Home சமையல் குறிப்புகள் மராத்தி ஸ்பெஷல்: மட்டன் மசாலா குழம்பு

மராத்தி ஸ்பெஷல்: மட்டன் மசாலா குழம்பு

29

இன்றைய ஸ்பெஷல் மட்டன் மசாலா குழம்பு எவ்வாறு செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கிராம்பு – 4
எண்ணெய் – 1/4 கப்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – 3/4 கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 6
பட்டை – 1/2 இன்ச்
நறுக்கிய தக்காளி – 1
நறுக்கிய வெங்காயம் – 1
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/2 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
மட்டன் – 1/2 கிலோ
கொத்தமல்லி தழை – 5

செய்முறை

கிராம்பு, பட்டை, மிளகுத்தூள், தண்ணீர், மட்டன் சேர்த்து மட்டனை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி போட்டு நன்றாக மசியுமாறு வதக்கி விட்டு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறி விட்டு 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

அதனோடு, வேக வைத்த மட்டனை சேர்த்து நன்றாக மசாலாவுடன் கலந்து கிரேவி போல் கெட்டியாக வெந்ததும் அதன் மேலாக கொத்தமல்லி தழையைத் தூவி விட்டு பரிமாறலாம்.

மட்டன் மசாலா குழம்பு ரெடி!