எனக்கு 55 வயது, என் மனைவிக்கு 50 வயது, நாங்கள் மாதத்திற்கு குறைந்தது 20 முறை உடலுறவு கொள்கிறோம்

கேள்வி: எனது கணவர் உடலுறவு கொள்ளும்போது எடுத்த உடனே அங்கு சென்று முடித்துவிடுகிறார். இதனால் எனக்கு எரிச்சல் ஏற்படுவதோடு, முழு திருப்தியும் இல்லை. எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை. அவருக்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.

பதில்:

இந்த பதிலை உங்களின் கணவரிடம் கொடுத்து படிக்க சொல்லுங்கள்.

உடலுறவு என்பது தாம்பத்யத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு நல்ல வாய்ப்பு.
உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இருந்தால் அது முழுமையான உறவாகாது.
உறவின் போது உணர்ச்சிப்பூர்வமான, அன்பான தொடுதல், முத்தமிடுதல் இருந்தால்தான் கணவனுக்கும் மனைவிக்கும் மணவாழ்க்கை முழுமை பெறும்.
மென்மையான ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப்படுகிறது. மனித உடல் உணர்ச்சி நரம்புகளால் பின்னப்பட்டுள்ளது. உடலின் சில பகுதிகளில் உணர்ச்சியை தூண்டும் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும்.
நிறைய பெண்கள் உறவுக்கு முந்தைய முன்தொடுதல் விளையாட்டை மிகவும் விரும்புகிறார்கள்.

சில முன் விளையாட்டுகள்:

முகம் பார்த்து பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் உங்களின் முன்தொடுதல் விளையாட்டு முறை சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும்.
அன்பு, அக்கறை, கவனிப்பு, “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் செய்கையால் உணர்த்தும் பரிவான மென்தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஏற்றிவிட முடியும். முன் தொடுதல் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். இதனால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெண்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.
பாலியல் எண்ணமில்லாமல் ஆதரவாக பரிவுடன் செய்யப்படும் தொடுதல், அணைத்தல், தழுவுதல், மென்முத்தம் போன்றவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும்.
மிருதுவாக மென்மையாக தொடுதல், அணைத்தல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை.
பின் முதுகை தடவுதல், மசாஜ் செய்தல், கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் சிலருக்கு காம உணர்வை அதிகரிக்கும். இவற்றை ஆண்கள் தங்களின் மனைவியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்யலாம்.
முத்தமிடுவதுதான் பாச உறவின் திறவுகோல். இது அனைவரும் பிடித்தமானதும் கூட. முத்தமிடுவதன் மூலம் பெண்ணின் ஆசையை அதிகரிக்கச் செய்யலாம்.
ஆண்கள் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
எப்பொழுதும் ஒரே மாதிரியாக இல்லாமல் வித விதமாக முன்தொடுதல் முறையை மாற்றி செய்தால் தாம்பத்யத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

முன் தொடுதல் விளையாட்டினால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மகிழ்ச்சியடைவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்கள் கணவரும் முன் தொடுதலை ஆரம்பித்தால் மகிழ்ச்சி அடைவார்.

கேள்வி: எனக்கு சமீபத்தில் திருமணமானது. திருமணத்திற்க்கு முன்பு நான் இருவரை காதலித்தேன். வேறு இருவர் என்னை காதலித்தனர். ஆனால் நான் வீட்டில் பார்த்த இவரைத்தான் திருமணம் செய்துள்ளேன். இவரிடம் எனது பழைய காதல்களைப்பற்றி சொல்லலாமா, வேண்டாமா?

பதில்: .

‘அந்தரங்கம் புனிதமானது’. ஆனால், அது ரகசியமானதும் கூட.
அந்தரங்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்பது விதி. இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும்.
ஆண் – பெண் உறவில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது.
தன் மனைவியின் / கணவரின் பழைய காதல் வாழ்க்கையை அறிந்துகொண்டு அதைப் பெருந்தன்மையோடு அணுகும் அறிவு முதிர்ச்சியான கணவன் /மனைவி ஒருசிலர் மட்டுமே.

ஆண் – பெண் உறவில் எதை வெளிப்படையாகச் சொல்லலாம், எதைச் சொல்லக்கூடாது என்பது ஒரு கலை.

கணவன் – மனைவி இருவருமே ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் துணை எல்லாவற்றையும் சரியாக அறிந்து கொள்ளக்கூடிய புரிதல் கொண்ட துணையா என்பதுதான் அது. அவர் அப்படிப்பட்ட மிகச்சரியான துணை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் உங்களின் கடந்த கால வாழ்க்கை பற்றிய எந்த உண்மைகளையும் தைரியமாக சொல்லலாம். அதேநேரம், மிகவும் பிற்போக்கான சிந்தனைகள் கொண்டவர் என்று தெரிந்தால், அவரிடம் எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லது.
இது உங்களின் தவறு அல்ல. இதனால் குற்ற உணர்ச்சி எதுவும் தேவை இல்லை.
‘உண்மைகளைக்கூட வெளிப்படையாக பேச முடியாத ஒரு உறவு தேவைதானா?’ என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், உண்மைகளை பேசியபின் எந்த விதமான விளைவுகள் ஏற்படும் என்ற பதிலையும் யோசிக்க வேண்டும்.
அற்புதமான ஆண் – பெண் உறவில் ‘பொய்மை’ என்கிற களை தோன்றுவதற்குக் காரணம், பிற்போக்குவாதம் தான்!
எனவே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுங்கள், மனம் திறந்து பேசுங்கள், எதை இருவரும் ஏற்றுக்கொள்கிறீர்களோ அதன்படி பரிமாறிக்கொள்ளுங்கள். அதுதான் நிஜமான சந்தோசமான வாழ்க்கை.

வாழ்க்கை வாழ்வதற்கேயன்றி பிரிவதற்கல்ல.

வாழ்த்துக்கள்.

கேள்வி: எனக்கு 55 வயது, என் மனைவிக்கு 50 வயது, நாங்கள் மாதத்திற்கு குறைந்தது 20 முறை உடலுறவு கொள்கிறோம். இது நல்லதா, கெட்டதா? இதை தொடரலாமா வேண்டாமா?

பதில்:

உண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தியவசிய தேவையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவும் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகிறது உளவியல் அறிவியல்.
அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வயதான பிறகும் முழுமையான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய கோளாறுகள், போன்ற நோய்களின் தாக்கம் குறைவதாக ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு உணர்ச்சியில் வயது வேறுபாடு எதுவும் இல்லை.
ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவையே உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமாகும்.
மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதைப் போல, 70, 80 வயதுவரை டெஸ்டோஸ்டீரான் செக்ஸ் ஹார்மோன் சுரக்கும் ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும் என்கிறது மருத்துவ அறிவியல்.

உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றன. மேலும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன.
நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான்.
ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக் கழகம் கண்டறிந்துள்ளது.

தாம்பத்ய உறவினால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன.
அவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது.
நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
வயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
வயதானாலும், உடலுரவு கொள்வது தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

தயக்கமின்றி உங்களால் முடிந்த வயதுவரை உறவை தொடருங்கள்.

வாழ்த்துகள்

Loading...