Home பெண்கள் பெண்குறி பிறப்புறுப்பில் அரிப்பை ஏற்படுத்தும் வழிகள்? தடுப்பது எப்படி?

பிறப்புறுப்பில் அரிப்பை ஏற்படுத்தும் வழிகள்? தடுப்பது எப்படி?

100

அரிப்பு என்பது உடலின் பொது இடத்தில் வந்தாலே சமாளிப்பது என்பது சங்கடம் தரக்கூடிய ஒன்று தான். அப்படி இருக்க, பிறப்புறுப்பில் உண்டாகும் அரிப்பின் வலியை வார்த்தைகளால் அவ்வளவு சீக்கிரம் வருணிக்க இயலாது என்பதே உண்மை. அப்படிப்பட்ட அரிப்பு எதனால் ஏற்படுகிறது? எப்படி நாம் தடுப்பது? வாங்க பார்க்கலாம்.

1. முடியை நீக்குவதால்:
ஒரு சிலருக்கு பிறப்புறுப்பில் இருக்கும் முடியை அகற்ற, அதனால் அரிப்பு என்பது ஏற்படும். இதற்கு காரணம் நீங்கள் பயன்படுத்தும் ரேசர் தான். நீங்கள் இறுக்கமாக உடை அணியும்போது இந்த அழற்சியை உங்களால் உணரக்கூடும்.

எப்படி தடுப்பது?
நீங்கள் பயன்படுத்தும் ரேசரை 5 முறைக்கு ஒரு தடவை மாற்றி பயன்படுத்த வேண்டும். இதனால் தொற்று ஏற்படாமல் தடுக்க முடிகிறது. நீங்கள் அணியும் ஆடையை காலத்திற்கு ஏற்ப இறுக்கத்தை குறைத்து அணிய பழகுங்கள்.

2. உடலுறவு கொள்வதால்:
நீங்கள் உங்கள் கணவருடன் உடலுறவுக்கொள்வதால் அரிப்பு என்பது ஏற்படுகிறது. உடலுறவுக்கொண்ட பிறகு உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையேல், நோய் தொற்று என்பது ஏற்படக்கூடும்.

எப்படி தடுப்பது?
நீங்கள் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பை தவிர்க்க, ஆணுறை உபயோகப்படுத்தலாம். ஆணுறை பயன்படுத்தாதவர்கள் தேங்காய் எண்ணெய்யும் பயன்படுத்தலாம்.

3. மாதவிடாயினால்:
மாதவிடாயின் போது உங்கள் உடலில் இருக்கும் எஸ்ட்ரோஜன் அளவானது குறைய, இதனால் பிறப்புறுப்பின் பி.எச் அளவு மாற்றத்தால் அரிப்பு ஏற்படுகிறது. இதனை பிறப்புறுப்பு செயல்நலிவு என்றும் அழைப்பர்.

எப்படி தடுப்பது?
மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்து எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த அரிப்பை உங்களால் தவிர்க்க முடியும்.

4. சுகாதார குறைவால்:
நீங்கள் அன்றாட பயன்படுத்தும் சோப் என்பதில் கவனம் வேண்டும். நீங்கள் சோப்பை மாற்றி பயன்படுத்த, பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகி அரிப்பை ஏற்படுத்துகிறது.

எப்படி தடுப்பது?
நீங்கள் குளிக்கும்போது பிறப்புறுப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அழற்சியை தரக்கூடிய எந்த பொருளையும் முதன்முதலாக பிறப்புறுப்பில் பயன்படுத்த முயலாதீர்கள்.

5. பிறப்புறுப்பின் வளர்ச்சியால்:
உங்கள் பிறப்புறுப்பின் மிகுதியான வளர்ச்சியால் பாக்டீரியாக்கள் உருவாகக்கூடும். இதனால் வயதுக்கு ஏற்ற பாதுகாப்பற்ற உடலுறவினால் அரிப்பு என்பது தொற்றின் மூலமாக எளிதில் பரவுகிறது.

எப்படி தடுப்பது?
இந்த பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்க மருத்துவரின் பரிந்துரையுடன் ஆண்டிபயாடிக் பயன்படுத்தலாம்.