Home பாலியல் செக்ஸ் பாலியல் தவறுகள்

செக்ஸ் பாலியல் தவறுகள்

31

women-look-for-loveஇன்று அதிகமாக பாலியல் குறைபாடுகள் மக்களிடையே இருக்க பாலியல் ரீதியான தவறுகளும் ஒரு காரணமாகும். இன்று தகவல் தொடர்பு சாதணங்கள் அபரிதமான பாலியல் தவறுகள், தவறான செக்ஸ் உறவுகள் போன்றவையினாலும் உடல் ரீதியான பாலியல் குறைபாடுகள் இன்று பெருத்துவிட்டன. அதற்கு மிகப்பெரிய உதாரணம் தான் எய்ட்ஸ். இந்த பாலியல் குறைபாடுகளை மனிதன் தானாகவேகூட வரவழைத்து கொள்ளக் கூடும். ஆம் இன்று மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அதிகமாக இருக்கும் சுய இன்ப பழக்கம், ஆண், பெண் இருபாலாரிடமும் இருக்கும் ஓரினச்சேர்க்கை பழக்கம், தகாத தொடர்புகள் போன்றவையும் உடல்ரீதியான பாலியல் குறைகளை உண்டாக்கும். மிக சிலருக்கு பிறப்பிலேயே உடல் ரீதியான பாலியல் குறைபாடுகள் இருக்கலாம். இவை அரிதானவை. இவற்றை குணப்படுத்துதல் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சில பாலியல் குறiபாடுகள் மனோரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மன அழுத்த பாதிப்புகள் உண்டாக்கலாம்.

செக்ஸில் கணவனும், மனைவியும் இரண்டு பேரும் சேர்ந்து பெறும் இன்பமே ஆரோக்கியமான செக்ஸ் எனப்படும். இதில் ஒருவர் மட்டும் திருப்தியுற்று மற்றவர் திருப்தியுறாத தன்மையும் பலரிடம் காணப்படுகிறது. இதனாலும் சம்பந்தபட்ட திருப்தியுறாத நபருக்கு மனபாதிப்பு ஏற்படலாம். இன்று ஓரளவு செக்ஸ் விழிப்புணர்ச்சியின் ஆரம்பகட்டத்தில் இருக்கிறோம் நாம். இன்று ஓரளவு வெளிப்படையாக பேச செக்ஸ் தெளிவு பெற மக்கள் முன்னேறி இருக்கிறார்கள். என்றே கூறவேண்டும். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் தங்கள் பாலியல் குறைபாட்டை அவ்வளவாக வெளிப்படையாக கூறுவதில்லை.

இன்று பரவலாக பலருக்கு உள்ள குறைபாடு குழந்தையின்மையாகும். இதற்கு இரண்டு பேருமேகூட காரணமாக இருக்கலாம். எனினும், பெண்களைவிட ஆண்தான் முழு முதற்காரணமாக இருக்கிறான். ஆணின் உயிரணுக்களில் பாதிப்பு, குறைபாடு இருப்பதுதான் குழந்தையின்மைக்கு பெரிதும் காரணமாக இருக்கிறது. இதற்கு தகுந்த சிகிச்சை ஆரம்பத்திலேயே பெறுவது நல்லது. இத்தகைய பாலியல் குறைபாடுகளை கை தேர்ந்த சித்த மருத்துவரின் உதவியுடன் முழுமையாக குணப்படுத்திவிட முடியும்.

மேலும் இந்த சித்த மருந்துகள் ரசாயன கலப்பற்றது. பக்கவிளைவு அற்றது ஆகும். இன்னொரு சிறப்பான ஒரு தன்மை சித்த மருந்துகளுக்கு உண்டு. சித்த மருந்துகளை கெடாமல் நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம். நீண்டநாள் வைத்திப்பதற்குக்கூட ரசாயனங்கள் ஏதும் கலப்பதில்லை. தேன்தான் கலக்கப்படுகின்றது. இம்மருந்துகள் நோய்களை குணப்படுத்தும் காலம் அந்த நோயாளியின் வயது, நோயின் தன்மையை பொறுத்து மாறுபடும். ஆரம்பத்திலேயே பாலியல் குறைபாடு வராமல் இருக்க நம் முன்னோர்கள் பல வழிகளை சொல்லி சென்றுள்ளனர். அதாவது செவ்வாழைக்கு மலட்டு தன்மை நீக்கும் குணம் உண்டு. முருங்கை கீரை, முருங்கை காய், பேரிச்சை போன்றவையும் உண்ணலாம். இத்துடன் இலகுவான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வது அவசியமாகும்.