Home சமையல் குறிப்புகள் நாவை சுண்டியிழுக்கும் ஸ்பைசி பூண்டு சிக்கன்!

நாவை சுண்டியிழுக்கும் ஸ்பைசி பூண்டு சிக்கன்!

25

சிக்கனுடன் பூண்டு சேர்க்கப்படும் போது நறுமணமாக இருப்பதுடன், சுவையும் தூக்கலாக இருக்கும். இப்போது ஸ்பைசியான பூண்டு சிக்கன் எப்படி செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோழிக்கறியின் சதைப்பகுதி – 250 கிராம்
கறிவேப்பிலை – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
வினிகர் – 3/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 3/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
தயிர் – 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 5
வெங்காயம் – 1/2 கப்
கொத்தமல்லி தழை – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4

செய்முறை

தயிர், உப்பு, மிளகுத்தூள், 3/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு அடித்து கலந்து கொள்ள வேண்டும்.

சுத்தம் செய்யப்பட்ட சிக்கனுடன் அந்த கலவையைச் சேர்த்து மோர் ஊற்றி ஃபிரிட்ஜில் 8 மணி நேரம் வைக்க வேண்டும்.

பின்பு, சிக்கனை வேக வைத்து கொள்ள வேண்டும். சில்லி கார்லிக் சாஸ்க்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்களை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

தயாரித்த சாஸ், மோர் சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து சீரகம் இட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி ஊற வைத்த சிக்கனைப் இட்டு பொன்னிறமாக வேகவைக்கவும்.

இப்போது பூண்டு சிக்கன் ரெடி!