Home பெண்கள் கருத்தரிப்பு மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை அபாய‌ நோய்கள்!

மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை அபாய‌ நோய்கள்!

79

Polyps-of-the-uterus-and-cervical-polyp-3பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது
கர்ப்பப்பை கோளாறுகளே! இந்த கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களின் பட்டியல் இதோ கீழே உங்கள் பார்வைக்கு . . .

கர்ப்பப்பை தொடர்பான அபாய நோய்கள், பாதிப்புகள் இவை…
1) டிஸ்மெனோரியா
– மாதவிலக்குப் பிடிப்பு
2) பைப்ராய்ட்ஸ்
– கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.
3) கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்
– பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.
4) எண்டோமெட்ரியோசிஸ்
– கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்.
5) புரோலாப்ஸ்?
– பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.
6) எக்டோபிக் கருவுறுதல்
– கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக் குழாய் களில் கரு வளர்வது.
7) ஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது)
– கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப்புற்று நோய், எண்டோமெட்ரி யோசிஸ், புரோலாப்ஸ் , தொடர்ச்சியான ரத்தப் போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.
8) கர்ப்பப்பை புற்றுநோய்
– மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் 90% குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற ரத்தப்போக்கு, பொதுவான அறிகுறியா கும்.

பிற அபாய காரணிகள்:
1. கர்ப்பப்பை உள்ளடுக்கின் அசாதாரண வளர்ச்சி
2. குண்டாகுதல்
3. `ஈஸ்ட்ரோஜன் ஒன்லி ஹார்மோன் தெரபி’யை பயன் படுத்துவது
4. மார்பகப்புற்றுநோய் மருந்தான `டாமோக்சிபென்’னை பயன்படுத்து வது
5. இடுப்புப் பகுதிக்குக் கதிர்வீச்சு சிகிச்சை
6. குடும்ப பாரம்பரியம்
7. குழந்தை இல்லாத பெண்களுக்கும், 12 வயதுக்குமுன் வயதுக்கு வந்தவ ர்களுக்கும், 55 வயது தாண்டியவர்களுக்கும் அதிக அபாயம் உண்டு.