Home பெண்கள் உடல் கட்டுப்பாடு இளம்பெண்கள் உடலை பராமரிக்கும் வழிமுறைகள்

இளம்பெண்கள் உடலை பராமரிக்கும் வழிமுறைகள்

36

நடுத்தர வயதை தொட்டவர்கள் உடலை பராமரிப்பது எப்படிப நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் இங்கு விவரிக்கிறார். 40 வயதினை நெருங்கி விட்டீர்களா? நீங்கள் கேட்க வேண்டிய சில கேள்விகள் இதோ.

1. நான் என்ன ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்? பெண்கள் 40 வயதினை தாண்டும் பொழுது பொதுவாக காணப்படும் குறைபாடு வைட்டமின் டி தான். இந்த வைட்டமின் டி இருந்தால் தான் உடலில் கால்ஷியம் நன்று ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்த கால்ஷியம் தான் உங்கள் எலும்புகளில் உறுதியினை பாதுகாத்து எலும்பு தேயாமலும், கரையாமலும் இருக்கச் செய்யும். 40-க்கு பிறகு உங்கள் வைட்டமின் டி அளவினை இரத்தப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

65க்கும் பிறகு உங்கள் எலும்பின் உறுதியை அதற்கான பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளுங்கள். 40-க்கு மேல் ஒரு பெண்ணுக்கு
* வைட்டமின் `டி’
* கால்சியம் மக்னீஷியம்
* மல்டி வைட்டமின்
* ஒமேகா 3 போன்றவை அவசியமாகின்றன.

பொதுவில் வைட்டமின் டி பற்றி பேசும் பொழுது எலும்புக்கான கால்ஷியம் சத்து உடலில் உறிஞ்சப்படுவதைப் பற்றி மட்டுமே பேசுகின்றோம். வைட்டமின் `டி’க்கு மேலும் பல சிறப்புகள் உள்ளன.

* ஒரு சில வகை சற்று நோயிலிருந்து காக்கும்.

* நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூடும்.

* வீக்கத்தினை குறைக்கும்

* நரம்பு தசை இயக்கத்தினை சீராக்கும்.

இது சில வகை மீன்கள் மூலம் உணவாக கிடைத்தாலும், சைவ உணவுக்காரர்களுக்கும், முறையற்ற உணவு உண்போருக்கும் இது கிடைப்பதில்லை. தினம் காலை, மாலை இளம் வெய்யிலில் 20 நிமிடம் கை, கால் தெரிய இருப்போருக்கு வைட்டமின் உடலில் உற்பத்தியாகும். இது சாத்தியமாக சிலருக்கு இல்லாமல் இருக்கலாம்.

அத்தகையோர் மருத்துவ ஆலோசனையோடு வைட்டமின் `டி’ எடுத்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக வைட்டமின்கள் உங்கள் அன்றாடத் தேவையை பூர்த்தி செய்கின்றன. வைட்டமின் ஏ- கண்பார்வை, சரும பாதுகாப்பு. வைட்டமின் பி- செயல்பாடு திறன் கூடும்.

வைட்டமின் சி- நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும்.
வைட்டமின் டி – நல்ல எலும்பு உறுதி கிடைக்கும்.
வைட்மின் ஈ – சதை, பராமரிப்பு, மூளை செயல்திறன் கூடும்.

2. என் இருதயம் எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கிறது? ரத்தக் கொதிப்பு இருதய பாதிப்பிற்கு முதல் காரணம் ஆகின்றது. இருதயம் சக்தியினையும், பிராண சக்தியினையும் உடலுக்கும், மூளைக்கும் கொடுக்கும் முக்கிய உறுப்பு. இருதய தசைகளுக்கும் இருதயம்தான் இதனை அளிக்க முடியும்.

இதில் இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இருதய பாதிப்பு ஏற்படுகிறது.

* உடல் உழைப்பின்மை
* எப்போதும் உட்கார்ந்து, படுத்துக் கொண்டே இருப்பது
* ரத்தக் கொதிப்பு
* கெட்ட கொழுப்பு அதிகம், நல்ல கொழுப்பு குறைவாய் இருத்தல்
* சர்க்கரை நோய்
* அதிக உடல் எடை
* மன உளைச்சல் போன்றவை இருதய பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.

இருதய பாதிப்பு என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவானது தான். நெஞ்சை இறுக்க பிடிப்பது போல் தோன்றும். சில சமயங்களில் வயிற்றில் பிடிப்பு போல இருக்கலாம்.

அஜீரணம் போல் இருக்கலாம். தலைவலி அல்லது தசைகள் பிடிப்பது போல் இருக்கலாம். ஆயினும் பெண்களின் ஒரு சுபாவம் எந்த ஒரு வலியினையும், அறிகுறியையும் ஏதோ சாதாரண ஒன்று போல் ஒதுக்கி விடுவர்.

இது பெரிய பாதிப்பினை தரலாம்.ஆகவே 40 வயதை கடந்த பெண்களே இருதய பாதிப்பின் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்.

* நெஞ்சை அழுத்தி பிடிக்கும் வலி
* இரண்டு அல்லது ஒரு தோளில் படரும் வலி
* கழுத்து, முதுகு, முகவாய் வலி
* மூச்சு திணறல்
* 70 சதவீத பெண்கள் இத்தகு பாதிப்பிற்கு பல வாரங்கள் முன்பாக மிகவும் சோர்ந்து இருப்பர்
* தலைவலி, மயக்கம்
* வாந்தி, அஜீரண உணர்வு
* இருமல், படபடப்பு உடனடி ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரை தேவை.

உடனடி ஆம்புலன்ஸ் உதவியோடு மருத்துவமனை செல்ல வேண்டும். இதனைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? உடற்பயிற்சி, முறையான உணவு பழக்கம், மருத்துவ ஆலோசனை இவை உங்கள் வாழ்வினை வளமாக்கும்.

3. 40வயதிற்கு மேல் எடை கூடிக் கொண்டே செல்கிறதா? உடலின் செயல்பாட்டு திறன் குறைவதாலும், பெண் ஹார்மோன்கள் குறைவதாலும் எடை கூடலாம். தைராய்டு ஹார்மோகன் குறைபாட்டினாலும் எடை கூடலாம்.

4. நான் இன்னும் கரு தரிப்பு தடை மாத்திரை சாப்பிட வேண்டுமா? முழு மாதவிடாய் நிறுத்தம் என ஊர்ஜிதம் செய்யப்படும் வரை கருத்தரிப்பு வாய்ப்புகள் நிச்சயம் உண்டு.

5. மாதவிடாய் நிறுத்தம் எப்படி அறிவது? மாதவிடாய் நிறுத்தத்திற்கு பல மாதங்கள் முன்பே முறையற்ற மாதவிலக்கு ஆரம்பிக்கும். அதன் வெளிப்பாடாய் பல அறிகுறிகள் இருக்கும். தொடர்ந்து ஒரு வருட காலம் மாதவிலக்கு ஏற்படவில்லை என்றாலே `மாதவிடாய்’ நிறுத்தம் என ஊர்ஜிதம் செய்யலாம்.