Home உறவு-காதல் ஆண்களே உஷார்! இந்த பொண்ணுங்களே இப்படி தான்…

ஆண்களே உஷார்! இந்த பொண்ணுங்களே இப்படி தான்…

32

captureஉலகிலேயே மிக வித்தியாசமான படைப்பு பெண் தான். பெண்கள் தாங்கள் என்ன செய்கிறோமோ அதைத்தவிர வேறு எதுவுமே சரியல்ல என்று முழுமையான நம்புகிறவர்கள். அதனாலேயே பல சமயங்களில் ஆண்கள் அவர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள்.

பெண்களில் பல வகையினர் உண்டு. ஆனால் எல்லா பெண்களுக்குமே சில ஒத்த குணங்கள் இருப்பது மிகுந்த ஆச்சரியமானதாகவே இருக்கிறது.

பொதுவாக எல்லா பெண்களுமே சில விஷயங்களில் ஒரே மாதிரியாகத் தான் நடந்து கொள்வார்கள். உலகில் எல்லா பெண்களும் ஒரே மாதிரியான குணங்களைக் கொண்டிருப்பார்கள். அவை என்னென்ன…?

நிச்சயம் எல்லா ஆண்களும் தங்கள் வீட்டிலுள்ள பெண்களிடம் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்திருப்பார்கள்…

பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யக் கூடாது. போதுமான அளவு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் சேமிப்பதிலும் முழுமையாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் ஏன் வீண் செலவு செய்கிறீர்கள் என்று கோபப்படுவார்கள். ஆனால் …

எவ்வளவு தான் சேமிப்பை நம்பினாலும் தங்களுக்குப் பிடித்த ஆடைகள் எவ்வளவு விலையுயர்ந்தாக இருந்தாலும் எப்படியாவது வாங்கி விடுவார்கள்.

எவ்வளவு விலையுயர்ந்த ஆடையாக இருந்தாலும் அப்படியே ஓரிரு முறை மட்டும் அணிந்துவிட்டு பொத்திப் பொத்தி பாதுகாப்பார்கள்.

பிடித்த மற்றும் புது ஆடையாக இல்லாமல் இருந்தாலும் பெண்கள் நேர்த்தியாகவும் அழகாகவும் ஆடை அணிவார்கள்.

எவ்வளவு தான் அழகாக ஆடைகள் அணிந்தாலும் திருப்தியடைவே மாட்டார்கள். அதை இப்படி செய்திருக்கலாம். இது நன்றாக இல்லை என்று புலம்புவார்கள். அதேசமயம்…

தான் திருப்தியடையாத விஷயமாக இருந்தாலும் ஆண்களின் பாராட்டைப் பெற வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

ஆண்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிற அவர்கள், ஆண்கள் பாராட்டும் போது, அந்த பாராட்டுதலை நம்பவே மாட்டார்கள். உண்மையாகவா? நிஜமாகவா? பொய் சொல்லாத… என சொன்னதையே வேறு வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இந்த அனுபவம் மனைவி, காதலியிடம் மட்டுமல்ல நம் வீட்டிலுள்ள அம்மா, தங்கை என எல்லா பெண்களிடம் நாம் பார்த்திருப்போம். அனுபவித்திருப்போம். இப்பவே கண்ண கட்டுதா?…

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்….