தாலி கட்டும் முன் வேண்டாம் நெருக்கம்

அன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமண உறவில் இணையவிருக்கும் மணமக்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைப்பார்கள்.

நிச்சயதார்த்தம் என்ற இந்த சடங்கு நாம் இருவரும்(ஆண்- பெண்) திருமணம் செய்துகொள்வதற்கு நிச்சயிக்கப்பட்டுவிட்டோம் என்பதை உணர்த்துகிறது.

[pro_ad_display_adzone id="52683"]

“நிச்சயதார்த்தம் டூ திருமணம்” இந்த இடைப்பட்ட காலம் நிச்சயிக்கப்பட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வெற்றிகரமாக திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க அச்சாரமிடுகிறது.

ஆனால், இந்த நேரத்தில் வரம்புமீறும் பட்சத்தில் உறவுகள் சீர்குலையவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு அளவுக்கதிமாக மொபைல்களில் உரையாடுவது, டேட்டிங் செல்வது, அளவுக்கதிமான அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்வது.

அளவுக்கதிகமாக மொபைல்களில் உரையாடுவதன் மூலம், இக்காலத்து பெண்கள் மற்றும் ஆண்களின் மனது உடலுறவில் ஈடுபடுவதற்கு துடிக்கிறது.

திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடக்கூடும், இதில் ஆண்கள் வரம்புமீறினாலும், பெண்கள் தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் இருபாலரும் தவறு செய்யும் பட்சத்தில், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

தாலி கட்டும் முன் வேண்டாம் நெருக்கம்!

நிச்சயதார்த்தத்துக்குப் பின், திருமணத்துக்கு முன் என்ற இடைவெளியில் அதிகம் நெருக்கமும் தவிர்க்கப்பட வேண்டியது. பேசுவது, சந்திப்பது என்றபோதிலும், அதை ஆவணமாக மாற்றும் சாத்தியங்களை தவிர்ப் பதும் புத்திசாலி பெண்ணுக்கு அழகு.

குறிப்பாக, சேர்ந்த மாதிரி புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம். தனித்த படங்களை பகிர்ந்து கொள்வதிலும்கூட ஆபத்து இருக்கிறது” என்று சொல்லும் மருத்துவர்… ஒரு சம்பவத்தை உதாரணமாக எடுத்து வைத்தார்.

[pro_ad_display_adzone id="52683"]

அதிகமாக சம்பாதிக்கும் ஐ.டி. துறையைச் சேர்ந்த இருவருக்கு, நிச்சயத்துக்குப் பின் ஒரு வருட இடைவெளியில் திருமணம் என முடிவானது. பெண் பெங்களூருவில், பையன் வெளிநாட்டில் சாட்டிங்கிலும், ஸ்கைப்பிலும் காதல் பொங்கல் வைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பையனுக்கு அது போரடிக்கவே, இன்னும் அன்னியோன்யமாக அவளைப் பார்க்க ஆசைப்பட்டு, அரைகுறை ஆடைகளுடனும், பிறகு அதுவும் இல்லாமலும் படங்களை கேட்டிருக்கிறான்.

அந்த படித்த பெண்ணும் வருங்கால கணவன் என்ற நம்பிக்கையில், புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில், அதிக வரதட்சணையுடன் இன்னொரு திருமண வாய்ப்பு கதவைத் தட்டவே, பழையதை தட்டிக் கழிக்க.. மேற்படி ஏடாகூட புகைப்படங்களை இணையதளத்தில் விநியோகிக்கும் பிளாக் மெயிலில் அவன் குதித்தான்.

பெரும் பஞ்சாயத்துக்குப் பின் பிரச்னையிலிருந்து மீண்டுவிட்டனர் அந்த பெண்ணும் குடும்பத்தினரும். ஆனால், அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகவில்லை. எனவே பேச்சு, நெருக்கம், பகிர்வு ஆவணம் அனைத்திலும் எச்சரிக்கையும் முன் யோசனையும் அவசியம் என்பதை கருத்தில் கொள்க.