Home ஆரோக்கியம் இப்படியும் நடக்கும்:

இப்படியும் நடக்கும்:

32

நம்மில் பலர் பாலியல் தொடர்பான விஷயங்களை பார்ப்பதாலோ வாசிப்பதாலோ உறவுகளில் எந்த வித சிக்கல்களும் ஏற்படாது என கருதலாம். ஒரு சிலரோ அவை தங்களுக்கு நேர்மறையாக உதவுவதாகக் கருதலாம். ஆனால் அது முற்றிலும் தவறு என்கிறது ஒரு ஆய்வு.

ஆம். (FLORIDA STATE UNIVERSITY) இல் மாணவர்களை (அதாவது இளைஞர்கள்) இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தியது ஆராய்ச்சிக்குழு.

அவற்றுள் பாதி பேர் 3 வாரங்களுக்கு, பாலியல் தொடர்பான எந்த விஷயங்களையும் பார்க்கவோ வாசிக்கவோ கூடாது(ADULT CONTENTS). நிர்வாண படங்களை கூட பார்க்க கூடாது.

3 வாரங்களுக்குப் பிறகு அவர்களை சோதித்துப் பார்த்ததில், இவற்றைத் (PORNOGRAPHY) தவிர்த்தவர்கள் உறவுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் மிகவும் ஈடுபாட்டோடு தங்கள் துணையோடு இணங்கி இருந்தது தெரியவந்தது. ஆண், பெண் இருபாலருக்கும் இது பொருந்தியது.

இதனோடு (PORNOGRAPHY) அதிகம் ஈடுபாடு கொண்டவர்கள், தங்கள் துணைக்கு துரோகம் செய்கிறார்களா என்ற கோணத்தில் ஒரு கேள்வி எழுந்தது. இதற்கு பதில் “ஆம்” என்று இருந்தது. அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம். அது உண்மை தான்.

அந்த மாணவர்களுக்கு இது குறித்த சில கேள்விகள் அடங்கிய ஒரு தொகுப்பு கொடுக்கப்பட்டது. அந்தத் தொகுப்பில் இருந்த கேள்விகள் இப்படித்தான் இருந்தன. பாலியல் சம்பந்தமான பழக்க வழக்கங்கள், துணையுடனான இணக்கம் மற்றும் உங்கள் துணையைத் தவிர எத்தனை பேருடன் உறவு வைத்திருந்தீர்கள் போன்றன.

இவர்களுள் பாலியல் சம்பதமான (PORNOGRAPHY) விஷயங்களில் ஈடுபடுபவர்கள் அவற்றில் அதிக நாட்டம் கொண்டவர்கள் தங்கள் துணையுடன் (SOUL MATE) சற்று விலகி, இணக்கம் இல்லாமல் இருப்பதும். நாட்டம் அதிகரிக்க அதிகரிக்க இந்த இணக்கமற்ற நிலை அதிகரிப்பதும் தெரிய வந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் துணைக்கு நம்பிக்கைக்கேடு (UNFAITHFULNESS) செய்கிறார்கள்.

ஏன் இப்படி ஏற்படுகிறது?

பாலியல் விஷயங்கள் அவர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மற்றவர்களிடம் உள்ள ஈர்க்கத்தகுந்த விஷயங்கள் தங்கள் துணையிடம் இல்லை என்று நினைக்கிறார்கள். அதனால் தங்கள் துணையை விட்டு சற்று விலகி வேறு ஒருவரோடு உடல் ரீதியாக நெருங்கி இருக்கிறார்கள். (உங்கள் துணையிடம் ஈர்ப்பு இல்லாத விஷயங்களாக நீங்கள் கருதுவதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்). நமக்கு அதிக எண்ணிக்கையில் இது போன்ற உடல் ரீதியான உறவுகள் கிடைக்கையில் நாம், நமது துணையிடம் அதிக ஈடுபாடு காண்பிக்காமல், தகாத உறவுகளில் அதிகம் நாட்டம் கொள்கிறோம்.

இவை வெறும் கற்பனையான எண்ணங்களாக (FANTASIZATION ) இருந்தாலும் சரி, உண்மையாக (REAL SOURCES) இருந்தாலும் சரி, இந்த தருணங்களில் நமக்கு முன் நமது உணமைத்துனை இருந்தாலும் நாம் அவர்களை கண்டுகொள்வது இல்லையாம். அந்த அளவிற்கு இந்த பாலியல் குப்பைகள் நமது எண்ணங்களில் ஆட்கொண்டுவிடுவதாகச் சொல்கிறார்கள்.

இவை எல்லாம் ஒரு மாயை , நிஜம் இல்லை. இவை நமக்கு ஒரு மாற்று மகிழ்ச்சியைக் (ALTERNATIVES) கொடுப்பதாக நினைக்கத் துவங்கும் நேரத்தில் நான் நமது துணையிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் மற்றும் உணர்வு ரீதியாக விலக ஆரம்பிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் நினைக்கலாம், இவை எல்லாம் நமது துணை உடனான உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று. ஆனால் உண்மை என்னவென்றால், நாம் துணையுடன் இருக்கையில், நாம் யார் மீது, எதன் மீது கவனம் செலுத்துகிறோம் என்பதைப்பொருத்து தான் இருக்கிறது. உங்கள் துணையை தவிர வேறு எண்ணங்கள் உங்களை ஆட்கொள்ளும் என்றால், சந்தேகமே இல்லை, நீங்கள் நிச்சயமாக இந்த மாயையில் முழுவதுமாக சிக்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களது வாழ்க்கை உண்மையாக, உங்கள் துணையை மட்டுமே சுற்றி, அன்புடனும், காதலுடனும், நம்பிக்கையுடனும் வெகு காலத்திற்கு இயங்க வேண்டுமென்றால் இந்த பொய்யான சந்தோஷங்களில் (FAKE THRILLS OF PORNOGRAPHY BEHIND) இருந்து வெளியில் வந்தே ஆக வேண்டும்.

இப்பொழுது உங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் தருகிறேன்:

நீங்கள் உங்களையே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். மேற்கூறியவை போல உங்களிடம் ஏதேனும் மாற்றுதல் இருக்கிறதா? அதாவது உடல் ரீதியான வேறு உறவு மற்றும் எண்ணங்கள்? அதனால் உங்கள் துணையிடம் சற்று இடைவெளி காண்பிக்கிறீர்களா? அதனால் நீங்கள் மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறீர்களா? “ஆம்” என்பது உங்களது பதிலானால் இந்தப்பதிவு நிச்சயமாக உங்களுக்கானது தான்.

சீக்கிரம் இந்த மாயையில் இருந்து வெளியில் வந்துவிடுங்கள். இல்லையேல் மிக அற்புதமான தரணங்களை, ஒரு நல்ல துணையை நீங்கள் இழக்க நீங்கள் இழக்க நேரிடும். கள்ளக்காதலில் சிக்கி உங்கள் சுயத்தை இழந்து சின்னாபின்னம் ஆகிவிடுவீர்கள்.

இந்தப்பதிவை வாசித்து முடிக்கையில் உங்களின் மனதில் ஏதேனும் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றுகிறது என்றால், உங்களுக்கு ஒரு சபாஷ்!!! நீங்கள் 50% நல்லதை நோக்கி கடந்து விட்டீர்கள். இன்னும் 50% ஐ எப்படியேனும் கடந்து விடுங்கள்.