Home சூடான செய்திகள் மாதவிடாய் நாளிலும் உடலுறவில் ஈடுபட பெண்களுக்கு நவீன தயாரிப்பு கண்டுபிடிப்பு!

மாதவிடாய் நாளிலும் உடலுறவில் ஈடுபட பெண்களுக்கு நவீன தயாரிப்பு கண்டுபிடிப்பு!

16

பெண்களின் மாதவிடாய் காலத்திலும் இனி செக்ஸ் பண்ண நவீன தயாரிப்பு வந்துள்ளது.

செக்ஸ் என்பது அனைவரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம். ஆனால் இது சிலநேரங்களில் சங்கடத்தையும் தருவது வழக்கம். அதில் ஒரு விஷயம் தான், பெண்களின் மாதவிடாய் காலங்கள்.

அந்த மூன்று நாட்களும் செக்ஸ் செய்ய முடியாமல் தவிப்போர் பலர். அவர்களுக்காக புதிய தயாரிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. லாரன் ஸ்கூலெட் என்பவர் கண்டுபிடித்துள்ள பிளக்ஸ் என்ற இந்த தயாரிப்பை பெண்களின் உறுப்புக்குள் சுமார் 12 மணிநேரம் வரை வைத்துக் கொள்ளலாம்.

இது மாதவிடாய் காலத்தில் வரும் திரவத்தை வெளியே வரவிடாமல், தடுக்கும். அதனால் எவ்வித பிரச்சனைகள் இல்லாமல் வழக்கம் போல, செக்ஸ் வைத்துக்கொள்ள முடியும் என லாரன் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 1930ல் கண்டுபிடிக்கப்பட்ட தயாரிப்புக்கு சிறந்த மாற்றான தயாரிப்பை கண்டுபிடிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக இதை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.