Home உறவு-காதல் உங்கள் மனைவியிடம் நீங்கள் உப்பா? சர்க்கரையா?…

உங்கள் மனைவியிடம் நீங்கள் உப்பா? சர்க்கரையா?…

40

உங்களில் எத்தனை பேர் மனைவிக்கு சமைத்து கொடுத்து உள்ளீர்கள்? அவர்களது எதிர்பார்ப்பு என்ன? உங்கள் மனைவியின் அன்பை பெற என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

சமையல்

சமையல் என்றாலே பெண்களே தான் செய்ய வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலானோருக்கு உள்ளது. ஏன் ஆண்கள் பெண்களுக்கு சமைத்து கொடுக்கக் கூடாது.

வார இறுதி நாட்களில் தங்கள் மனைவிக்கு பிடித்த உணவை சமைத்து அன்பாக பறிமாறினால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர்.

வீட்டு வேலைகள்

என்னுள் பாதி என்று அழைக்கிறோம்..ஆனால் வீட்டு வேலைகளில் அவள் மட்டுமே முழுவதுமாக செய்கிறாள். அதை நாம் பலரும் கண்டுகொள்வதேயில்லை.

ஒரு நாள் நமக்காகவும் குடும்பத்துக்காகவும் உழைக்கும் அவளுடன் சுத்தப்படுத்துதல், பாத்திரம் துலக்குதல், துணி துவைப்பது போன்ற வீட்டுவேலைகளில் உதவலாம்.

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பிலும் தாய், தந்தை இருவரும் முக்கிய பங்காற்ற வேண்டும் .

பயணம்

நமக்கு பிடித்தவர்களுடன் நீண்ட தூரப் பயணம் வாழ்வை ருசிகரமாக்கும். உங்கள் மனைவியுடன் கைகோர்த்து நடந்தால் வாழ்வே பேரின்பமே..

செல்போனுக்கு தடை

கணவனும் மனைவியும் தனித்தனியே செல்போனில் உட்கார்ந்து நேரத்தை போக்குகின்றனர். இதனால் பிள்ளைகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அவர்கள் இருவருக்குமான உறவும் பாதிக்கபடுகிறது.

வீட்டுக் வந்த உடன் செல்போனை ஓரமாக வைத்துவிட்டு உறவுகளுக்காக நேரம் செலுத்துங்கள் வாழ்க்கை இன்பமானதாக இருக்கும் .

அன்றைய நாள் குறித்து பேசுங்கள்

அன்பு செல்லமே… இன்றைய நாள் எப்படி இருந்தது என்று பாசத்தோடு கேளுங்கள். அவர்கள் அப்போது கூறுவதை காதுகொடுத்து கேளுங்கள். அன்றைய நாளில் நடந்த சம்பவங்களை மகிழ்ச்சியுடன் விவரிப்பார்கள். நீங்களும் உங்கள் நாளை விவரித்துக்கூறுங்கள்.

அவ்வப்போது சின்ன சின்ன சர்பிரைஸாக பரிசு கொடுத்து மகிழ்வியுங்கள்.

இப்படி தினசரி உங்கள் நடவடிக்கை இருந்தால் மனைவிக்கு நீங்கள் சர்க்கரை தான்.