Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளிடம் கூறக்கூடாத 5 விஷயங்கள்…

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளிடம் கூறக்கூடாத 5 விஷயங்கள்…

20

கர்ப்ப காலத்தில் பெண்களை சிலர் தாங்கினாலும், அதை தாண்டிய கடுஞ்சொல் சில சமயத்தில் அவர்களை மனதளவில் பாதிக்க செய்துவிடும். அதுவும் கர்ப்ப காலத்தில் பெண்கள் படும் அவஸ்தையை சொல்லி தீராது. முதல் பிரசவமாக இருப்பின் “ஆண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்குமே…” என்பதில் தொடங்கி, இரண்டாவது பிரசவத்தில், “இந்த முறையாவது ஆண் குழந்தை பெற்று தருவாயா?” என்பது போன்ற பல பிரச்சனையை பெண்கள் சந்திப்பது வழக்கம் தான். அப்படிப்பட்ட கர்ப்பிணி பெண்களிடம் கேட்கக்கூடாத 5 விஷயம் எவை தெரியுமா?

1. தேவையற்ற திட்டமிடுதல்:
கர்ப்பமாக இருப்பதை சொல்ல ஆவலுடன் அவர்கள் ஓடி வர, 10 மாதம் கழித்து பிறக்கப்போகும் குழந்தைக்கான திட்டங்களை முன்பே தீட்டுவதை தயவுசெய்து மற்றவர்கள் தவிர்ப்பது நல்லது.

தான் கர்ப்பமாக இருப்பதை அவர்கள் சொல்லும்போது, “வாழ்த்துக்கள்! குழந்தை நன்றாக பிறக்க…” என சொன்னாலே போதுமே…

2. கரு முட்டை பற்றி:
கர்ப்பமடைவது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயம் அல்ல என்பதை முதலில் மற்றவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு சில பெண்கள் குறிப்பிட்ட வயதை தாண்டி குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள். சில சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையை சுமந்து பிரச்சனையை சந்திப்பார்கள்.

அப்போது, “உன் வீட்டை அழகாக்க ஒன்றுக்கு மேல் குழந்தை வரப்போகிறது…” என ஆறுதலாக பேசி பாருங்கள்.

3. தொப்பையை தொடுதல்:
கர்ப்பமாக இருக்கும் பெண்களின் வயிற்றை வந்து செல்வோர் தொட்டு பார்க்க ஆசைப்படுவர்.

அப்படி இருக்க, வெடுக்கென நீங்களாக தொடாமல்…”வாவ்! உன் உப்பிய வயிறு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.” என சொல்லி தடவி தருவது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.

4. பெயர் வைத்தல்:
கர்ப்ப காலத்திலேயே பிறக்க போகும் குழந்தைக்கு பெயர் தேட சிலர் தொடங்கிவிடுவர். இதனால் ஆண் அல்லது பெண் குழந்தை வேண்டுமென்றால் அதற்கு ஏற்ப பெயர் தேர்வு செய்து வைத்திருப்பர். ஆனால், அவர்கள் மனதில் ஆண் அல்லது பெண், ஏதேனும் ஒன்று தான் ஆணித்தரமான எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படி இருக்க, குழந்தை பிறந்தவுடன் மன நிறைவோ அல்லது மன கவலையோ நீங்கள் கொள்ளலாம்.

அதனால் பெயர் பற்றி மிகவும் உணர்ச்சி வசமாக யோசிப்பதை தவிர்ப்பது நல்லது.

5. பேசும் விதம்:
கர்ப்பிணி பெண்கள் புதிதாய் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்பு மிகவும் குழப்பத்துடனும் பதட்டத்துடனும் இருப்பார்கள். அவர்களிடம் பேசும்போது மனம் புண்படும்படி பேசிவிடக்கூடாது. “அதிசயமாக பிள்ளை பெற்றுக்கொள்ள போகிறாள்…” போன்ற வார்த்தை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதற்கு மாறாக, “கர்ப்ப காலத்தில் பள்ளம், மேடு இதெல்லாம் வாழ்வில் இருக்கும் தான். பொறுத்துக்கொள்ளுங்கள்…” என அன்பாக சொல்லி பாருங்கள். அந்த வலியை தாங்கிக்கொள்ளும் சக்தியை நீங்களும் தர இயலும்.