Home அந்தரங்கம் மனைவியுடன் நீண்ட நேரம் உறவு கொள்ளவேண்டுமா ?

மனைவியுடன் நீண்ட நேரம் உறவு கொள்ளவேண்டுமா ?

29

நீங்கள் உங்கள் துணையுடன் நீண்ட நேரம் உறவில் இருக்க வேண்டுமா? அதற்கு இரண்டு பேரும் சேர்ந்திருக்கும் எல்லா நேரத்தையும் வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்களைப் பற்றி மட்டுமே ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் துணையுடன் ’அந்த’ விஷயங்களில் ஈடுபடும்போது அவசரப்படாதீர்கள். அது நிச்சயமாக சொதப்பலாகிவிடும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நீங்கள் விரும்புகிற துணையிடம் ‘அந்த’ விஷயத்திற்கு முன்பாக எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமென்று ஆராய்ச்சியாளர்கள் சில ஆலோசனைகளைத் தருகிறார்கள்.

முதலில் உங்கள் துணையை உங்களுடைய நெருங்கிய நண்பராக எண்ணுங்கள். அதை உங்கள் துணை புரிந்துக் கொள்ளும் வரை காத்திருந்து அதன்பிறகு மேல்நோக்கிச் செல்லுங்கள் என்கிறது ஆய்வு முடிவு.

உங்களுடைய செக்ஸ் உறவு திருப்தியாகவும் நீண்டதாகவும் தொடர வேண்டுமெனில் நிச்சயமாக உங்கள் துணையை சிறந்த நண்பராக்கிக் கொள்வது அவசியம் என்கிறார் அமெரிக்க உளவியல் ஆராய்ச்சியாளர். மற்றொரு உளவியலாளர் லௌரா வாண்டா், எவரொருவர் தன்னுடைய துணையுடன் நல்ல நட்புறவில் இருக்கிறாரோ அவர்களுடைய செக்ஸ் வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு வெற்றிகரமாகவும் திருப்தியாகவும் தொடர்கிறது என்று தன்னுடைய ஆய்வின் முடிவில் வெளிப்படுத்துகிறார்.

இந்தியானா பர்ட்யூ பல்கலைக்கழகத்தில், 184 பேரைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 16 மாதங்கள் தொடர்ந்து அவர்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். தொடா்ந்து வாரத்திற்கு இரண்டு முறை அவர்களிடம் வினாக்கள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. அவற்றில் குறிப்பாக, நீங்கள் விலைமதிக்க முடியாததாக, மறக்க முடியாத உறவை மேற்கொண்ட தருணங்கள் எவை என்ற வினா எழுப்பப்பட்டது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பல ஜோடிகள் தங்கள் உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான முயற்சியை வெறுமனே எதிர்கொள்வதை விட சிறந்த நண்பர்களாக இருந்து எதிர்கொள்கின்றனர். நண்பர்களாக இருக்கும்போது இருவரும் ஒருவருக்கொருவர் நலனில் மாறிமாறி அக்கறை செலுத்துவதால், எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதால் ஒரே நேரத்தில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கின்றன.

ஆகையால் தங்களுடைய உறவு நெடுநாட்களுக்கு எந்தவித இடர்பாடும் இல்லாமல் தொடர்கிறது என்கின்றனர். நட்பில் கிடைக்கும் சுதந்திரத்தன்மை தான் நாங்கள் உறவில் ஈடுபடும் போதும் நீடிக்கிறது என்கின்றனர்.

உங்கள் உறவாக நீங்கள் ஒருவரை ஏற்கும் முன்னர் அவரைப் பற்றி நன்கு அறிந்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய நல்ல பண்புகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதேசமயம் அவரிடம் இருக்கும் பிழைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் அவரிடம் இருக்கும் சிறுசிறு தவறுகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டாலே அவருடைய நல்ல பண்புகள் விரைவாக அதிகரிக்கத் தொடங்கிவிடுவதை உணர்வீர்கள்.

இந்த நட்புறவு தான் உங்கள் வாழ்க்கையின் எல்லா விஷயங்களுக்கும் அஸ்திவாரமாக அமையும். இதில் வெற்றி பெற்றாலே அடுத்ததாக, அந்த விஷயங்களில் எப்போதும் வெற்றி தான். அந்த விஷயத்தில் தோல்வி என்பது உங்கள் அகராதியிலேயே இருக்காது.