Home உறவு-காதல் முதல் காதலை விட இரண்டாவது காதல் சிறந்தது என்பதற்கான சில காரணங்கள்

முதல் காதலை விட இரண்டாவது காதல் சிறந்தது என்பதற்கான சில காரணங்கள்

24

உங்கள் முதல் காதலை விட இரண்டாவது காதல் சிறந்தது என்பதற்கான காரணங்கள்
முதல் காதல் தோல்வி என்பது மிகவும் கஷ்டமான ஒன்று தான். ஆனாலும் நீங்கள் அதில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். முதல் காதலில் நிறைய தவறுகள் செய்து இருக்கலாம், அதனால் அந்த உறவு கை குலுக்கியோ அல்லது கண்ணீர் சிந்தியோ பிரிந்து இருக்கக்கூடும். இது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், முதல் காதலில் செய்த தவறுகள் உங்களது அடுத்த காதலுக்கு சிறந்த அடித்தளமாக அமையும். முதல் அனுபவத்தில் அனைவருமே பல தவறுகளை செய்து இருப்பார்கள், ஏனென்றால் எதை எப்படி செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எதுவுமே தெரிந்திருக்காது. ஆனால் இரண்டாவது காதலின் போது அடிப்படையான சில விஷயங்கள், சண்டைகளை சமாளிப்பது போன்ற சில விஷயங்கள் தெரிந்து இருக்கும்.

உங்கள் காதல் பிரிந்து சென்றதை பற்றி கவலைப்பட வேண்டாம். பிரிந்து சென்ற உறவின் மூலம் கிடைத்த அனுபவம் உங்களின் அடுத்த உறவை சிறக்க வைக்கும். உங்கள் முதல் காதலுக்கும் இரண்டாம் காதலுக்கும் இடையே உள்ள சில விஷயங்கள்

அனுபவ அறிவு

ஒரு சின்ன விஷயமாக இருக்கலாம், அல்லது பெரிய விஷயமாக கூட இருக்கலாம் அது முதல் காதல் அனுபவத்தில் இருந்து தான் கிடைத்திருக்கிறது. இதனால் மீண்டும் அதே தவறு நடக்க வாய்ப்பில்லை.

உங்களுடைய தேவை புரிந்திருக்கும்

காதலுக்கு வயதில்லை தான். ஆனால் உங்களது முதல் காதல் பள்ளியில் படிக்கும் போது வந்திருந்தால், அந்த வயதில் உங்களுக்கு நீங்கள் யார் என்று கூட தெரிந்திருக்காது. ஒருவேளை உங்களது முதல் காதல் பள்ளியிலும் இரண்டாவது காதல் கல்லூரியிலும் வந்திருந்தால், இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நீங்கள் எப்படி மாறியிருப்பிர்கள் என சிந்தித்து பாருங்கள். நிச்சயமாக, 18 வயதில் நீங்கள் ஒரு விஷயத்தை கையாளுவதற்கும் 21 வயதில் ஒரு விஷயத்தை கையாளுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். உங்களுக்கு குடும்பம், சூழ்நிலை, எது சரி, எது தவறு என பல விஷயங்கள் புரிந்திருக்கும்.

சின்ன சண்டைகள் பெரிதாவதில்லை
உங்களது முதல் காதலில் சின்ன விஷயங்கள், சின்ன பிரச்சனைகள் கூட மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி பிரிவுக்கு காரணமாகியிருக்கலாம். ஆனால் இரண்டாவது காதலின் போது நீங்கள் சின்ன விஷயங்களுக்காக உறவு பிரிந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்க முடிகிறது.

முதிர்ச்சியடைந்த காதல்

நமது மூளை வளர்ச்சியான இருபது வயதிற்கு மேல் தொடர்ந்து அதிகரிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது ஒவ்வொரு வருடமும் நமது மேச்யுரிட்டி அளவானது அதிகரிக்கிறது. இது உறவு விஷயத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. பப்பி லவ் போன்ற மேச்யுரிட்டி இல்லாத காதலுக்கும் இதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கும். இந்த முதிர்ச்சியானது நீங்கள் தெளிவான முடிவெடுக்க உதவியாக இருக்கும்.

எதார்த்தம் நீங்கள்
இந்த உலகத்தை பற்றி அறிந்துகொள்ள முதல் காதல் உதவுகிறது. மனிதர்கள் எப்படி இருப்பார்கள், யோசிக்காமல் செய்யும் சில காரியங்கள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி அறிந்திருக்க முடியும். குழந்தை பருவத்தில் காதலை பற்றி பல கற்பனைகள் இருந்திருக்கும், சினிமாக்கள், கதைகளில் வருவது போல காதல் இருக்கும் என நினைத்து கொண்டிருப்பீர்கள். ஆனால் இப்போது எதார்த்தம் புரிந்திருக்கும்.

பேச்சுத்திறமை உறவுகளுக்குள்
விரிசல் வர ஒரு முக்கிய காரணம், நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது. உங்களது துணை என்ன சொல்ல வருகிறார். ஒரு பிரச்சனையை எப்படி பேசி தீர்த்துக்கொள்வது, உங்களது சூழ்நிலைகளை பற்றி விளக்கி கூறுவது போன்றவை முதல் காதலில் பிரச்சனையாக இருந்திருக்கும். இரண்டாம் காதலில் பேச்சு திறன் மேம்பட்டிருக்கும். அதிக நேரம் பேசுவதை விட என்ன பேசுகிறோம் என்பது முக்கியம் என புரியும்.

நேர்மை
இரண்டாம் காதலில் உங்களது நேர்மை குணம் அதிகமாக காணப்படும். நீங்களும் உங்கள் துணையிடம் நேர்மையை எதிர்பார்ப்பீர்கள். ஆனால் முதல் காதலில் சில இரகசியங்களை மறைத்திருப்பீர்கள், அது பெரிய விஷயம் அல்ல என்று நினைத்திருக்க கூடும். ஆனால் இரண்டாம் காதலில் நேர்மை தான் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என உணர்ந்திருப்பீர்கள்.

பொறுப்பு
(Commitment) பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதல் காதலில், உடனடியாக உங்கள் துணையின் மேசேஜ்களுக்கு ரிப்ளை செய்வது தான் கடமை என நினைத்து கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால் இரண்டாம் காதலில் சில குறுகிய கால திட்டங்களை வைத்திருப்பீர்கள்.