Home பெண்கள் பெண்குறி பெண்கள் அந்தரங்க உறுப்பை ஷேவ் செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை

பெண்கள் அந்தரங்க உறுப்பை ஷேவ் செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை

257

பெண்கள் பலரும் தங்களுடைய அந்தரங்க உறுப்புப் பகுதியில் உள்ள முடியை ஷேவ் செய்வது தான் அழகு என்று நினைத்து, அடிக்கடி ஷேவ் செய்வதுண்டு. ஆனால் அப்படி செய்யும் முன் சில விஷயங்களைத் தெரிந்து கொள்வது நல்லது.

பொதுவாகவே பெண்கள் மத்தியில் ஷேவ் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அது அந்தரங்க உறுப்பு மட்டுமல்லாது, உடலில் உள்ள கூந்தல் வளர்ச்சியை அப்புறப்படுத்துவது அழகு என்ற எண்ணம் அவர்களிடையே ஆழப்பதிந்தவிட்டது தான் அதற்குக் காரணம். ஆனால் அது ஆரோக்கியமானதா என யாரும் தெரிந்து கொள்வதில்லை.

அமெரிக்காவில் 70 சதவீதம் வரை பெண்கள் தங்களுடைய அந்தரங்கப் பகுதியை ஷேவ் செய்ய சலூன் செல்கிறார்கள். அதற்கு்க காரணம், ஷேவ் செய்யும்போது, பெண்கள் அவர்களை அறியாமல் செய்யும் தவறால், பெண்ணுறுப்பில் நோய் தொற்றுக்ள உண்டாகும் ஆபத்து இருக்கிறது.

ஆண்களை விட பெண்கிளன் அந்தரங்கப் பகுதியில் உள்ள சருமம் உணர்ச்சி மிக்கது. அதுவே பிறப்புறுப்பு பகுதியில் வியர்வை காரணமாகவும் காற்றுப் புகாதவாறு நாம் உடுத்தும் உடைகளின் காரணத்தாலும் பாக்டீரியா தொற்றுகள் அதிகம் இருக்கும் பகுதியாக இருக்கிறது.

அந்த இடத்தில் ஷேவ் செய்யும் போது, அவர்களையே அறியாமல் சிறு வெட்டுக்காயம் அல்லது சிராய்ப்புகள் ஏற்படும் வாய்ப்புண்டு. சிறிது சிராய்ப்பு உண்டானால கூட எளிதில் பாக்டீரியா தொற்றுக்ள உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

முடிந்தவரையிலும் ஷேவ் செய்யாமல் ட்ரிம் செய்து கொய்வது நல்லது. உடல் பருமனை விட, ஷேவ் செய்வது மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது.