Home பாலியல் ஆண்களுக்குத் தெரியாத பெண்களது உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்!

ஆண்களுக்குத் தெரியாத பெண்களது உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்!

29

நிறைய ஆண்கள் பெண்களின் உடலைப் பற்றி சில தவறான கருத்துக்களை கொண்டுள்ளனர். இங்கு அதற்கான உண்மைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

நிறைய ஆண்கள் பெண்களின் உடலைப் பற்றி சில தவறான கருத்துக்களை கொண்டுள்ளனர். இக்கட்டுரையில் அந்த தவறான கருத்துக்கள் மற்றும் உண்மைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மை #1 ஆண்களுக்கு தொண்டையில் உள்ள சங்கு பெரியதாக இருக்கும். மேலும் இது ஆண்களுக்கு மட்டும் தான் இருக்கும், பெண்களுக்கு இருக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தான் தவறு. சில பெண்களுக்கும் இருக்கும். ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருப்பதாலும், குருத்தெலும்பின் கோணமும் தான் இம்மாதிரி உண்டாக்குகிறது.

உண்மை #2 ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர்ப்பை சிறியது என்று பல ஆண்களும் நினைக்கிறார்கள். உண்மையில் அளவிற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆண்களை விட பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு காரணம், பெண்களின் சிறுநீர்ப்பை கீழே இறங்கி இருப்பது தான்.

உண்மை #3 பெண்களுக்கு மட்டும் தான் மெனோபாஸ் என்னும் இறுதி மாதவிடாய் உள்ளது என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். சொல்லப்போனால், ஆண்களுக்கும் இம்மாதிரியான நிலை ஏற்படும். அதை ஆன்ட்ரோபாஸ் என்று சொல்வார்கள். இந்நிலையின் போது ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருக்கும்.

உண்மை #4 மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தம் நச்சுமிக்கதாக பலரும் நினைக்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தம் வேறொன்றும் இல்லை. அது கருப்பை சுவர்களில் இருந்து வரும் இரத்தம் மற்றும் திசுக்கள் தான்.

உண்மை #5 சிறுநீர் வடிகுழாயும், யோனியும் ஒன்று என்று பல ஆண்களும் நினைக்கிறார்கள். ஆனால் இவ்விரண்டுமே வேறு. அதில் சிறுநீர் வடிகுழாய் பெண்கள் சிறுநீர் கழிக்கவும், யோனி உடலுறவு கொள்வதற்கும் ஆகும்.