Home சமையல் குறிப்புகள் பஞ்சாபி சிக்கன் டிக்கா ( தவா சிக்கன்)

பஞ்சாபி சிக்கன் டிக்கா ( தவா சிக்கன்)

35

பஞ்சாபி உணவுகளில் மிகவும் பிரபலமானது சிக்கன் டிக்கா. எளிய முறையில் சுவையான தவா சிக்கன் எப்படி செய்வது என்பதை காணலாம்.

தேவையான பொருட்கள்

கோழிக்கறி – 1 கிலோ
கோழி முட்டை – 2
எலுமிச்சை பழம் – 2
வினிகர் – 1 கப்
இஞ்சி , பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தயிர் -1 கப்
வெள்ளை மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு – 10 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் -50 கிராம்
ஆரஞ்சு நிற கலர் – சிறிதளவு

செய்முறை

முதலில் சதைப்பகுதியான கோழிக்கறி துஷ்டுகளை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து மசாலா கறியில் ஓட்டுவதற்காக கத்தியால் கறியை சிறியதாக கீறி விடவும்.

அதில் 1 கப் வினிகர் சேர்த்து அத்துடன் எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விடவும்.

கறியில் தயிர், மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு கலவை ஓட்டுமாறு இருபுறமும் பிரட்டி எடுக்கவும்.

பின்னர், வெள்ளை மிளகுத்தூள், கிராம்பு, இலவங்கப் பட்டை தூள் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு நன்க கலந்து கொள்ளவும்.

கலவை சற்று கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் இட்டு மீதமுள்ள மசாலாவை அதன் மேலாக விட்டு 4 மணி நேரம் ஃபிரிட்ஜியிர்ல வைக்க வேண்டும்.

கோழிக்கறியில் மசாலா நன்கு ஊறிய பின், அடுப்பில் தோசைக்கல் அல்லது நான் ஸ்டிக் பேனில் சற்று எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வைத்து கோழித்துண்டுகளை இட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகுமாறு சுட்டு எடுக்கவும்.

சிக்கன் டிக்கா மீது எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு வட்டி வடிவில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை வைத்து பரிமாறலாம்.

அருமையான சுவையுடன் தவா சிக்கன் தயார் !