்ச உணர்வு. இதில், செக்ஸ் பற்றிய இந்த 8 விஷயங்கள் குறித்து இனிமேலும் நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை செக்ஸ் சிகிச்சையாளர்களே கூறுகின்றனர்…

#1 எந்நேரமும் முடியாது! சிலர் ஆண்கள் எந்த நேரமாக இருந்தாலும், செக்ஸில் ஈடுபடும் திறனுடன் இருக்க வேண்டும் என எண்ணுவர். ஆனால், அப்படி இல்லை, அவரவர் ஆரோக்கியம், சூழல், சோர்வு, மனநல மாற்றம் என பல காரணத்தால் செக்ஸில் ஈடுபட முடியாமல் போகலாம். செக்ஸ் என்பது தானாக தூண்டப்பட்ட வேண்டியது. அதை வலுக்கட்டாயமாக கொண்டுவருதல் கூடாது.

#2 உச்சக்கட்ட இன்பம் அடைந்தால் தான் செக்ஸ்! செக்ஸ் என்பது பிறப்புறுப்பு வாயிலாக உடல் ரீதியாக இணைவது மட்டும் அல்ல, முத்தமிட்டுக் கொள்வது, கட்டியணைத்துக் கொள்வது, ஓரல் மற்றும் தானாக தூண்டப்படுவது எல்லாமே செக்ஸ் தான். சிலருக்கு உடலுறவில் ஈடுபடும் போது உச்சக்கட்ட இன்பம் அடையவில்லை என்பதால் அவர் செக்ஸில் முழுமையாக ஈடுபட வில்லை என கூறிவிட முடியாது.

#3 ஹாட் நிலை அடைந்தால் தான் முழுமை! பலரும் பார்ன் படங்கள் கண்டு, அவர்களை போன்றே உணர்ச்சி வெளிப்பட்டால் தான் முழுமையான இன்பம் அடைதல் என்று கருதுகின்றனர். ஆனால், அப்படி அல்ல, அவர்களும் நடிகர்கள் தான். அவர்கள் காணொளிப்பதிவுக்காக நடிப்பதும் உண்டு. முழுமையான செக்ஸ் என்றால் சூடப்பறக்க நடக்க வேண்டும் என்பது இல்லை.

#4 துரோகம் எழுவதற்கு செக்ஸ் தான் காரணம்! ஒரு நபர் செக்ஸ் ரீதியாக தனது துணையை ஏமாற்றுவதற்கு செக்ஸ் மட்டுமே காரணம் அல்ல. ஒரு நபர் தனது துணையிடம் இருந்து மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அல்லது சரியான இணக்கம், புரிதல் கிடைக்காத போது, அது வேறு நபரிடம் இருந்து கிடைக்க பெற்றால், அவருடன் இணைகிறார்கள்.

#5 பிறப்புறுப்பு வாயிலான இன்பம்! பல ஆண்கள் பெண்கள் சீக்கிரமாக பிறப்புறுப்பு வாயிலான இன்பம் எளிதாக எட்டிவிடுவார்கள் என கருதுவது உண்டு. ஆனால், அது தவறு. எல்லா பெண்களுக்கு சீக்கிரமே பிறப்புறுப்பு வாயிலான இன்பம் எளிதில் ஏற்படுவதில்லை. சிலருக்கு ஏற்படாமலே கூட போகலாம். இந்த ஒரு விஷயம் பல தம்பதிகள் வாழ்க்கையில் சோர்வும், மன அழுத்தமும் உண்டாக காரணியாக இருக்கிறது.

#6 முதல் சந்திப்பிலேயே! சிலர் முதல் சந்திப்பிலேயே செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள். அப்படி செக்ஸ் வைத்துக் கொள்ள துணை ஒத்துழைக்கவில்லை எனில், அவருக்கு ஏதோ பிரச்சனை, அவர் நம்மை விரும்பவில்லை என கருத துவங்கிவிடுகிறார்கள். இது தவறு. என்னதான் திருமணமே ஆகியிருந்தாலும், மனதளவில், உடல் அளவில் ஒருவர் தயார் ஆனால் தான் தாம்பத்திய உறவில் ஈடுபட விரும்புவார். முக்கியமாக பெண்கள்.

#7 லூப் (lube) பயன்படுத்தினால் தான் தூண்டுதல் ஏற்படும் என்பதில்லை. ஆம், லூப் என்பது ஒரு கருவி போல. சில சமயங்களில் பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்பட்டால் உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படும். இதே சாதாரண நிலையில் இருந்தால் லூப் உதவி தேவையில்லை. எனவே, லூப் என்பது வலியை தவிர்க்க உதவும் ஒரு கருவி மட்டுமே என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

#8 ஒரே மாதிரியான உணர்ச்சி இல்லை என்றால் உறவு நிலைக்காது! சிலர் கணவன் மனைவி மத்தியில் ஒரே மாதிரியான உணர்ச்சி நிலை இல்லை எனில் பந்தம் மகிழ்ச்சியாக நீடிக்காது என எண்ணுகின்றனர். இது தவறு! வெவேறு ஆண் மற்றும் வெவ்வேறு பெண் என அனைவர் மத்தியிலும் இந்த உணர்ச்சி நிலை வேறுபடும். எனவே, உணர்ச்சி நிலை தம்பதிகளின் இல்வாழ்க்கை இன்பத்தை தீர்மானிக்கும் என்பது தவறு.