Home பாலியல் மார்பகங்களுக்கு அடியில் கருமையாக உள்ளதா? இதோ சூப்பரான டிப்ஸ் !

மார்பகங்களுக்கு அடியில் கருமையாக உள்ளதா? இதோ சூப்பரான டிப்ஸ் !

13

நம் உடலில் அக்குள், கழுத்து, மார்பகம் இது போன்ற மறைவாக இருக்கும் குறிப்பிட்ட இடங்கள் மற்ற பகுதிகளை விட சற்று கருமையாக இருக்கும்.

நமது உடம்பின் மறைவான இடங்களில் உள்ள மடிப்புக்கள், உராய்வுகள், அதிகளவு வியர்வை வெளியேறுவது இது போன்ற பல காரணங்கள் மூலம் மறைவான இடங்கள் கருமை நிறத்தில் உள்ளது.

மறைவான இடங்களில் இருக்கும் கருமையை போக்குவது எப்படி?

நமது மார்பகங்களின் அடிப்பகுதியை நீரால் கழுவி, துணியால் துடைத்து விட்டு, சோள மாவை அப்பகுதியில் தடவ வேண்டும். இதே போல் தினமும் 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகரை சரிசம அளவில் நீரில் கலந்து, அதை காட்டன் பயன்படுத்தி, கருமை நிறம் உள்ள பகுதியில் தடவி, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர வேண்டும்.
பேக்கிங் சோடாவை நீரில் சேர்த்து பேஸ்ட் செய்து, மார்பகங்களுக்கு அடியில் தடவி, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் மார்பகங்களுக்கு அடியில் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, இறந்த செல்களும் அழிக்கப்படும்.
எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை அதிகமாக உள்ளது. எனவே எலுமிச்சை பழத்தின் சாற்றினை நீரில் கலந்து, கருமையாக இருக்கும் இடத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் ப்ளீச்சிங் தன்மைக் கொண்டது. எனவே பாலை காட்டனில் நனைத்து கருமையாக உள்ள இடத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங், நமது சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் தன்மைக் கொண்டது. எனவே உருளைக்கிழங்கை அரைத்து மார்பகங்களின் அடியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதேபோல் தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.