Home ஆண்கள் ஆண்குறி இந்திய ஆண்களுக்கு 4 ‘இன்ச்’தானாம்.. காங்கோகாரர்களுக்கு 7 ‘இன்ச்’சாம்!!

இந்திய ஆண்களுக்கு 4 ‘இன்ச்’தானாம்.. காங்கோகாரர்களுக்கு 7 ‘இன்ச்’சாம்!!

67

எது எதுக்கெல்லாம் சர்வே எடுப்பது என்று அளவே இல்லாமல் போய் விட்டது. ஆண்குறிகளைப் பற்றி இப்போது ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் உலகிலேயே வடகொரியா, தென்கொரியா நாட்டு ஆண்களுக்குத்தான் பிறப்புறுப்பின் நீளம் மிகவும் சிறியது என்று சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. அவர்களின் உறுப்பின் நீளம் 3.8 இன்ச் அளவுதானாம். அதேசமயம் ஆப்ரிக்க நாட்டில் உள்ள காங்கோ குடியரசு நாட்டைச் சேர்ந்த ஆண்களின் உறுப்பின் நீளம் 7.1 இன்ச் அளவு என்று தெரியவந்துள்ளது.

இந்த வித்தியாசமான சர்வேயை எமிரேட்ஸ்சில் உள்ள உல்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவ இயல்துறை பேராசிரியர் ரிச்சர்ட் லின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். அதில் ஆச்சரியப்படத்தக்கவகையில் பல உண்மைகள் தெரியவந்தன.

பிரிட்டனைச் சேர்ந்த ஆண்களுக்கு சராசரியாக 5.5 இன்ச் அளவு நீளம் இருக்கிறதாம். பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த ஆண்களுக்கு அவர்களை விட குறைவாக 5.3 இன்ச் அளவு நீளம் இருந்துள்ளது அதேசமயம் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆண்களுக்கு 5.7 இன்ச் அளவிற்கு உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களுக்கு 5.2 இன்ச்சும், அமெரிக்கர்களுக்கு 5.1 இன்ச்சும் அளவும், அயர்லாந்துக்காரர்களுக்கு 5 இன்ச் அளவும் இருப்பாக கண்டறியப்பட்டுள்ளது.

எந்த நாட்டு ஆண்களுக்கு பிறப்புறுப்பின் நீளம் அதிகம் என்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள் சராசரியான அளவைக் கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஆண்களுக்கு 4.3 இன்ச் நீளம் உள்ளதாகவும். இந்தியா, தாய்லாந்து நாட்டினைச் சேர்ந்த ஆண்களுக்கு உறுப்பின் நீளம் 4 இன்ச் அளவுதான் உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரேஸ் டிபரன்ஸ் இன் பெனிஸ் லென்த் என்ற தலைப்பில் இதனை எழுதியுள்ளார் ஆய்வு மேற்கொண்டவர். இதனை டெலிகிராப் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் முழு விபரம் ‘ பெர்சனாலிட்டி அன்ட் இன்டிஜூவல் டிபரன்சஸ் இதழில் வெளியாகியுள்ளது.