Home பெண்கள் உடல் கட்டுப்பாடு இடுப்பு வலி, மூட்டு வலியை குறைக்கும் பார்ச்வ கோணாசனம்

இடுப்பு வலி, மூட்டு வலியை குறைக்கும் பார்ச்வ கோணாசனம்

37

செய்முறை :

நேராக நிமிர்ந்து நிற்கவும். குதிகால்களை ஒன்றாகச் சேர்த்தும், விரல் பகுதிகளை லேசாக அகட்டியம் ‘V’ வடிவத்தில் வைக்கவும். கழுத்து நேராக இருக்கவேண்டும். கைகள் உடலை ஒட்டியும் – கை விரல்கள் தொடையைத் தொட்டபடியம் இருக்கட்டும்.

மெதுவாக வலக் காலை அகட்டி வைக்கவும். கால் பாதங்கள் இரண்டும் நேராக இருக்கட்டும். வலக்கால் பாதத்தை இடக்காலுக்குச் செங்குத்தாக இருக்குமாறு வலப் பக்கம் திரும்பிக் கொள்ளவும்.

மெதுவாக வலக்கால் மூட்டுப் பகுதியை மடக்கி, வலப்பக்கம் சரிந்துகொள்ளவும். இடுப்பை வளைத்து பக்கவாட்டில் குனியவேண்டும். ஆனால் தரையை நோக்கி முகத்தைத் திருப்பாமல் நேராகவே பார்க்கவேண்டும். வலக்கையை, வலக் கால் பாதத்துக்குப் பக்கத்திலேயே தரையில் வைக்கவும். (உடல் எடையைக் கைகளுக்குக் கொண்டு வராமல், லேசாகத்தான் தரையில் ஊன்ற வேண்டும்.)

குனிந்திரக்கும் கோணத்திலேயே, இடக்கையைத் தலைக்கு மேல் உயர்த்தவம். இடக்கையின் புஜங்கள் காதைத் தொட்டபடி இருக்கட்டும். இடக் கைவிரல் நுனியைப் பார்த்தபடி தலையைத் திருப்பிக்கொள்ள வேண்டும். நடுக்கம் இல்லாமல் நிற்க முடிந்தால், வலக் கையைத் தரையிலிருந்து எடுத்து, உங்கள் இடுப்புப் பகுதியின் பின்புறம் வைத்துக்கொள்ளலாம்.

இடக் கையை மெதுவாக இறக்கி, உடலை ஒட்டி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். வலக்கை இடுப்பில் வைக்கப்பட்டிருந்தால், எடுத்துத் தரையில் வைத்துக்கொள்ளவும். வளைந்த நிலையில் இருக்கும் உடலை நேராக்கி நிமிரவும்.

வலக் கால் பாதத்தை திருப்பி நேராக்கவும். பாதங்கள் இரண்டையும் “V’ வடிவத்தில் சேர்த்துவைத்து, துவக்க நிலைக்கு வரவும். இதே முறையில் இடப்புறமும் ‘காம்ப்ளிமென்ட்டு’ ஆசனம் செய்யவும்.